சாய் பல்லவியின் விபரீத ஆசை அதிர்ச்சியில் திரையுலகம்..!!

10:51 PM |
பிரேமம் என்ற ஒரே ஒரு படம் மூலம் புகழின் உச்சிக்கே சென்றவர் மலர் (சாய் பல்லவி).

இவர் அண்மையில் ஒரு பேட்டியளித்துள்ளார்.

அதில் தமிழில் தனக்கு நடிகர் சூர்யா, அவரை மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளார்.

அவருடன் நடிப்பேனா என்று தெரியவில்லை, ஆனால் அவரை ஒருமுறையாவது சந்தித்து I Love You என்று சொல்ல விரும்புவதாக கூறியுள்ளார்.
மேலும் வாசிக்க…

இப்படி செய்துவிட்டாரே சாய்பல்லவி..!!

11:22 PM |
பிரேமம்  படத்தின் மலர் கதாப்பாத்திரம் மூலம் இளைஞர்களின் மனதில் குடிபுகுந்த சாய்பல்லவியை தேடி பல வாய்ப்புகள் கோலிவுட் திரையுலகில் இருந்து வந்தது. அவற்றில் முக்கியமானது மணிரத்னம் இயக்கி வரும் 'காற்றி வெளியிடை' படம். இந்த படத்தில் முதலில் சாய்பல்லவி நடிப்பதாக இருந்தது. ஆனால் திடீரென மணிரத்னம், அதிதிராவ் ஹைத்தியை மாற்றினார்.

இந்நிலையில் மேலும் ஒரு பெரிய வாய்ப்பு சாய்பல்லவியை தேடி வந்ததாகவும், கால்ஷீட் பிரச்சனையால் அந்த வாய்ப்பு கைநழுவி போனதாகவும் கூறப்படுகிறது.

அதுதான் அஜித்தின் 'ஏகே 57' படம். அஜித்துக்கு ஜோடியாக நடிக்க சிறுத்தை சிவா, சாய்பல்லவியை அணுகியதாகவும், ஆனால் சிவா கேட்ட திகதிகளை சாய்பல்லவி தெலுங்கில் சேகர் கமூலா இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு மொத்தமாக ஒதுக்கியதால் இந்த படத்தையும் சாய்பல்லவி மிஸ் செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

மணிரத்னம், அஜித் இருவருடைய படங்களில் நடிப்பது ஒவ்வொரு நடிகையின் கனவாக இருந்து வரும் நிலையில் இரண்டு படங்களிலும் வந்த வாய்ப்பு சாய்பல்லவிக்கு கைநழுவி போய்விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்க…

அடடே! மலரா இது? சாய் பல்லவி ஷாக்கிங் டான்ஸ்! (வீடியோ இணைப்பு)

12:04 AM |

பிரேமம் படத்தின் மூலம் மலர் டீச்சராக மலையாளம் மட்டுமின்றி தமிழ் தெலுங்கு என பல மொழி ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்தார்  சாய் பல்லவி. தற்சமயம் சாய் பல்லவி துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்த கலி பாராட்டுகளை பெற்று வரும் நிலையில் மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தியுடன் தமிழ் படமொன்றிலும் அறிமுகமாகவிருக்கிறார். சாய் பல்லவி நல்ல டான்சர் என்பது தெரியும் ஆனால் சல்சா நடனத்திலும் கை தேர்ந்தவர் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? இதோ சாய் பல்லவி சிவப்பு நிற ஹாட் உடையில் கலக்கல் ரொமாண்டிக் நடனம்..

 

மேலும் வாசிக்க…

ரித்திகாசிங்கின் அடுத்த அதகளம் ஆரம்பம்..!!

3:04 AM |
விஜய்சேதுபதி மற்றும் பிரேமம் நாயகி மடோனா செபாஸ்டியன் நடிப்பில் நலன்குமாரசாமி இயக்கத்தில் “காதலும் கடந்துபோகும்” படம் நாளை வெளியாகவிருக்கிறது. இன்றே அடுத்த படத்தைத் தொடங்கிவிட்டார் விஜய்சேதுபதி.

