அச்சம் என்பது மடமையடா - திரைவிமர்சனம்

12:12 AM |
சிம்பு-கௌதம் மேனன் கூட்டணி என்றாலே ஒருவித மேஜிக் கிரியேட் ஆகும். அப்படி ஒரு மேஜிக் தான் விண்ணைத்தாண்டி வருவாயா. அதன் பிறகு மீண்டும் சிம்பு-கௌதம்-ரகுமான் என கூட்டணி அமைத்த படம் தான் அச்சம் என்பது மடமையடா.

ஆனால், இந்த படம் வருவதற்கு பல தடைகளை கடந்துவிட்டது, கிட்டத்தட்ட மூன்று வருடத்திற்கு முன் தொடங்கிய படம். இத்தனை வருடம் கழித்து வரும் இந்த அச்சம் என்பது மடமையடா மேஜிக்கை கிரியேட் செய்ததா? பார்ப்போம்.

என்னா மேட்டரு..?

சிம்பு படித்து முடித்துவிட்டு வேலையில்லாமல் நண்பர்களுடன் ஊர் சுற்றி வருகிறார். கிட்டத்தட்ட விண்ணைத்தாண்டி வருவாயா கார்த்திக் போல்.

சிம்பு தங்கையின் தோழியாக மஞ்சிமா, சிம்புவின் வீட்டிலேயே தங்கி படிக்கிறார், பிறகு சொல்லவா வேண்டும்? காதல், அரட்டை என ஜாலியாக செல்கிறது.

பிறகு சிம்பு ஒரு ரோட் ட்ரிப் செல்ல, அவருடன் மஞ்சிமாவும் செல்கிறார். ஜாலியாக இவர்கள் ட்ரிப் போக ஒரு லாரி இவர்கள் மீது மோத, சிம்புவின் வாழ்க்கையே தலைகீழாகிறது. பிறகு என்ன நடந்தது என்பதை சுவாரசியமாக காட்டியிருக்கிறார் கௌதம் மேனன்.

படம் எப்படி இருக்குது..?

சிம்பு இஸ் ரியல் கம்பேக் என்று சொல்ல வேண்டும், ஆரம்பத்தில் விடிவி கார்த்திக் போல் கையை ஆட்டுவது, தலையை ஆட்டுவது என இருந்தாலும், பொறுப்பு என்று வந்தவுடன் அவரிடம் வரும் முதிர்ச்சி நடிப்பிலும் நன்றாக தெரிகிறது. இதே மாதிரி படங்களை தேர்ந்தெடுத்து நடிங்க சிம்பு என்று சொல்ல தோன்றுகின்றது.

மஞ்சிமா தமிழுக்கு புதுவரவு, அவரை வைத்து தான் கதையே நகர்கிறது, அதை அவரும் உணர்ந்து நடித்துள்ளார். இதை தவிர நம்மை மிகவும் கவருவது சதீஷ், மொட்டை போலிஸ் ஒருவர்.

கௌதம் படம் என்றாலே காதல், பிறகு ஆக்‌ஷன் என்பது தெரியும். ஆனால், நமக்கு ஆக்‌ஷன் என்ற ஐடியாவே இல்லாத போது நம்மை நோக்கி ஒரு குண்டு வந்தால் என்ன செய்வோம்? என்பதை இரண்டாம் பாதியில் பதட்ட பட வைத்துள்ளார். கொஞ்சம் அவருடைய கமர்ஷியல் எல்லையை மீறியுள்ளார். குறிப்பாக சிம்புவின் பெயரை கிளைமேக்ஸில் சொல்லும் காட்சி தியேட்டரே அதிர்கிறது.

சட்டை காலருக்கும், முடிக்கும் இடையில என்னமோ பண்ணுதுன்ற காதல் வசனமாக இருந்தாலும் சரி, லைஃபில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் அதுக்கு நம்ம ரெடியா இருக்கோமான்னு தான் கேள்வி என்ற உணர்ச்சிப்பூர்வமான வசனமும் சரி கௌதம் சூப்பர்.

படத்தின் இரண்டாவது ஹீரோ ஏ.ஆர். ரகுமான். பாடல்களிலும் சரி, பின்னணியிலும் சரி செம்ம ஸ்கோர் செய்துவிட்டார். ஒளிப்பதிவு நாமே ஒரு ட்ரிப் சென்ற அனுபவம்.

விசில்

படத்தின் இரண்டாம் பாதி, விறுவிறுப்பாக செல்கின்றது.

சிம்பு-மஞ்சிமா காதல் காட்சிகள்.

கௌதம் படத்தில் இதுவரை இல்லாத கமர்ஷியல் அம்சம், குறிப்பாக கிளைமேக்ஸ்

முதல் பாதியிலேயே அனைத்து பாடல்களும் வருவது ஒரு தரப்பு ஆடியன்ஸிற்கு சலிப்பை ஏற்படுத்தலாம், மேலும், சிம்பு கால்ஷிட் பிரச்சனையா தெரியவில்லை, பர்ஸ்ட் ஆபில் உடல்வாகு மாறி மாறி வருகின்றது.

சில லாஜிக் மீறல்கள், வழியில் பார்த்தவுடன் சாவி இருக்கா, இல்லையா என்று தெரியவில்லை பைக், கால் டாக்ஸி என சிம்பு எடுத்து ஓட்ட ஆரம்பித்து விடுகிறார்.

மொத்தத்தில்  கௌதம் மேனன் ரசிகர்களையும் தாண்டி, மேலும் சிலரையும் இந்த ட்ரிப் ரசிக்க வைக்கும்.
மேலும் வாசிக்க…

கொடி திரைவிமர்சனம் - Kodi Review

10:31 PM |
இன்றைய அரசியல்வாதியின் கதையை கமர்ஷியலாக கூறியிருக்கும் படம் தான் இந்த கொடி.

கதை களம் :

வாய் பேச முடியாத ஊமையாக வருகிறார் கருணாஸ். அவருக்கு அரசியலில் சாதிக்கவேண்டும் என்ற பெரிய ஆசை உண்டு. இந்த நிலமையில் இவருக்கு இரட்டை குழந்தை பிறக்கிறது.

ஒரு கட்டத்தில் கட்சிக்காக கருணாஸ் தீ குளித்து இறந்து விடுகிறார். இதை தொடர்ந்து ஒரு பையன் அரசியல்வாதியாக ஆகிறார். அவர் தான் கொடி. மற்றொரு பையன் ஆசிரியர் ஆகிறார்.

அரசியல்வாதியாக இருக்கும் தனுஷும் எதிர்க்கட்சி அரசியலில் இருக்கும் த்ரிஷாவும் காதலிக்கின்றனர். ஆசிரியர் தனுஷ் அனுபமாவை காதலிக்கிறார்.

