24 விமர்சனம் - 24 Review

1:15 AM |
காலத்தை கடந்து செல்லும் ஐன்ஸ்டினின் Time Machine கதைக்களத்தை கொண்டு ஹாலிவுட்டில் பல படங்கள் வந்துள்ளது. அந்தவரிசையில் தமிழில் இயக்குனர் விக்ரம் கே குமார் இயக்கத்தில் சூர்யா முதன் முறையாக ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்திருக்கும் படம்தான் 24.

கதைக்களம்

1990 இல் இரட்டை சகோதர்களான தம்பி சூர்யா(சேதுராமன்) தனது ஆராய்ச்சியான Project24 வாட்சை கண்டுபிடிக்கிறார். அதை அண்ணன் சூர்யா(ஆத்ரேயா) தனக்கு சொந்தமாக்க முயற்சி செய்ய தனது தம்பி சூர்யாவையும்,

அவருடய மனைவி நித்யா மேனனயும் கொலை செய்கிறார். ஒரு கட்டத்தில் ஒரு விபத்தில் தம்பி சூர்யாவின் குழந்தையையும், அவர் அடைய நினைத்த project24 யும் தவறவிட்டு கோமாவுக்கு செல்கிறார் ஆத்ரேயா.

பின்னர் 26 வருடம் கழித்து நிகழ்காலத்தில் அவர் அடைய நினைத்த project24ஐ அடைந்தாரா? மகன் சூர்யா பெரியப்பாவை பழி வாங்கினாரா? என்பதை பல சுவராஷ்யங்களுடன் கொடுத்திருக்கிறார் இயக்குனர் விக்ரம்.கே.குமார்.

இரண்டு கதாபாத்திரத்தில் நிறைய நடித்திருந்தாலும் சூர்யா மூன்று கதாபாத்திரத்தில் நடிப்பது இதுவே முதன்முறை குறிப்பாக வில்லனாக வரும் ஆத்ரேயா கதாபாத்திரத்தில்

ஆங்காங்கே சற்று பயத்தை ஏற்படுத்துகிறார். இளமை காலத்தில் வரும் போதும் சரி வயதான காலத்தில் வீல் சேரில் வரும் போதும் தனது கதாபாத்திருத்திற்கு பக்காவாக பொருந்தியிருக்கிறார்.

சமந்தாவிற்கும், நித்யா மேனனுக்கும் சொல்லும் அளவிற்கு கதாபாத்திரத்திரம் இல்லையென்றாலும் தங்களுடைய பங்கை சரியாக செய்துள்ளனர்.
குறிப்பாக சமந்தா அழகு பதுமையாக காட்சியளிக்கிறார்.

வேல் படத்திற்கு பிறகு சரண்யா பொன்வண்ணன் அம்மாவாக இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்திருக்கிறார்.

ஒரு கலகலப்பான அம்மாவாகவும் சரி, சூர்யா தன்னுடைய மகன் இல்லை என்பதை சொல்லும் போதும் உணர்வு பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் சரண்யா பொன்வண்ணன்.

சத்யன், அப்புகுட்டி, சார்லி இவர்கள் படத்தில் அவ்வப்போது வந்து சென்றாலும் தங்களுடைய பங்குக்கு கலகலப்பூட்டுகின்றனர். குறிப்பாக அஜய்(மித்ரன்) ஆத்ரேயாவுடன் வரும் போது அவரும் சேர்ந்து மிரட்டுகிறார்.

யாவரும் நலம், மனம் படத்திற்கு பிறகு இயக்குனர் விக்ரம்குமாருக்கு இதுதான் அடுத்த படம் என்பதால் பல நாட்கள் கதையை யோசித்து எடுத்துள்ளார் ஏ.ஆர். ரஹுமானின் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு இன்னும் ஒரு பலத்தை சேர்த்திருக்கிறது. காலம் என் காதலி, நான் உன் அருகினிலே பாடல்கள் மனதில் தங்கி
விடுகின்றன. திருநாவுக்கரசின் ஒளிப்பதிவில் காட்சிகளை தத்ரூபமாக காட்டியிருக்கிறார்.

க்ளாப்ஸ்

சூர்யாவின் ஆத்ரேயா கதாபாத்திரம் இன்னும் நிறைய ரசிகர்ளை சூர்யாவிற்கு கொடுக்கும் படத்தின் இரண்டாம் பாதியில் வரும் டுவிஸ்ட்கள் ஆர்வத்தை தூண்டுகிறது.
ஆய்வு கூடம் 1990களுக்கு ஏற்றார் போல் தத்ரூபமாக இருக்கிறது.

