சினிமா என்று வந்துவிட்டால் அப்பா, மகன், இவர் வயதானவர் என்பதெல்லாம் பார்க்க முடியாது.
சினிமாவில் நாயகி ஒரு படம் இளம் நடிகருடன் நடித்திருப்பார். பின் இன்னொரு படத்தில் அந்த நடிகரின் அப்பாவுடனேயும் அந்த நாயகி நடித்திருப்பார். இதுபோன்ற விஷயங்கள் சினிமாவில் சாதாரண விஷயம்.
அப்படி அப்பா, மகனுடன் ஜோடி சேர்ந்து நடித்த நடிகைகளின் விவரத்தை பார்ப்போம்.
சமந்தா
தெலுங்கில் பவன் கல்யாணுடன் ஜோடி சேர்ந்து நடித்த சமந்தா, பின் சில ஆண்டுகளில் அவரது அண்ணன் மகன் அல்லு அர்ஜுனுடன் சண் ஆஃப் சத்யமூர்த்தி படத்தில் நடித்திருப்பார்.
இலியானா
பவன் கல்யாணுடன் ஜல்ஸா படத்தில் நடித்த இவர் 4 ஆண்டுகள் கழித்து அல்லு அர்ஜுனுடன் ஜுலாயி படத்தில் நடித்தார்.
த்ரிஷா
2012 ல் ஜுனியர் என்டிஆருக்கு ஜோடியாக தம்மு படத்தில் நடித்தவர், போன வருடம் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக லயனில் நடித்தார்.
ஸ்ரேயா சரண்
பாலகிருஷ்ணாவுடன் இரண்டு படங்கள் நடித்த ஸ்ரேயா, இவரது சகோதரர் மகன் ஜுனியர் என்.டி.ஆருடனும் ஒரு படம் நடித்திருக்கிறார்.
காஜல் அகர்வால்
ஒரே ஆண்டில் பாலகிருஷ்ணா, ஜுனியர் என்.டி.ஆருடன் நடித்த பெருமை இவருக்கு உண்டு. ராம்சரணுடன் நடித்த இவர் தற்போது அவரது அப்பா சிரஞ்சீவியுடனும் கத்தி ரீமேக்கில் ஜோடி சேர்கிறார்.
நயன்தாரா
வெங்கடேஷுடன் லெக்ஷமி என்ற படத்தில் நடித்த நயன்தாரா இவரது சகோதரர் மகன் ராணாவுடனும் சேர்ந்து ஒரு படம் நடித்துள்ளார்.
தமன்னா
ராம்சரணுடன் ஒரு படம் நடித்த இவர் அவருடைய சித்தப்பா பவன் கல்யாணுடனும் ஒரு படம் நடித்துள்ளார்.
அனுஷ்கா ஷெட்டி
நாகர்ஜுனா குடும்பத்தில் அப்பா, மகனுடன் நடித்த இவர் வெங்கடேஷ், ராணாவுடனும் படங்கள் நடித்திருக்கிறார்.
ஸ்ருதிஹாசன்
பவன் கல்யாணுடன் நடித்திருந்த இவர் அல்லு அர்ஜுன், ராம் சரண் இருவருடனும் நடித்திருக்கிறார்.
ஸ்ரீதேவி
அப்பா, மகனுடன் படங்களில் நடிக்கும் டிரெண்டை உருவாக்கியது ஸ்ரீதேவி தான். நாகர்ஜுனாவின் அப்பாவுடன் நடித்த இவர் நாகர்ஜுனாவுடனும் ஒரு படம் நடித்திருக்கிறார்.
Tags:
Cinema
,
அப்பா
,
இலியானா
,
காஜல்
,
சமந்தா
,
சினிமா
,
த்ரிஷா
,
மகன்
,
ஸ்ரேயா