தனது அண்ணன் மூலமாக தான் காதலிக்கும் அனுப்புமாவிற்கு உதவுகிறார் தனுஷ். அங்கிருந்து பிரச்னை தொடங்குகிறது. இதை தொடர்ந்து தனுஷ் – த்ரிஷா காதல் என்ன ஆனது ? அரசியலில் இவர்கள் நிலைமை என்ன ? தம்பி தனுஷ் உதவிய அனுப்புமாவின் பிரச்சனை என்ன ஆனது ? என்பது மீதி கதை.

படத்தில் நடித்தவர்கள் :

தனுஷ் படத்தின் பெரிய பலம். இரண்டு கதாபாத்திரத்திலும் அசத்தியுள்ளார். அரசியல்வாதியாக இவர் செய்யும் வேலைகள் ரசிக்கவைக்கிறது.

த்ரிஷா நடிப்பில் பிரமாதம். நெகடிவ் கதாப்பாத்திரமாக இருந்தாலும் அதை கச்சிதமாக நடித்துள்ளார். அனுபுமா இரண்டாம் கதாநாயகியாக வருகிறார். தமிழில் முதல் படம் என்றாலும் நன்றாக நடித்துள்ளார்.

தனுஷின் அம்மாவாக வரும் சரண்யா எப்போதும் போல எதார்த்தமான நடிப்பை கொடுத்துள்ளார். மேலும் கட்சி தலைவராக வரும் சந்திரசேகர் நடிப்பில் நன்று.

படத்தின் பிளஸ் :

தனுஷ் மற்றும் த்ரிஷாவின் நடிப்பு தான் படத்தின் பெரிய பலம்.

படத்தின் திரைக்கதை வேகமாக நகர்கிறது. இரண்டாம் பாதியில் வரும் தனுஷின் ட்ரான்ஸ்பெர்மேஷன் காட்சி மிரட்டலாக உள்ளது.

படத்தின் பின்னணி இசை மற்றும் வீடியோ காட்சிகள் நன்றாக வந்துள்ளது.

அரசியலில் முன்னேறுவதற்காக த்ரிஷா செய்யும் வேலைகள் பயங்கரம்.

படத்தின் மைனஸ் :

படத்தில் உள்ள மற்ற முக்கியமான கதாபாத்திரத்தை இன்னும் நன்றாக பயன்படுத்தியிருக்கலாம்.

அரசியலில் சதி செய்து உடனுக்குடன் MLA மற்றும் MP ஆவது கொஞ்சம் லாஜிக் மீறல்.

மொத்தத்தில் கொடி :

கண்டிப்பாக இந்த கொடி – வெற்றிக்கொடி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அணைத்து தரப்பு ரசிகர்களும் ரசித்து பார்க்கும்படி படம் அமைந்துள்ளது.

கொடி படத்தின் ரேடிங் – 3.25 / 5
மேலும் வாசிக்க…

தேவி திரைவிமர்சனம் - Devi Review

1:56 AM |
கதை

பிரபுதேவா ஒரு மார்டன் மங்கையை தான் திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என விரும்புகிறார், ஆனால், அவருக்கு தேவி என்ற கிராமத்து பெண்ணை திருமணம் செய்து வைக்கின்றனர்.

திருமணம் முடிந்து பிரபுதேவா மும்பை வர, அங்கு தேவியிடம் ஒரு சில மாற்றங்களை உணர்கிறார், என்ன என்று பார்த்தால் அவர் உடலில் ரூபி என்ற ஆவி புகுந்துள்ளது தெரிகிறது, ரூபி தன் ஆசையை தேவி மூலம் அடைய நினைக்கிறார்.

பிறகு என்ன தேவி உடலில் இருந்து எப்படி பிரபுதேவா எப்படி ரூபியை வெளியேற்றினார் என்பதே மீதிக்கதை.

படத்தின் ரியல் ஹீரோ தமன்னா என்றே சொல்லி விடலாம், கிராமத்து பெண்ணாக இருந்தாலும் சரி, கிளாமரில் குதிக்கும்போதும் சரி மிரட்டியெடுத்துள்ளார், அதிலும் டான்ஸெல்லாம் பிரபுதேவாவிற்கே சவால் தான்.

ஆர்.ஜே. பாலாஜியும் தன் பங்கிற்கு கவுண்டர் வசனங்களால் கவர்கிறார், படம் முழுவதும் செம்ம கலர்புல்லாக இருக்கின்றது. இசை, ஒளிப்பதிவு காட்சி அமைப்புக்கள் அனைத்திலும் வட இந்தியா வாசனை அதிகமாகவே அடிக்கின்றது.

ப்ளஸ்

பிரபுதேவா, தமன்னாவின் நடிப்பு.

படத்தின் காமெடி காட்சிகள், அதிலும் தமன்னா உடலில் பேய் புகுந்தவுடன் செய்யும் அட்டகாசம்.

மைனஸ்

டப்பிங் படம் பார்ப்பது போன்ற உணர்வை தவிர்க்க முடியவில்லை,

பார்த்து பழகிப்போன பேய் ட்ராமா.

Rating: 2.5 / 5.0
மேலும் வாசிக்க…

ரெமோ விமர்சனம் - Remo Review

10:47 PM |
நடிகர் : சிவகார்த்திகேயன்
நடிகை : கீர்த்தி சுரேஷ்
இயக்குனர் : பாக்கியராஜ் கண்ணன்
இசை : அனிருத் ரவிச்சந்தர்
ஓளிப்பதிவு : ஸ்ரீராம் பி சி

சிவகார்த்திகேயனுக்கு பெரிய நடிகராக வேண்டும் என்ற கனவு. ஆனால், அவருக்கு சரியாக வாய்ப்புகள் அமைவதில்லை.  கே.எஸ்.ரவிக்குமார் படத்துக்கு ஹீரோ தேர்வு செய்வதாக அறிந்து, அவரிடம் சென்று வாய்ப்பு கேட்கிறார். முதலில் காதல் காட்சியில் சிவகார்த்திகேயனை நடிக்கச் சொல்கிறார். ஆனால், அவருக்கோ ரொமான்ஸ் சுத்தமாக வருவதில்லை. இதனால், கே.எஸ்.ரவிக்குமார் சிவகார்த்திகேயனை நிராகரிக்கிறார்.

இருப்பினும், அவருக்கு நகைச்சுவை நன்றாக வருவதை உணர்ந்து தான் அடுத்ததாக எடுக்கும் ‘அவ்வை சண்முகி’ படத்தை பற்றி அவரிடம் சொல்கிறார். அந்த படத்தில் ஹீரோ லேடி கெட்டப்பில் நடிப்பதாகவும் சிவகார்த்திகேயனிடம் சொல்கிறார். அந்த படத்திலாவது வாய்ப்பு வாங்கிவிட வேண்டும் என்று சிவகார்த்திகேயன் நினைக்கிறார்.

