சமந்தாவுக்கும் நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவுக்கும் காதல் மலர்ந்து திருமணத்துக்கு தயாராகிறார்கள். நாக சைதன்யா தெலுங்கில் முன்னணி கதாநாயகனாக இருக்கிறார். இவர்கள் திருமணத்துக்கு இரு வீட்டு பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்து விட்டனர். இந்த வருடம் இறுதியில் நிச்சயதார்த்தத்தை முடித்து விட்டு அடுத்த வருடம் திருமணத்தை நடத்த முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாக சைதன்யா இந்து மதத்தையும், சமந்தா கிறிஸ்தவ மதத்தையும் சேர்ந்தவர்கள். எனவே இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி 2 தடவை திருமணத்தை நடத்த திட்டமிட்டு இருப்பதாக கூறப்பட்டது. சமந்தா சென்னையை சேர்ந்தவர் என்பதால் கிறிஸ்தவ முறையிலான திருமணம் சென்னையில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் சமந்தா தற்போது திடீரென்று இந்து மதத்துக்கு மாறிவிட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
அவர் மதம் மாறுவது போன்ற படங்கள் வெளி வந்துள்ளன. புரோகிதர்கள் முன்னிலையில் விசேஷ சடங்குகள் நடத்தப்பட்டு அவர் மதம் மாறியதாக கூறப்படுகிறது. சடங்கு முடிந்ததும் சமந்தா நெற்றியில் குங்கும பொட்டு வைத்துக்கொண்டார். சடங்கு நிகழ்ச்சியில் நாகார்ஜுனா, நாக சைதன்யா ஆகியோரும் கலந்து கொண்டனர். ஐதராபாத்தில் இந்த நிகழ்ச்சி நடந்துள்ளது. மதம் மாறியதன் மூலம் இந்து முறைப்படி மட்டுமே திருமணம் நடக்கும் என்று தெரிகிறது.
நாக சைதன்யா குடும்பத்தினரின் வற்புறுத்தல் பேரிலேயே அவர் மதம் மாறி இருப்பதாக கூறப்படுகிறது. சமந்தா நடித்து இந்த வருடம் தெறி, 24 ஆகிய படங்கள் வெளிவந்தன. தெலுங்கிலும் மூன்று படங்கள் வெளியானது. தற்போது புதிய படங்கள் எதிலும் அவர் ஒப்பந்தமாகவில்லை. திருமணத்துக்காக படங்களில் நடிப்பதை நிறுத்தி உள்ளார். திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன் என்று அவர் அறிவித்து உள்ளார்.
Tags:
Cinema
,
இந்து மதம்
,
சமந்தா
,
சினிமா
,
நாக சைதன்யா
,
நாகார்ஜுனா