நடிகையை ரத்தம் வர அறைந்ததாக கமல் மீது பரபரப்பு புகார்!! - அதிர்ச்சியில் திரையுலகம்

11:36 PM |
உலக நாயகன் கமல் ஹாஸன் வேண்டும் என்றே நடிகை கார்த்திகாவை ஓங்கி அறைந்ததால் அவரது காதில் இருந்து ரத்தம் வந்தது என பிரபல மலையாள சினிமா விமர்சகர் பெல்லிசேரி தெரிவித்துள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாஸன், சரண்யா, ஜனகராஜ் உள்ளிட்டோர் நடித்த படம் நாயகன்.

அந்த படத்தில் கமல் ஹாஸனின் மகளாக மலையாள நடிகை கார்த்திகா நடித்திருந்தார். கார்த்திகா நாயகன் தவிர்த்து பூவிழி வாசலிலே படத்திலும் நடித்துள்ளார்.

நாயகன் படம் குறித்து பிரபல மலையாள சினிமா விமர்சகர் பெல்லிசேரி மலையாள வார இதழ் ஒன்றுக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு பேட்டியளித்தார்.

அந்த பேட்டியில் அவர் கமல் மீது குற்றம் சுமத்தியுள்ளார்  நாயகன் பட போட்டோ ஷூட்டிங்கின் போது  கமல் ஹாஸன் கார்த்திகாவின் தோளில் கை போட்டுள்ளார். இது பிடிக்காமல் அவர் கமலின் கையை தட்டியுள்ளார் என்கிறார் பெல்லிசேரி.

கார்த்திகா கையை தட்டிவிட்டும் கமல் மீண்டும் அவரது தோளில் கை போட்டார். இதனால் கடுப்பான கார்த்திகா மீண்டும் அவரது கையை தட்டிவிட்டு என்னை யாரும் தொட்டு நடிப்பது பிடிக்காது என்று முகத்தில் அடித்தது போன்று கமலிடம் தெரிவித்தார் என்று பெல்லிசேரி கூறியுள்ளார்.

படத்தில் ஒரு காட்சியில் கமல் கார்த்திகாவை கன்னத்தில் அறைய வேண்டும். கமல் போட்டோ ஷூட்டிங்கின் போது நடந்ததை மனதில் வைத்து கார்த்திகாவை ஓங்கி அறைந்தார்.

இதில் கார்த்திகாவின் காதில் இருந்து ரத்தம் வந்தது என பெல்லிசேரி தெரிவித்துள்ளார்.  கமல் ஹாஸனின் செயலை பார்த்து தான் கார்த்திகா இனி நான் தமிழ் படங்களில் நடிக்கவே மாட்டேன் என்று கூறியதுடன், அதன்படியே செய்தார் என்று பரபரப்பை கிளப்பியுள்ளார் பெல்லிசேரி.
 
மேலும் வாசிக்க…

இப்படி செய்துவிட்டாரே சாய்பல்லவி..!!

11:22 PM |
பிரேமம்  படத்தின் மலர் கதாப்பாத்திரம் மூலம் இளைஞர்களின் மனதில் குடிபுகுந்த சாய்பல்லவியை தேடி பல வாய்ப்புகள் கோலிவுட் திரையுலகில் இருந்து வந்தது. அவற்றில் முக்கியமானது மணிரத்னம் இயக்கி வரும் 'காற்றி வெளியிடை' படம். இந்த படத்தில் முதலில் சாய்பல்லவி நடிப்பதாக இருந்தது. ஆனால் திடீரென மணிரத்னம், அதிதிராவ் ஹைத்தியை மாற்றினார்.

இந்நிலையில் மேலும் ஒரு பெரிய வாய்ப்பு சாய்பல்லவியை தேடி வந்ததாகவும், கால்ஷீட் பிரச்சனையால் அந்த வாய்ப்பு கைநழுவி போனதாகவும் கூறப்படுகிறது.

