சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே புதிய நகைக் கடை திறப்பு விழாவுக்காக நடிகை சமந்தா வந்திருந்தார். அவரை பார்ப்பதற்காக ரசிகர் கூட்டம் அலைமோதியது. இதனால் சேலம் டூ பெங்களூரு சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அவர் இன்று காலை 10.30 மணிக்கு சேலம் புதிய பெருந்து நிலையம் அருகே உள்ள புதிய நகைக் கடை திறப்பு விழாவுக்காக வந்திருந்தார். அவர் வருவதை அறிந்து கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது. 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பிற்கு இருந்தும் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
11:00 மணிக்கு கடைக்கு வந்தவர். காரை விட்டு கீழே இறங்கியபோது சமந்தா! சமந்தா!! என்று கத்திய ரசிகர் கூட்டம் சமந்தாவை சூழ்ந்து கொண்டது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சமந்தா மீண்டும் காருக்குள்லேயே சென்று விட்டார்.
சிறிது நேரத்தில் காவல்துறையினர் ரசிகர்களை விலக்கி விட்ட பிறகு காரை விட்டு வெளியே வந்த சமந்தா, கடைக்குள் சென்று குத்து விளக்கு ஏற்றி வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.
சமந்தாவை பார்க்க கூடிய ரசிகர்கள் கூட்டத்தை பார்த்து பொதுமக்கள் பலரும் வியப்பு அடைந்தார்கள்.
Tags:
Cinema
,
கூட்டம்
,
சமந்தா
,
சினிமா
,
நகைக் கடை திறப்பு விழா
,
பொதுமக்கள்
,
ரசிகர்