கே.எஸ்.ரவிக்குமாரை பார்த்துவிட்டு திரும்பிவரும் வேளையில் கீர்த்தி சுரேஷை பார்க்கும் சிவகார்த்திகேயனுக்குள் கே.எஸ்.ரவிக்குமார் கேட்ட காதல், ரொமான்ஸ் எல்லாம் துளிர்விடுகிறது. எனவே, அவளை எப்படியாவது காதலிக்க வைக்கவேண்டும் என்று அவள் பின்னாலேயே சுற்றுகிறார். ஒருகட்டத்தில், கீர்த்தி சுரேஷை தேடி அவள் வீடு வரைக்கும் போகும் சிவகார்த்திகேயன், அங்கு கீர்த்தி சுரேஷுக்கு வேறொருவருடன் நிச்சயதார்த்தம் நடப்பதை பார்த்து அதிர்ச்சியாகிறார்.

இதற்கிடையில், சிவகார்த்திகேயன் லேடி நர்ஸ் கெட்டப்பில் சென்று கே.எஸ்.ரவிக்குமாரை கவர நினைக்கிறார். உடனே லேடி கெட்டப் போட்டு சென்று அவரிடம் சென்று நடித்துக்காட்டுகிறார். அப்படியும், கே.எஸ்.ரவிக்குமாருக்கு சிவகார்த்திகேயனின் நடிப்பு பிடிப்பதில்லை. இதனால், சோகத்தில் லேடி கெட்டப்பில் பஸ்ஸில் திரும்பும் சிவகார்த்திகேயனை யோகிபாபு சில்மிஷம் செய்கிறார்.

இதைப் பார்க்கும் கீர்த்தி சுரேஷ், சிவகார்த்திகேயனை லேடி என்று நினைத்து யோகி பாபுவிடமிருந்து காப்பாற்றுகிறாள். அவர் நர்ஸ் கெட்டப்பில் இருப்பதை பார்த்து தான் டாக்டராக பணிபுரியும் மருத்துவமனையிலேயே அவருக்கு வேலை வாங்கித் தருவதாக கூறுகிறார். இது தனக்கு கிடைத்த இரண்டாவது வாய்ப்பாக கருதி, அந்த கெட்டப்பிலேயே இருந்து அவள் மனதை மாற்றி திருமணத்தை தடுத்து நிறுத்த நினைக்கிறார்.

இறுதியில், சிவகார்த்திகேயன் லேடி கெட்டப்பில் இருந்து கீர்த்தி சுரேஷின் மனதை மாற்றி காதலில் ஒன்று சேர்ந்தாரா? சிவகார்த்திகேயனுக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்தா? என்பதே மீதிக்கதை.

சிவகார்த்திகேயன் சாதாரணமாகவும் லேடி கெட்ப்பிலும் அசத்தலாகவும் அழகாகவும் இருக்கிறார். அதிலும், லேடி கெட்டப்பில் நர்ஸாக நடை, உடை, பாவனை எல்லாம் நன்றாக செய்திருக்கிறார். அதேபோல், இந்த படத்தில் ஆக்ஷன் காட்சியிலும் சிவகார்த்திகேயன் வெளுத்து வாங்கியிருக்கிறார். அதிலும், லேடி கெட்டப்பில் எதிரிகளை அடித்து துவம்சம் செய்துவிட்டு முகத்தில் விழுந்த முடியை ஊதிவிடும் காட்சிகளில் ரசிகர்களின் கிளாப்ஸ் தியேட்டரை அதிர வைக்கிறது.

கீர்த்தி சுரேஷ் இதுவரையிலான படங்களில் ரொம்பவும் அழகாக இருந்தார். இந்த படத்தில் கூடுதல் அழகாக இருக்கிறார். சிவகார்த்திகேயன்-கீர்த்தி சுரேஷ் கெமிஸ்டரி ஏற்கெனவே ஒர்க் அவுட் ஆகியுள்ள நிலையில், இந்த படத்திலும் நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. கீர்த்தி சுரேஷின் துருதுரு நடிப்பு ரசிகர்களை ரொம்பவும் கவர்ந்திருக்கிறது.

சதீஷின் காமெடி படத்திற்கு பெரிதளவில் கைகொடுத்திருக்கிறது. சரண்யா பொன்வண்ணன் வழக்கம்போல் காதலுக்கு பச்சை கொடி காட்டும் அம்மாவாக நடித்து அசத்தியிருக்கிறார். நான் கடவுள் ராஜேந்திரன், யோகி பாபு ஆகியோரின் காமெடியும் பரவாயில்லை. கீர்த்திசுரேஷின் அப்பாவாக வரும் நரேன் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்.

இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் முழுக்க முழுக்க ஒரு காதல் கதையை படமாக்கியிருக்கிறார். படத்தின் கதை முழுக்க சிவகார்த்திகேயன்-கீர்த்தி சுரேஷ் இருவரை மட்டுமே முன்னிருத்தி கதையை நகர்த்தியிருக்கிறார். மற்ற கதாபாத்திரங்களுக்கு அவ்வளவாக வாய்ப்பு வழங்கவில்லை. அதேபோல் படத்தில் நிறைய லாஜிக் மீறல்களும் இருக்கிறது.

சிவகார்த்திகேயன்-கீர்த்தி சுரேஷுக்கு கொடுத்த வாய்ப்பில் பாதியளவாவது மற்ற கதாபாத்திரங்களுக்கும் கொடுத்திருக்கலாம். அதேபோல், படத்தில் உள்ள லாஜிக் மீறல்களையும் தவிர்த்திருந்தால் படத்தை கூடுதலாக ரசித்திருக்கலாம்.

பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலமாக இருக்கிறது. ஒவ்வொரு காட்சிகளையும் தனது கலைக் கண்ணால் வண்ணமயமாகவும், அழகாகவும் படமாக்கியிருக்கிறார். அனிருத்தின் இசையும் படத்திற்கு கூடுதல் பலமாக இருக்கிறது. முத்துராஜின் அரங்குகள் அருமையாகவும், பிரம்மாண்டமாகவும் இருக்கிறது.

மொத்தத்தில் ‘ரெமோ’ ஜொலிக்கிறான்.
மேலும் வாசிக்க…

எம்.எஸ்.தோனி திரைவிமர்சனம் - MS Dhoni Review

11:54 PM |
இந்திய சினிமா மட்டுமில்லை, உலக கிரிக்கெட் ரசிகர்களே எதிர்ப்பார்த்து காத்திருந்த படம் எம்.எஸ்.தோனி தி அண்ட் டோல்ட் ஸ்டோரி. ஒரு சாதரண ரயில்வே டிக்கெட் கலேக்ட்டர் எப்படி இந்தியாவே தலையில் தூக்கி கொண்டாடும் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் ஆனார், என்பதை நீரஜ் பாண்டே இயக்கத்தில், தோனியாக சுஷாந்த் நடிக்க இன்று உலகம் முழுவதும் இந்த படம் வெளிவந்துள்ளது.

கதைக்களம்
தோனி இன்று நமக்கு ஒரு சக்சஸ்புல் மனிதராக தான் தெரியும், பல கோப்பைகளை இந்தியாவிற்காக வென்றவர் என பல சாதனைகளுக்கு சொந்தக்காரர்.

ஆனால், இந்த இடத்தை அவர் அடைய பட்ட கஷ்டங்கள் சாதரணம் இல்லை, தோனியின் வாழ்க்கையில் அவர் எத்தனை கஷ்டப்பட்டு இந்த இடத்தை அடைந்தார் என்பதையும், அவர் வாழ்க்கையில் நடந்த இன்பம், துன்பம், காதல், மோதல் என நமக்கு தெரியாத பல விஷயங்களை மிகவும் நேர்த்தியாக கூறியிருக்கும் படம் தான் இந்த எம்.எஸ்.தோனி தி அண்ட் டோல்ட் ஸ்டோரி.

படத்தை பற்றிய அலசல்
தோனி கிரிக்கெட் உலகிற்கு எப்படி வருகிறார் முதல் உலக கோப்பையை எப்படி வெல்கிறார் என்பது வரை உள்ளது. சுஷாந்த் படம் முடிந்தவுடன் திரையரங்கமே எழுந்து கைத்தட்டுகின்றது, அவர் நடிப்பிற்கு இதுவே ஒரு சான்று.

தோனியின் வாழ்க்கையில் நாம் பார்க்காத சில சோகப்பக்கங்களை நீரஜ் மிக அழகாக காட்டியுள்ளார், சாதரண குடும்பத்தில் பிறந்து சரித்திர நாயகன் ஆகத்துடிக்கும் ஒரு இளைஞன் வாழ்க்கையில் வறுமையால் எந்த பக்கம் செல்வது என்று தெரியாமல் சுஷாந்த் தோனியாக வாழ்ந்து இருக்கிறார்.

அதிலும் நம் பாதையை நாம் தான் தீர்மாணிக்கவேண்டும், வாழ்க்கை முழுவதும் பவுன்சர் வந்துக்கொண்டே தான் இருக்கும், நாம் தான் குணிந்து செல்ல வேண்டும் என்பது போன்ற வசனங்கள் ரசிக்க வைக்கின்றது. இடைவேளையில் தோனி தன் வாழ்க்கையை தீர்மாணிக்கின்றார்.

அதன்பிறகு அவர் வாழ்க்கையில் நாம் அறியாத ஒரு காதல், சாக்‌ஷிக்கு முன் வரும் காதல், அதன் சோகமான முடிவு என பல சர்ப்ரைஸ் ரசிகர்களுக்கு உள்ளது. அதிலும் தோனி எப்படி இத்தனை பொறுமையாக இருக்கிறார் என்பதன் விளக்கமும் காட்சிகளாகவே காட்டப்பட்டுள்ளது.

யார் முன்பும் தோனி அழுகமாட்டார் என்பதையும் காட்டியவிதம் சூப்பர், இசை, ஒளிப்பதிவு என அனைத்திலும் சிக்ஸர் தான், அப்படியே CJ வேலையில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம், யுவராஜ், கம்பீர், சேவாக் ஆகியோரின் நட்பு குறித்து காட்டியவிதம் தற்போதாவது தெரிந்திருக்கும் ரசிகர்களுக்கு நாம் எண்ணியது எல்லாம் பொய் என்று.

படத்தின் கிளைமேக்ஸ் அனைவரும் அறிந்தது தான், உலகமே பார்த்தது தான், ஆனால், கொஞ்சம் கூட அந்த சந்தோஷம் குறையவில்லை, அத்தனை சந்தோஷத்தில் துள்ளிக்குதிக்கின்றார் ரசிகர்கள்.

க்ளாப்ஸ்
சுஷாந்த் மற்றும் படத்தில் நடித்தவர்களின் அனைவரின் நடிப்பு.

ரசிகர்கள் பலரும் அறியாத பல தகவல்களை காட்டிய விதம்.

படத்தின் வசனம். கிளைமேக்ஸ் காட்சிகள்.

பல்ப்ஸ்
படத்தின் நீளம் மட்டுமே, கிரிக்கெட் அறியாத ரசிகர்களுக்கு கொஞ்சம் பொறுமையை சோதிக்கும்

மொத்தத்தில் சாதரண மனிதன் சரித்திர நாயகன் ஆனதை நாம் அனைவரும் கொண்டாடியே தீர வேண்டும்.
மேலும் வாசிக்க…

தொடரி திரைவிமர்சனம் - Thodari Review

1:05 AM |
தனுஷ் கட்டாயம் ஒரு ஹிட் கொடுத்தே ஆகவேண்டும் என்ற நிலையில் உள்ளார். இதற்காகவே வெற்றி இயக்குனர் பிரபு சாலமனிடம் கைக்கோர்த்த படம் தான் தொடரி. பல மாதங்கள் கிடப்பில் இருந்த இந்த படம் இன்று உலகம் முழுவதும் பல திரையரங்குகளில் ரிலிஸ் ஆகியுள்ளது.

கதைக்களம்
தனுஷ் ரயிலில் கேண்டின் பாயாக வேலை செய்ய, அதே ரயிலில் ஒரு ஹீரோயினின் டச்சப் கேர்ளாக கீர்த்தி சுரேஷ் வருகிறார். பிரபு சாலமன் படம் என்றாலே பார்த்தவுடன் காதல் தீப்பிடிக்க, அதன் பிறகு ‘என் உடம்புக்குள்ள புகுந்து என் உசுர எடுத்துட்ட’ன்ற வசனத்துடன் ஒரு காதல் வரும், அதே காதல் தான் இதிலும்.

கீர்த்தி சுரேஷிற்கு பெரிய பாடகி ஆக வேண்டும் என்று ஆசை. இவருடைய ஆசையை தெரிந்த தனுஷ் நெருங்கி பழக விருப்பப்பட்டு, எனக்கு வைரமுத்துவை தெரியும் என்று பொய் சொல்லி பழகுகிறார்.

ஒரு கட்டத்தில் உண்மை தெரிந்து இருவரும் பிரிய, அதே நேரத்தில் என்ஜின் மாஸ்டர் நெஞ்சு வலியில் இறக்க, ரயில் 140 கிலோ மீட்டர் வேகத்தில் செல்கின்றது.

அதன்பின் தனுஷ்-கீர்த்தி சுரேஷ் ஜோடி காதல் சேர்ந்ததா? அந்த ரயில் நின்றதா? என்பதை சீட்டின் நுனிக்கு கொண்டு வருகிறது திரைக்கதை.

படத்தை பற்றிய அலசல்
தனுஷ் பூச்சியப்பனாகவும், கீர்த்தி சுரேஷ் சரோஜாவாகவும் வாழ்ந்து இருக்கிறார்கள். அதிலும் தனுஷ் படம் முழுவதுமே கலகலப்பாகவே வந்து செல்கிறார். கீர்த்தி சுரேஷும் இறக்கும் நிலையிலும் நான் பாட்டு பாடவா? என கேட்பது திரையரங்கையே அதிர வைக்கின்றது.

படத்தின் முதல் பாதியில் பெரிதும் கதை இல்லை என்றாலும், தம்பி ராமையா, கருணாகரன் டீம் காமெடி கரை சேர்க்கின்றது. தனுஷும் தன் பங்கிற்கு காமெடியில் கலக்க, கீர்த்தி பாடுகிறேன் என்று செய்யும் கலாட்டா சிரிப்பிற்கு புல் கேரண்டி.

அதே நேரத்தில் 3 படத்தில் வரும் தனுஷ் போல் முரட்டு சுபாவம் கொண்ட கமாண்டோ, அதிலும் அவர் ஒரு மலையாளி. தமிழர்களையே பிடிக்காது என்று கூறி தனுஷை பார்க்கும் போதெல்லாம் முறைப்பது, அவரை தனுஷ் மந்திரி ராதாரவியுடன் கோர்த்துவிட்டு பதிலடி கொடுக்கும் ரகம் எல்லாம் செம.

முதல் பாதி இடைவேளை வரும்வரை படம் எதை நோக்கி செல்கின்றது என்றே தெரியவில்லை. காமெடி மட்டும் உதவ, இரண்டாம் பாதியில் ரயில் நிற்குமா? பூச்சியப்பன்- சரோஜா இணைவார்களா? என ஒவ்வொரு ஆடியன்ஸையும் சீட்டின் நுனிக்கு வரவைக்கின்றது.

அதிலும் அந்த பாலத்தை கடக்கும் காட்சி பதட்டத்தை இரண்டு மடங்காக்குகின்றது. அதே நேரத்தில் தொலைக்காட்சி மீடியாக்களை பிரபு சாலமன் வெளுத்து வாங்கிய காட்சி செம்ம தைரியம் சார் உங்களுக்கு.

டி.இமானின் இசையில் மைனா, கும்கி, கயல் எல்லாம் சேர்ந்த புருட்சாலட் தான் இசை. ஒளிப்பதிவு கவனிக்க வைக்கின்றது. CG காட்சிகள் கொஞ்சம் தெரிந்தாலும் கொடுத்த பட்ஜெட்டில் ஓகே தான்.

க்ளாப்ஸ்
படத்தின் இரண்டாம் பாதி, திரைக்கதை, காமெடி காட்சிகள்.

கிளைமேக்ஸ் என்ன ஆகும் என்று ஆடியன்ஸை நகம் கடிக்க வைப்பது ரசிக்க வைக்கின்றது.

பல்ப்ஸ்
தனுஷே ரயில் மேல் ஏறி உதவும் போது, ரயிலில் இருக்கும் போலிஸ் மேலே ஏறி உதவலாமே? என சில லாஜிக் கேள்விகள் எழுகின்றது. மிகவும் பதட்டமான காட்சியில் கூட காமெடி ஓகே என்றாலும், தேவை தானா?

மொத்தத்தில் தொடரி சந்தோஷமான மற்றும் த்ரில்லிங்கான ஒரு முழு நிறைவு பயணம்.
மேலும் வாசிக்க…

இருமுகன் விமர்சனம் - Irumugan Review

11:11 PM |
நடிகர்கள் : விக்ரம், நயன்தாரா, நித்யாமேனன், நாசர், தம்பி ராமையா, ரித்விகா, பாலா, கருணாகரன் மற்றும் பலர்.
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
ஒளிப்பதிவு : ஆர்டி. ராஜசேகர்
படத்தொகுப்பு : புவன் ஸ்ரீநிவாசன்
இயக்கம் : ஆனந்த் சங்கர்
பிஆர்ஓ : யுவராஜ்
தயாரிப்பாளர் : ஷிபுதமீன்ஸ்

கதைக்களம்…

ஒரு 75 வயது முதியவர் தனி ஆளாக இந்தியன் எம்பஸியின் அலுவலக ஊழியர்களை தாக்குகிறார். இது அங்குள்ள கேமராவில் பதிவாகிறது.

அவரால் எப்படி சாத்தியமானது? அவர் பயன்படுத்திய ஹின்ஹேலரில்  இவ்வளவு பெரிய சக்தி உருவானது எப்படி? என அறிய விக்ரமின் உதவியை நாடுகின்றனர்.

விக்ரமை நாட என்ன காரணம்? அவரின் பிளாஷ்பேக் என்ன? அந்த ஹின்ஹேலரி பின்னணி என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

கதாபாத்திரங்கள்…

அகிலன் மற்றும் லவ் என்ற இரு கேரக்டர்களில் தன்னை மீண்டும் வேறுபடுத்தி காட்டியிருக்கிறார்.

உடல் அமைப்பில் மாற்றம் இல்லையென்றாலும் உடல் அசைவில் மாற்றம் செய்து ரசிக்க செய்திருக்கிறார்.

ஆக்ஷனில் அனல் பறக்க செய்கிறார். ஹின்ஹேலரை முகர்ந்த பின் வரும் சண்டைகளில் கூடுதல் பலம் தெரிகிறது.

லவ் கேரக்டரில் ஜொலிக்கிறார் விக்ரம். ஆனால் வளவளவென பேசிக்கொண்டே இருப்பது போரடிக்கிறது.

வெறும் கிளாமர் மட்டுமில்லை தன்னாலும் ஆக்ஷனிலும் கலக்க முடியும் என்று நிரூபித்திருக்கிறார் நயன்தாரா.

இவரின் கேரக்டர் ஜஸ்ட் ஒரு பாடலில் முடிந்துவிடுகிறதே என் சோர்வடையும் ரசிகர்களுக்கு இரண்டாம் பாதியில் வந்து சூடேற்றுகிறார்.

திறமையான நடிகை நித்யா மேனனை இதில் சரியாகப் பயன்படுத்தவில்லை என்றே தோன்றுகிறது. ஆனால் அவர் இறக்கும்போது கண்கலங்க வைக்கிறார்.

கபாலி ரித்விகாவின் நிலைமை அந்தோ பரிதாபம்.

நாங்களும் இருக்கிறோம் என நாசர், கருணாகரன், தம்பிராமையா வந்து செல்கின்றனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். ஆனால் படம் விறுவிறுப்பாக செல்லும் நேரத்தில் ஒரு மெலோடி தேவையா?

ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவில் மலேசியா சிறைச்சாலை முதல், ஹேலேனா பாடல்கள் வரை கண்களுக்கு விருந்து.