பல்ப்ஸ்

படத்தின் நீளம் அதிகமாக இருக்கிறது. அதை சற்று குறைத்திருக்கலாம். படத்தின் இரண்டாம் பாதியில் கதை நன்றாக செல்லும் நேரத்தில் வரும் காதல் காட்சிகள் படத்தின் ஓட்டத்தை குறைக்கிறது.

மொத்தத்தில் 24 இந்த கோடை காலத்திற்கு ஏற்ற படம்.. விக்ரம் குமார்-சூர்யாவின் புது விதமான முயற்சிக்கு குடும்பத்தோடு சென்று பார்க்கலாம்

ரேட்டிங்: 3.25/5
மேலும் வாசிக்க…

ஜித்தன் 2 திரை விமர்சனம் – Jithan 2 Movie Review

5:15 AM |
ஏறக்குறைய பத்து ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த ஜித்தனின் பகுதி இரண்டாக., ஆர் .பி.எம்.சினிமாஸ் ராகுல் தயாரித்து வழங்கி, அவரே இயக்கியும் இருக்கும் திரைப்படம் தான் ‘ஜித்தன் – 2’.

‘ஜித்தன் ‘படத்தின் க்ளைமாக்ஸில் இறந்து போன நாயகர் ரமேஷ், இதில் உயிருடன் வருகிறார். சற்றே, இன்னசென்டாக காட்சியளிக்கும் சூர்யா எனும் பெயருடைய அவர், இறக்கும் தருவாயில் தன் அப்பா சொன்னபடி, சொந்தமாக ஒரு வீடு வாங்குகிறார்.

கொடைக்கானல் பகுதியில் இருக்கும் எட்டாம் எண் உடைய அந்த வீடு ஒரு பேய் பங்களா. அந்த வீட்டிலிருக்கும் பேய், ரமேஷையும், ரமேஷ் பேய் ஓட்ட கூட்டி வரும் ப்ரண்ட்ஸ், போலீஸ், பெண் மந்திரவாதி உள்ளிட்ட எல்லோரையும் படுத்தும் பாடுதான் ஜித்தன் – 2 படம் மொத்தமும்!

ரமேஷ் – சூர்யாவாக செமயாய் பயந்து பயங்காட்டியிருக்கிறார். நடிப்பு விஷயத்தில் ‘ஜித்தன்’ ரமேஷ், ஜித்தன் என்பதை மீண்டும் நிருபித்திருப்பதற்காக பாராட்டலாம்.

பேயாக சிருஷ்டி டாங்கே, மெகாலி, மலையாளபெண் மந்திரவாதி, கருணாஸ், மயில்சாமி, அலட்டல் ஆந்திரா ரவுடியோகி பாபு, சோனா.. ஜார்ஜ், லொள்ளு சபா சுவாமிநாதன், நெல் லை சிவா, வேல்முருகன், ரோபோ சங்கர் உள்ளிட்டோர் இயக்குனர் சொன்னதை செய்திருக்கின்றனர்.

‘சின்னகுட்டி நாத்தனா சிம் கார்டை மாத்தினா….’ பாடல் ஸ்ரீகாந்த் தேவா இசையில் செம குத்து. ரீ – ரெக்கார்டிங்கும் பேய் படங்களுக்கே உரிய செம மிரட்டல்! S.K.மிட்செலின் ஒளிப்பதிவும் அப்படியே! படத்தொகுப்பாளர் மாருதி க்ரீஷின் கத்தரி, படத்தில் வரும் பேயை பார்த்து மிரண்டு பல இடங்களில் வேலை செய்ய, கத்தரிக்க மறந்திருப்பது பலவீனம்!

மற்றபடி, வின்சென்ட் செல்வாவின் கதை, திரைக்கதை, வசனத்தில் ராகுலின் இயக்கத்தில் முன்பாதி ஜித்தன் – 2 லாஜிக் இல்லாமல் பயமுறுத்தி இருந்தாலும் பின்பாதி படம் பரவசம்!

லாஜிக் பார்க்க மறந்து போனோ மென்றால், பேயின் மேஜிக் பார்த்து மிரண்டு விட்டு வரலாம்!

மொத்ததில், ”ஜித்தன் – 2′ – ‘மிரட்டும்பேய் சத்தம் டூ ரசிகன்!”
மேலும் வாசிக்க…

நவம்பர் 27இல் ‘ரஜினி முருகன்’ ரிலீஸ்!

5:08 AM |
திருப்பதி பிரதர்ஸ் தயாரித்து பொன்.ராம் இயக்கி சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரண், சமுத்திரக்கனி, சூரி ஆகியோர் நடித்த படம் ’ரஜினி முருகன்’. படம் வெளியாக தயாராக இருந்தும் ஈராஸ், திருப்பதி பிரதர்ஸ் தங்களின் கடனை திருப்பி தந்தபிறகே படத்தை வெளியிடமுடியும் என முட்டுகட்டைபோட்டது. படத்தை வெளியிட வேந்தர் மூவீஸ் பலமுறை முயற்சி செய்தும் அது தோல்வியிலேயே முடிந்தது.