அதுதான் அஜித்தின் 'ஏகே 57' படம். அஜித்துக்கு ஜோடியாக நடிக்க சிறுத்தை சிவா, சாய்பல்லவியை அணுகியதாகவும், ஆனால் சிவா கேட்ட திகதிகளை சாய்பல்லவி தெலுங்கில் சேகர் கமூலா இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு மொத்தமாக ஒதுக்கியதால் இந்த படத்தையும் சாய்பல்லவி மிஸ் செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

மணிரத்னம், அஜித் இருவருடைய படங்களில் நடிப்பது ஒவ்வொரு நடிகையின் கனவாக இருந்து வரும் நிலையில் இரண்டு படங்களிலும் வந்த வாய்ப்பு சாய்பல்லவிக்கு கைநழுவி போய்விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்க…

சாய் பல்லவி ரசிகர்களுக்கு ஓர் அதிர்ச்சி செய்தி..!!

1:19 AM |
ப்ரேமம் என்ற ஒரே படத்தின் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்தியா சினிமா ரசிகர்களையும் கவர்ந்தவர் சாய் பல்லவி. இவர் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மீண்டும் மலையாளத்தில் நடித்த kali படமும் செம்ம ஹிட்.

இதை தொடர்ந்து இவர் தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால், சமீபத்தில் வந்த தகவலின்படி இவர் இந்த படத்தில் நடிக்கவில்லையாம்.

ஏனெனில், இந்த கதாபாத்திரம் கொஞ்சம் வயது அதிகமாக இருப்பவர் நடித்தால் நன்றாக இருக்கும் என படக்குழு எண்ணியுள்ளது. இதனால், தமிழில் இந்த முறையும் சாய் பல்லவியை பார்க்க முடியாத ரசிகர்கள் வருத்தத்தில் ஆழ்ந்துள்ளனர்.
மேலும் வாசிக்க…

அஜித்தை பேட்டியெடுக்க வேண்டும் – டிடியின் விருப்பம்..!!

3:18 AM |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘காபி வித் டிடி’ நிகழ்ச்சியின் மூலம் பல திரை பிரபலங்களிடம் பேட்டி எடுத்தவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இதுவரை இளையராஜா, மணிரத்னம், ஏ.ஆர்.ரகுமான் போன்ற பல ஜாம்பவான்களை பேட்டி எடுத்திருந்தாலும் ‘தல’ அஜித்தை பேட்டி எடுக்க வேண்டும் என்பதுதான் இவரது விருப்பமாம்.

இதுவரை யாருக்கும் பேட்டி கொடுக்காத அஜித்தை பேட்டி காண வேண்டும் எனவும் அவர் பேட்டி கொடுக்காவிட்டால், அட்லீஸ்ட் அவரை பெர்சனலாக சந்தித்து பேச வேண்டும் எனவும் அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். அதேபோல் விஜய்யையும் அவர் பேட்டி காணவேண்டுமாம்.
மேலும் வாசிக்க…

ஓர் ஊரையே தத்தெடுத்து உதவிய சூர்யா, மணிரத்னம்..!!

10:26 PM |
இந்திய சினிமா அரங்கில் தமிழ் சினிமாவை பெருமை படுத்தியவர் மணிரத்னம். இவரின் படைப்புக்கள் அனைத்தும் ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்படுபவை.

இந்நிலையில் சென்னை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மணிரத்னம் தன்னால் முடிந்த உதவிகளை செய்து வந்தார்.தற்போது தன் மனைவி சுஹாசினியுடன் களத்தில் இறங்கி சென்னை கோட்டூர் புரத்தில் உள்ள, சூர்யா நகரை தத்தெடுத்து,

அங்கு இருக்கும் மக்களுக்கு என்ன தேவையோ, அவை அனைத்தையும் செய்து கொடுத்துள்ளார். அதே போல் நடிகர் சூர்யாவும், தன் அகரம் நிறுவனத்தின் கீழ் சென்னையில் ஒரு ஏரியாவை தத்தெடுத்து உதவி வருகிறார்.
மேலும் வாசிக்க…
2015 Thediko.com