படத்தின் ப்ளஸ்…

விக்ரமின் இரு மாறுபட்ட நடிப்பு

வித்தியாசமான வில்லன் திரைக்கதை மற்றும் கேரக்டர்கள்

மெடிக்கல் துறை மற்றும் எக்ஸ்போர்ட் துறையில் நடக்கும் ஊழல்களை சுட்டி காட்டியிருக்கிறார்.

படத்தின் மைனஸ்….

லவ்வுல்ல சருக்கலாம். இந்த லவ்வையே சருக்க வச்சிட்ட போன்ற வசனங்கள் அடிக்கடி வருவது சலிப்பை தட்டுகிறது.

அகிலன் மற்றும் லவ் – இரு குரலிலும் வித்தியாசம் காட்டியிருக்கலாம்.

இன்று செல்போன் உபயோகிப்பவர்கள் பாஸ்வேர்ட்டு போட்டு லாக் செய்துதான் வைக்கின்றனர். ஆனால் விக்ரம் ஈசியாக மற்றவரின் போனை எடுத்து பேசுவது எப்படி எனத் தெரியவில்லை.

முதல்பாதி விறுவிறுப்பை இரண்டாம் பாதியில் கொடுத்திருந்தால் இந்த இருமுகனுக்கு ஹின்ஹேலரை விட எக்ஸ்ட்ரா பவர் கிடைத்திருக்கும்.

இயக்குனர் பற்றி…

அரிமா நம்பியில் கவனம் ஈர்த்த ஆனந்த் சங்கர் இதில் வித்தியாசமான கதையை கையாண்டு இருக்கிறார்.

ஸ்பீடு ஹின்ஹேலர் என்ற புதிய டெக்னிக்கை சொல்லி, அதற்கு ஹிட்லரின் வரலாறையும் சொல்லியிருப்பது கவனிக்க வைக்கிறது.

ஒரு ஸ்டைலிஷ்ஷான கதையை சில லாஜிக் மீறல்களோடு ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார்.

மொத்தத்தில் இருமுகன்… ஸ்பீடு மகன்
மேலும் வாசிக்க…

வந்துட்டேன்னு சொல்லு...நா திரும்ப வந்துட்டேன்னு சொல்லு கபாலி விமர்சனம் - Kabali Review

10:09 PM |
வந்துட்டேன்னு சொல்லு...நா திரும்ப வந்துட்டேன்னு சொல்லு என்று சூப்பர் ஸ்டாரின் கம்பீர குரலில் கபாலி டீசர் ஒரு சில நாட்களுக்கு முன் வந்தது. டீசர் வந்த அடுத்த நொடி தமிழ் ரசிகர்கள் மத்தியில் கபாலி பீவர் தர்மா மீட்டரை தாண்டி எகிறியது.

அத்தனை பேரின் ஆவலும் நிறைவேறும் வகையில் உலகம் முழுவதும் கபாலி எண்ணிலடங்கா திரையரங்குகளில் இன்று வெளிவந்துள்ளது, ரசிகர்கள் ஆரவாரத்துடன் பழைய ரஜினியாக புதிய களத்தில் இறங்கியிருக்கும் சூப்பர் ஸ்டாரின் இந்த கபாலி எப்படியிருக்கிறது...இதோ...

கதைக்களம்

படத்தின் ஆரம்பத்திலேயே ரஜினிகாந்த் சிறையில் இருந்து 25 வருடங்கள் கழித்து வெளியே வருகிறார், மலேசியாவில் வாழும் தமிழர்களுக்காக போராடி சிறை செல்கிறார். கிட்டத்தட்ட நெல்சன் மண்டேலா ஸ்டைல்.

அவர் சிறையிலிருந்து வந்த உடனே ஒரு சண்டைக்காட்சியுடன் டீசரில் வரும் கபாலிடா காட்சி வருகிறது. சிறை சென்ற பின்னால் அவர் குடும்பத்துக்கு என்ன நேர்ந்தது, அங்குள்ள மக்கள் என்ன சிரமப்படுகிறார்கள் என்பதை தெரிந்து அதை சரி செய்ய முயலுகிறார். இடைவேளைக்கு பின்னால் படத்தின் கதைப்போக்கு மாறுகிறது.

க்ளைமேக்ஸ் இரண்டாம் பாகம் வருமா என்ற ஒரு சஸ்பென்ஸோடு முடிகிறது.

நடிகர், நடிகைகளின் நடிப்பு

படத்தின் மொத்த பலமே சூப்பர்ஸ்டார் தான். வழக்கமான மாஸ் சீன்கள் மட்டுமல்லாது ரஜினியின் இன்னொரு பக்கமான செண்டிமெண்ட் காட்சிகளிலும் பின்னி எடுத்துள்ளார்.

பழைய கெட்டப்பில் பார்க்கையில் பில்லா பட ரஜினியை நினைவுபடுத்துகிறார். ஆக்ஷன் காட்சிகளிலும் இன்னும் தன்னுடைய அதே ஸ்டைலில் கலக்கியிருக்கிறார். வயசானாலும் உங்க அழகும், ஸ்டைலும் குறையல என்ற படையப்பா வசனம் தான் ஞாபகம் வருகிறது., பள்ளி நிகழ்ச்சியில் தான் எப்படி டானாக மாறினேன் என்பதை விளக்கும் காட்சியிலும், தனது மகளிடம் பேசும் காட்சியிலும் அசத்துகிறார்.

ஜான் விஜய் ரஜினியின் நண்பராக வருகிறார். உடன் வரும் அட்டக்கத்தி தினேஷும் தன் கதாபாத்திரத்தில் அசத்தியிருக்கிறார். தன்ஷிகா பில்லா நயன்தாரா மாதிரியான ஸ்டைலான பெண்ணாக வருகிறார். சண்டைக்காட்சியிலும் அசத்துகிறார். ரித்விகாவின் கதாபாத்திரம் பாராட்டும்படியாக உள்ளது.

சூப்பர்ஸ்டாரை எதிர்த்து பேசும் காட்சியில் கைதட்டல் வாங்குகிறார். ராதிகா ஆப்தே தோட்டத்தில் வேலை செய்யும் பெண்ணாகவும், சூப்பர்ஸ்டாரின் மனைவியாகவும் வருகிறார். தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். ரஜினியுடனான காதல்காட்சிகள் ரசிக்கும்படியாக உள்ளது.வில்லனாக கிஷோர், லிங்கேஷ் ஆகியோர் வந்தாலும் முக்கிய வில்லனான வின்ஸ்டன் சா அசத்துகிறார்.

தொழில்நுட்ப கலைஞர்கள்

பாடல்கள் ஏற்கனவே ஹிட் தான். பின்னணி இசையிலும் பின்னி பெடலெடுத்துள்ளார் சந்தோஷ் நாரயணன்.