காக்காமுட்டை மணிகண்டன் இயக்கத்தில் விஜய்சேதுபதிக்கு நாயகியாக நடிக்கவிருப்பவர் இறுதிச்சுற்றில் ரசிகர்களை நாக் அவுட் செய்த ரித்திகா சிங் தான். இப்படத்திற்கு “ஆண்டவன் கட்டளை” என்று பெயரிட்டுள்ளனர். இப்படத்திற்கான பூஜை மற்றும் தொடக்கவிழா இன்று தொடங்கியது.

இப்படத்தை கோபுரம் பிலிம்ஸ் அன்புச்செழியன் தயாரிக்கிறார். இப்படத்தின் ஸ்பெஷல் என்னவென்றால், “படத்தில் பாடல்களே இல்லையென்றும் பின்னணி இசை மட்டுமே என்றும் படக்குழு சார்பில் தெரிவித்திருக்கிறார்கள்”.

கடந்த வருடம் வெளியான காக்காமுட்டை வசூல் ரீதியிலும், விமர்சன ரீதியிலும் பாஸ்மார்க் வாங்கியது. இவரின் இயக்கத்தில் விமல் நடித்த குற்றமே தண்டனை விரைவில் திரைக்கு வரவிருக்கும் நிலையில் இயக்குநர் மணிகண்டனின் மூன்றாவது படம் தான் ஆண்டவன் கட்டளை.
மேலும் வாசிக்க…

Whats app இல் பரவும் பிரேமம் சாய் பல்லவியின் ஆபாச நடனம்..!!

1:07 AM |
மேலும் வாசிக்க…

போலீசார் பற்றி உயர்வாக நடித்ததற்காக நடிகர் நிவீன்பாலியை நேரில் அழைத்து பாராட்டிய மந்திரி..!!

12:23 AM |
மலையாள பட உலகின் இளம் நடிகர் நிவீன்பாலி. ‘பிரேமம்’ படம் மூலம் பிரபலமானார். இவர் தமிழில் ‘நேரம்’ என்ற படத்திலும் நடித்துள்ளார்.

சமீபத்தில் மலையாளத்தில் போலீஸ் வேடத்தில் ‘ஆக்ஷன் ஹீரோ பிஜு’ என்ற படத்தில் அதிரடி வேடத்தில் நிவீன்பாலி தோன்றினார். போலீசாரையும், அவர்களின் பணி பற்றியும் பல காட்சிகள் உயர்வாக எடுக்கப்பட்டன. இது கேரள போலீசாருக்கு மகிழ்ச்சியை கொடுத்தது.

வழக்கமாக நையாண்டி செய்தும், கிண்டல் அடித்தும் எடுக்கப்படும் போலீசார் பற்றிய காட்சிகள் இல்லாமல் அவர்களை உயர்வாக சித்தரித்த நிவீன்பாலியின் நடிப்பு போலீசாரை மெய்சிலிர்க்க வைத்தது. அவருக்கு பாராட்டு தெரிவிக்க முடிவு செய்த அவர்கள் இந்த தகவலை கேரள உள்துறை மந்திரியும், போலீஸ் இலாகாவை கவனிக்கும் ரமேஷ்சென்னிதலாவிடம் தெரிவித்தனர். உடனே அவர் நடிகர் நிவீன்பாலியை தொடர்பு கொண்டார்.

தலைமை செயலகம் வரும்படி அழைத்தார். அங்கு நிவீன்பாலியை பாராட்டி பரிசுகள் வழங்கினார்.

போலீஸ் இலாகா அலுவலகத்திற்கு நிவீன்பாலி வந்த தகவல் அறிந்த ஊழியர்கள் அவரை பார்க்க திரண்டனர். அவர்களிடம் நிவீன்பாலி இயல்பாக பேசி உரையாடினார். ஊழியர்கள் அவருடன் ‘செல்பி’ எடுத்துக்கொண்டனர்.

இதுபற்றி நிவீன்பாலி கூறியதாவது:–

போலீசார் கடினமான பணியை செய்து வருகிறார்கள். அவர்களை விமர்சிக்க கூடாது. குறிப்பாக கேரள போலீசார் தங்களின் கடமையை சரிவர செய்கிறார்கள். போலீசார் 24 மணி நேரமும் பணி செய்ய வேண்டும். பொதுமக்களுக்கு சேவை செய்வது, அவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்குவதுபோன்ற வேலைகளை அவர்கள் செய்து வருகிறார்கள். தொடர்ந்து பணி செய்யும் அவர்களை எப்போதும் விமர்சிப்பது சரி இல்லை. எனவேதான் நாங்கள் இந்த படத்தில் போலீசாரை பாராட்டியும், அவர்களை உயர்வாகவும் சித்தரித்தோம். இதற்காக என்னை அரசும், போலீஸ் உயர் அதிகாரிகளும் பாராட்டியது மகிழ்ச்சியை தருகிறது. இந்த வேடத்தில் நடித்ததை நான் உயர்வாக கருதுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் வாசிக்க…

மடோனா ஒரு நடிப்பு ராட்சஸி! - விஜயசேதுபதி..!!

12:57 AM |
சமீபகாலமாக ஒரு ஹீரோவை இன்னொரு ஹீரோ மனம் திறந்து பாராட்டும் ஆரோக்கியமான நிலை உருவாகியிருக்கிறது. அதோடு விஜயசேதுபதி போன்ற நடிகர்கள் தங்களுடன் நடிக்கும் கதாநாயகிகள் சிறப்பாக நடித்தாலும் அவர்களை பாராட்டத் தவறுவதில்லை.

அந்த வகையில், தன்னுடன் நடிக்கும் கதாநாயகிகள சிறப்பாக நடித்தால் அதை மேடைகளில் மனம் திறந்து பாராட்டுவதிலும் விஜயசேதுபதிக்கு நிகர் யாரும் இருக்க முடியாது. தன்னுடன் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், ரம்மி, மெல்லிசை படங்களில் நடித்த காயத்ரியின் நடிப்பை இப்போதுவரை புகழ்ந்துபேசி வருகிறார் விஜய சேதுபதி. முதல் படத்தில் இருந்தே காயத்ரியிடம் ரொம்ப ஜாக்கிரதையாக நடித்து வருகிறேன். நான் கொஞ்சம் அசந்தால் கூட நடிப்பால் என்னை அவர் சாப்பிட்டு விடுவார் அப்படியொரு நடிகை என்று காயத்ரியைப்பற்றி கூறி வருகிறார்.

அவரைத் தொடர்ந்து பீட்சா, சேதுபதி படங்களில் தன்னுடன் நடித்துள்ள ரம்யா நம்பீசனையும், இவர் நடிப்பதே தெரியாது. அவ்வளவு இயல்பாக நடிப்பார். அவருடன் நடிக்கும்போது நமக்கும் நடித்த டயர்டு தெரியாது. வீட்டில் ஜாலியாக பேசிக்கொண்டிருப்பது போலவே இருக்கும். அப்படியொரு நேச்சுரலான நடிகை என்று கூறி வருபவர், இப்போது காதலும் கடந்து போகும் படத்தில் தன்னுடன் நடித்துள்ள பிரேமம் மடோனாவின் நடிப்பைப்பற்றியும் பெருமையாக பேசி வருகிறார்.

அதாவது, பிரேமம் படத்தில் அவர் அருமையாக நடித்திருந்தார். ஆனால் இந்த படத்தில் அதையும் தாண்டி அற்புதமாக நடித்திருக்கிறார். சில காட்சிகளில் அவருடன் இணைந்து நடித்தபோது அவரது அசத்தலான பர்பாமென்ஸைப் பார்த்து மிரண்டு போயிருக்கிறேன். அப்படியொரு நடிப்பு ராட்சஸி. இதுபோன்ற சிறந்த நடிகைகளுடன் நடிப்பதால் படத்துக்குப்படம் என்னை நானும் மெருகேற்றிக் கொள்ள முடிகிறது என்கிறார் விஜயசேதுபதி.
மேலும் வாசிக்க…

Top Hot


2015 Thediko.com