ஒரு படம் எடுக்க ஆரம்பித்த பின்னர் தான், ஏதாவது காரணங்களுக்காக படத்தை முடிக்க முடியாமல் போகும். சில சமயம் மூன்று வருடங்கள் கூட ரிலீஸ் தள்ளிப்போகும். ஒரு படத்தில் நடிப்பதற்கே, வருடக்கணக்கில் இழுத்தடித்தார் தனுஷ். வடசென்னை படத்திற்காக, வெற்றிமாறனும் வேறு எந்த படமும் எடுக்காமல் மிகவும் பொறுமையாக இருந்தார்.
இந்நிலையில், இந்தப்படத்தில் தனுஷ் நடிபதற்கு ஒப்புக்கொண்டார். ஆனால், மீண்டும் வட சென்னை படத்தை வேகமாக முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. படத்தில் நாயகியாக நடிப்பதற்கு முதலில் சமந்தாவை கேட்டுள்ளார் தனுஷ். சமந்தா படம் ஆரமிக்க தாமதமானதால் கல்யாணம், காதுகுத்து என சாக்கு சொல்லி படத்தில் இருந்து கழன்றுவிட்டார். கல்யாணத்திற்கு பிறகு நீண்ட நாட்களாக தனுஷின் நட்பு வலைக்குள்ளேயே சுற்றி வந்த அமலாபாலை நடிக்க வைக்கலாம் என முடிவு செய்தார் தனுஷ்.
அமலாபால் மற்றும் இயக்குனர் விஜய்யின் விவாகரத்துக்கு காரணம் தனுஷ் என மீடியாக்களில் செய்திகள் வந்துகொண்டிருக்கிறது. இந்த நேரத்தில், தனுஷ் மீண்டும் அமலாபாலை நடிக்க வைத்தது மேலும் புகைச்சலைக்கிளப்பி உள்ளது.
வெளியில் மட்டும் புகையவில்லை, தனுஷ் வீட்டிற்குள்ளும் புகைய ஆரம்பித்துவிட்டது. அமெரிக்காவிலிருந்து வந்த உடன், வடசென்னை படத்திலிருந்து அமலாபாலை நீக்க வேண்டும் என தனுசுக்கு டார்ச்சர் கொடுக்கிறாராம் ஐஸ்வர்யா தனுஷ். தற்பொழுது அமலாபாலா? ஐஸ்வர்யாவா? இருவரையும் விட்டுக்கொடுக்க முடியாமல் தவிகின்றாராம் தனுஷ்.
விளையும் பயிரை முளையிலேயே கிள்ளிவிடலாம் என முடிவு செய்துவிட்டார் போல ஐஸ்வர்யா தனுஷ்!!!
Tags: