பிரேமம் படத்தின் மலர் கதாப்பாத்திரம் மூலம் இளைஞர்களின் மனதில் குடிபுகுந்த சாய்பல்லவியை தேடி பல வாய்ப்புகள் கோலிவுட் திரையுலகில் இருந்து வந்தது. அவற்றில் முக்கியமானது மணிரத்னம் இயக்கி வரும் 'காற்றி வெளியிடை' படம். இந்த படத்தில் முதலில் சாய்பல்லவி நடிப்பதாக இருந்தது. ஆனால் திடீரென மணிரத்னம், அதிதிராவ் ஹைத்தியை மாற்றினார்.
இந்நிலையில் மேலும் ஒரு பெரிய வாய்ப்பு சாய்பல்லவியை தேடி வந்ததாகவும், கால்ஷீட் பிரச்சனையால் அந்த வாய்ப்பு கைநழுவி போனதாகவும் கூறப்படுகிறது.
அதுதான் அஜித்தின் 'ஏகே 57' படம். அஜித்துக்கு ஜோடியாக நடிக்க சிறுத்தை சிவா, சாய்பல்லவியை அணுகியதாகவும், ஆனால் சிவா கேட்ட திகதிகளை சாய்பல்லவி தெலுங்கில் சேகர் கமூலா இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு மொத்தமாக ஒதுக்கியதால் இந்த படத்தையும் சாய்பல்லவி மிஸ் செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
மணிரத்னம், அஜித் இருவருடைய படங்களில் நடிப்பது ஒவ்வொரு நடிகையின் கனவாக இருந்து வரும் நிலையில் இரண்டு படங்களிலும் வந்த வாய்ப்பு சாய்பல்லவிக்கு கைநழுவி போய்விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:
Cinema
,
அஜித்
,
சாய்பல்லவி
,
சிவா
,
சினிமா
,
பிரேமம்
,
மணிரத்னம்