ரஞ்சித் சூப்பர்ஸ்டாரை தன்னுடைய கதைக்கேற்ப முழுமையாக பயன்படுத்தியிருக்கிறார். படத்தில் தன்னுடைய வழக்கமான பல சிம்பாளிக் காட்சிகளை வைத்துள்ளார். வசனங்களில் அசத்தியுள்ளார். ரஜினியின் படமாக மட்டுமல்லாமல் ரஞ்சித் படமாகவும் மாற்றியிருக்கிறார்.

படத்தின் பல காட்சிகள் செட் ஒர்க் தான் என்றாலும் தெரியாத அளவுக்கு மலேசிய, தாய்லாந்து தெருக்களை கண்முன் நிறுத்தியிருக்கிறார் கலைஇயக்குனர் ராமலிங்கம். எதார்த்தமான ஸ்டண்ட் காட்சிகளில் அசத்தியுள்ளனர் இரட்டையர்களான அன்பறிவ். இரண்டரை மணி நேரத்துக்கேற்றபடி விறுவிறுப்பாக கதையை கட் செய்துள்ளார் பிரவீண் கே.எல்

கிளாப்ஸ்

ரசிகர்கள் விரும்பும் சூப்பர்ஸ்டாரின் ஸ்டைல் காட்சிகள், செண்டிமெண்ட் காட்சிகள், நாசர் காட்சிகள், ரஜினி யாரை நம்புவது என்ற சஸ்பென்ஸ் காட்சிகள்ரசிக்க வைக்கும் படத்தின் வசனம், சூப்பர்ஸ்டார் மட்டுமல்லாமல் மற்ற நடிகர், நடிகைகளின் நடிப்புமிரட்டும் பின்னணி இசை

பல்ப்ஸ்

ஒரு கேங்ஸ்டர் படம் என்று எதிர்பார்த்து செல்பவர்களுக்கு சண்டை குறைவு தான்.

மொத்தத்தில் கபாலி முந்தைய படங்களின் தோல்வியை உடைத்தெறிந்து சூப்பர்ஸ்டார் ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளது.

ரேட்டிங் - 3.5/5

மேலும் வாசிக்க…

24 விமர்சனம் - 24 Review

1:15 AM |
காலத்தை கடந்து செல்லும் ஐன்ஸ்டினின் Time Machine கதைக்களத்தை கொண்டு ஹாலிவுட்டில் பல படங்கள் வந்துள்ளது. அந்தவரிசையில் தமிழில் இயக்குனர் விக்ரம் கே குமார் இயக்கத்தில் சூர்யா முதன் முறையாக ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்திருக்கும் படம்தான் 24.

கதைக்களம்

1990 இல் இரட்டை சகோதர்களான தம்பி சூர்யா(சேதுராமன்) தனது ஆராய்ச்சியான Project24 வாட்சை கண்டுபிடிக்கிறார். அதை அண்ணன் சூர்யா(ஆத்ரேயா) தனக்கு சொந்தமாக்க முயற்சி செய்ய தனது தம்பி சூர்யாவையும்,

அவருடய மனைவி நித்யா மேனனயும் கொலை செய்கிறார். ஒரு கட்டத்தில் ஒரு விபத்தில் தம்பி சூர்யாவின் குழந்தையையும், அவர் அடைய நினைத்த project24 யும் தவறவிட்டு கோமாவுக்கு செல்கிறார் ஆத்ரேயா.

பின்னர் 26 வருடம் கழித்து நிகழ்காலத்தில் அவர் அடைய நினைத்த project24ஐ அடைந்தாரா? மகன் சூர்யா பெரியப்பாவை பழி வாங்கினாரா? என்பதை பல சுவராஷ்யங்களுடன் கொடுத்திருக்கிறார் இயக்குனர் விக்ரம்.கே.குமார்.

இரண்டு கதாபாத்திரத்தில் நிறைய நடித்திருந்தாலும் சூர்யா மூன்று கதாபாத்திரத்தில் நடிப்பது இதுவே முதன்முறை குறிப்பாக வில்லனாக வரும் ஆத்ரேயா கதாபாத்திரத்தில்

ஆங்காங்கே சற்று பயத்தை ஏற்படுத்துகிறார். இளமை காலத்தில் வரும் போதும் சரி வயதான காலத்தில் வீல் சேரில் வரும் போதும் தனது கதாபாத்திருத்திற்கு பக்காவாக பொருந்தியிருக்கிறார்.

சமந்தாவிற்கும், நித்யா மேனனுக்கும் சொல்லும் அளவிற்கு கதாபாத்திரத்திரம் இல்லையென்றாலும் தங்களுடைய பங்கை சரியாக செய்துள்ளனர்.
குறிப்பாக சமந்தா அழகு பதுமையாக காட்சியளிக்கிறார்.

வேல் படத்திற்கு பிறகு சரண்யா பொன்வண்ணன் அம்மாவாக இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்திருக்கிறார்.

ஒரு கலகலப்பான அம்மாவாகவும் சரி, சூர்யா தன்னுடைய மகன் இல்லை என்பதை சொல்லும் போதும் உணர்வு பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் சரண்யா பொன்வண்ணன்.

சத்யன், அப்புகுட்டி, சார்லி இவர்கள் படத்தில் அவ்வப்போது வந்து சென்றாலும் தங்களுடைய பங்குக்கு கலகலப்பூட்டுகின்றனர். குறிப்பாக அஜய்(மித்ரன்) ஆத்ரேயாவுடன் வரும் போது அவரும் சேர்ந்து மிரட்டுகிறார்.

யாவரும் நலம், மனம் படத்திற்கு பிறகு இயக்குனர் விக்ரம்குமாருக்கு இதுதான் அடுத்த படம் என்பதால் பல நாட்கள் கதையை யோசித்து எடுத்துள்ளார் ஏ.ஆர். ரஹுமானின் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு இன்னும் ஒரு பலத்தை சேர்த்திருக்கிறது. காலம் என் காதலி, நான் உன் அருகினிலே பாடல்கள் மனதில் தங்கி
விடுகின்றன. திருநாவுக்கரசின் ஒளிப்பதிவில் காட்சிகளை தத்ரூபமாக காட்டியிருக்கிறார்.

க்ளாப்ஸ்

சூர்யாவின் ஆத்ரேயா கதாபாத்திரம் இன்னும் நிறைய ரசிகர்ளை சூர்யாவிற்கு கொடுக்கும் படத்தின் இரண்டாம் பாதியில் வரும் டுவிஸ்ட்கள் ஆர்வத்தை தூண்டுகிறது.
ஆய்வு கூடம் 1990களுக்கு ஏற்றார் போல் தத்ரூபமாக இருக்கிறது.

