விஜய் சேதுபதி அடுத்து தியாகராஜன் குமாரராஜா இயக்கும் படத்தில் நடிக்கிறார். சமந்தா ஜோடியாக நடிக்க பேச்சு நடக்கிறது. பஹத் பாசில், மிஷ்கின் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்தது. பெண் வேடத்தில் விஜய் சேதுபதி பங்கேற்று நடித்த காட்சி லீக் ஆனது. அவிழ்ந்த கூந்தலுடன் சேலை அணிந்து அவர் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன.
இதுவரை வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் விஜய் சேதுபதி முதன்முறையாக இந்த கெட்டப்பில் நடிப்பது இணைய தளத்தில் வைரலானது. பெண் வேடமா அல்லது திருநங்கை வேடத்தில் நடிக்கிறாரா என்பதுபற்றி தகவல் எதுவும் இல்லை. சமீபத்தில் ரெமோ படத்தில் சிவகார்த்திகேயன் பெண் வேடம் அணிந்து நடித்தார். அதைத் தொடர்ந்து விஜய் சேதுபதியும் பெண் கதாபாத்திரம் ஏற்றிருக்கிறார்.
Tags:
Cinema
,
சமந்தா
,
சினிமா
,
திருநங்கை
,
பெண் வேடம்
,
விஜய் சேதுபதி