இந்நிலையில் திருப்பதி பிரதர்ஸ், ஈராஸ் நிறுவனத்திற்கு கொடுக்கவேண்டிய ஒரு பெரும் தொகையை கொடுத்துவிட்டதாகவும், படம் வெளியிட ஈராஸ் நிறுவனம் ஒப்புகொண்டதாகவும் தெரிகிறது.

இதை தொடர்ந்து படத்தின் வெளியீட்டு வேலையில் இறங்கியுள்ளதாம் படக்குழு. வேதாளம் படத்தை தொடர்ந்து வரும் நவம்பர் மாதம் 27 ஆம் தேதி படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனராம்.

இதற்கான அதிகார பூர்வ செய்தி விரைவில் வெளிவரும் என்றும் தெரிகிறது.

Tags: ரஜினி முருகன் , ரஜினி முருகன் விமர்சனம் , ரஜினி முருகன் ரிலீஸ் தேதி , Rajini Murugan Review , Rajini Murugan Movie Online , Rajini Murugan Movie Release Date , Rajini Murugan Movie Download , Rajini Murugan Movie Online TamilGun , ரஜினி முருகன் திரை விமர்சனம் , Rajini Murugan Movie
மேலும் வாசிக்க…

பாகுபலி 2ம் பாகம் எப்படி இருக்கும்?

7:23 AM |
பாகுபலி படத்தை விட பாகுபலி 2 படத்தில் பிரபாஸ் தனது உடல் எடையை இன்னும் அதிகரிக்க இருக்கிறார், என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

பாகுபலி முதல் படத்தின் போது 62 கிலோவாக இருந்த தனது உடல் எடையை 20 கிலோ அதிகரித்து, 82 கிலோ உடல் எடையுடன் ஆஜானுபாகுவான தோற்றத்தில் நடித்து இருந்தார் பிரபாஸ். தற்போது பாகுபலி 2 படத்திற்காக இன்னும் 18 கிலோ எடையை அதிகரித்து சுமார் 100 கிலோ தோற்றத்துடன் பிரபாஸ் நடிக்க இருக்கிறார் என்று டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாகுபலி

ராஜமௌலியின் பாகுபலி படத்திற்காக சுமார் 3 ஆண்டுகள் கால்ஷீட் கொடுத்து நடித்து இருந்தார் பிரபாஸ். மேலும் இந்தப் படத்தில் நடிப்பதற்காக 1.5 கோடி செலவில் உடற்பயிற்சிக் கருவிகளை வாங்கி தனது வீட்டிலேயே உடற்பயிற்சி செய்து, உடல் எடையை 20கிலோ அதிகரித்து இருந்தார்.

பாகுபலி 2

பாகுபலி முதல் பாகம் மாபெரும் வெற்றி அடைந்ததைத் தொடர்ந்து பாகுபலி 2 ம் பாகத்திற்கு உலகளவில் அதிகமான எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. எனவே முதல் பாகத்தை விடவும் இந்தப் பாகத்தை மிகவும் பிரமாண்டமாக எடுக்கவிருக்கிறார் ராஜமௌலி.

ஆஜானுபாகுவான

பாகுபலி 2 ம் பாகத்தில் தோள்கள் மற்றும் மார்புப் பகுதியை அதிகரித்து கம்பீரமான தோற்றத்துடன் அமரேந்திர பாகுபலியாய் மாறவிருக்கிறார் பிரபாஸ். இந்தப் படத்தில் 100 கிலோ உடல் எடையுடன் பிரபாஸ் தோன்றவிருக்கிறார். இதற்காக மீண்டும் உடல் எடையை அதிகரிக்கும் முயற்சியில் பிரபாஸ் இறங்கியிருக்கிறார்.

முதல் பாகத்தில்

முதல் பாகத்தில் நடித்த ராணா டகுபதி, அனுஷ்கா ஷெட்டி, தமன்னா மற்றும் சத்யராஜ் ஆகியோர் இந்தப் பாகத்தில் முக்கியமான பாத்திரங்களில் நடிக்கிறார்கள். முதல் பாகத்தை விடவும் அதிகமான பொருட்செலவில் இந்தப் படத்தை உருவாக்கி வருகிறார் இயக்குநர் ராஜமௌலி. பாகுபலி 2 எப்போ வரும்…
மேலும் வாசிக்க…
2015 Thediko.com