பல்ப்ஸ்

படத்தின் நீளம் அதிகமாக இருக்கிறது. அதை சற்று குறைத்திருக்கலாம். படத்தின் இரண்டாம் பாதியில் கதை நன்றாக செல்லும் நேரத்தில் வரும் காதல் காட்சிகள் படத்தின் ஓட்டத்தை குறைக்கிறது.

மொத்தத்தில் 24 இந்த கோடை காலத்திற்கு ஏற்ற படம்.. விக்ரம் குமார்-சூர்யாவின் புது விதமான முயற்சிக்கு குடும்பத்தோடு சென்று பார்க்கலாம்

ரேட்டிங்: 3.25/5
மேலும் வாசிக்க…

மனிதன் திரைவிமர்சனம் - Manithan Review

10:06 PM |
உதயநிதி தன்னை ஒரு நடிகனாக நிரூபித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளார். இதற்கு முன் வெளிவந்த அனைத்து படங்களும் சந்தானத்தின் காமெடி, ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்களை நம்பி மட்டுமே படம் வெளிவந்தது.

கொஞ்சம் வித்தியாசமாக கெத்து படத்தில் சந்தானம் இல்லாமல் ஒரு ஆக்‌ஷன் படத்தில் களம் இறங்கினார். அந்த படம் பெரிதும் அவருக்கு கைக்கொடுக்கவில்லை, அதனால், முதலில் தன்னை ஒரு நடிகனாக நிரூபிக்க வேண்டும் பாலிவுட்டில் மாபெரும் வெற்றி பெற்ற ஜாலி llp படத்தின் ரீமேக் உரியமையை வாங்கி தயாரித்து நடித்துள்ளார். ஒரு நடிகனாக உதயநிதி வெற்றி பெற்றாரா? என்பதை பார்ப்போம்.

கதைக்களம்

ஊரில் வக்கீலுக்கு படித்துவிட்டு எந்த கேஸும் கிடைக்காமல், போராடிக்கொண்டு இருக்கிறார் உதயநிதி, சுற்றி இருப்பவர்கள் தன்னை கிண்டல் செய்வது கூட தெரியாத அப்பாவி, ஒரு வழக்கில் வெற்றி பெற்றால் தான், தன் மாமாவிடம் பொண்ணு(ஹன்சிகா) கேட்க முடியும் என கோபமாக சென்னை கிளம்பி செல்கிறார்.

சென்னையில் இதற்கு மேல் கஷ்டப்படுகிறார், விவேக்கை நம்பி உதயநிதி சென்னை வந்தால் அவரே அங்கு ஊறுகாய் கடை போட்டு பிழைத்து வருகின்றார். இந்த நேரத்தில் தான் நாடே தீர்ப்பு எதிர்ப்பார்க்கும் ஒரு வழக்கில் வாண்ட்டாக ஆஜர் ஆகிறார் உதயநிதி.

நடைப்பாதையில் படுத்திருந்தவர்களை கார் ஏற்றி கொன்ற ஒரு பெரிய இடத்து பையன் வழக்கை, கையில் எடுக்கிறார். ஆனால், அந்த பையனுக்கு ஆதரவாக இந்தியாவில் நம்பர் 1 வக்கீலான பிரகாஷ்ராஜ் வாதாடுகிறார்.

ஊரே தன்னை ஒரு மொக்கை லாயர் என்று சொல்கின்றது, நாம் சாதிக்க இது தான் சரியான தருணம் என பிரகாஷ்ராஜுக்கு எதிராக உதயநிதி களம் இறங்க, இறுதியில் வெற்றி யாருக்கு என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

இதுவரை நடித்த 5 படங்களில் இது தான் உதயநிதியின் பெஸ்ட் என்று சொல்லிவிடலாம், எந்த ஒரு இடத்திலும் அலட்டிக்கொள்ளாத நடிப்பு, ஹீரோ திட்டு வாங்குகிறார், ஒரு சில இடங்களில் எல்லாம் ஜுனியர் ஆர்டிஸ்டே கலாய்க்கிறார்கள், அடி வாங்குகிறார், திணறி திணறி வாதடுகிறார் இதுபோன்று தன் குறுகிய வட்டத்திலிருந்து வெளிவந்து முதன் முறையாக ஒரு ஹீரோவாக நம் மனதை உதயநிதி வென்றுவிட்டார். ஹன்சிகா உதயநிதிக்கு சப்போர்ட் தரும் கதாபாத்திரம் தான் என்றாலும் முதன் முறையாக ஓவர் ஆக்டிங் இல்லாமல் அளவான அழகான நடிப்பால் கவர்கிறார். ஐஸ்வர்யா ராஜேஸ், விவேக் ஆகியோர் கதைக்கு தேவையான நடிப்பை தந்துள்ளனர்.

படத்தின் மற்றொரு ஹீரோ கண்டிப்பாக பிரகாஷ்ராஜும், ராதாரவியும். படத்தில் இவர்கள் எந்த அளவிற்கு முக்கியத்துவம் என்றால், இவர்கள் பெயரை தான் முதலில் போடுகிறார்கள், பிறகு தான் உதயநிதி பெயரே வருகின்றது. பிரகாஷ்ராஜ் ஒரு சீனியர் லாயராக மிரட்டுகிறார், ஏதோ பள்ளி சிறுவனை ஆசிரியர் மிரட்டுவது போல் உதயநிதியை அதட்டி உட்கார வைக்கும் இடத்தில் கம்பீரம். ஆனால், ஒன்றே ஒன்று சொல்லியே ஆகனும், ராதா ரவி சார் நடிகர் சங்க தேர்தலில் தோற்றதால் மிகவும் சந்தோஷப்படுவது பல இயக்குனர்கள் தான்.

ஏனெனில் இப்படி ஒரு நடிகனை தான் நாம் இத்தனை நாட்கள் தொலைத்து விட்டோம், அவர் பேசினாலே திரையரங்கம் கைத்தட்ட ஆரம்பித்து விடுகின்றது, அதிலும் படத்தின் பாதி வரை அமைதியாகவும் நிதானமாகவும் இருந்து, ஒரு கட்டத்தில் கோபத்தில் கையை உயர்த்தி பேசும் இடத்தில் சார் சூப்பர் சார்.

படத்தின் பல காட்சியமைப்புகள் மிகவும் யதார்த்தமாக உள்ளது, உதயநிதி ஒரு சாதரண மனுஷனாக கேஸை வாபஸ் வாங்க பணம் வாங்கி, அவர் திருந்தும் இடத்திற்கு வைத்த காட்சிகள் கிளாஸ், அதைவிட கிளைமேஸில் நடைப்பாதையில் படுத்திருந்து தன் குடும்பத்தை இழந்தவர் கோர்ட்டில் பேசும் இடம் சூப்பர் அஹமத்.

படத்தின் மிகப்பெரும் பலமே ஒளிப்பதிவு, இசையும் தான், மதியின் கேமராவில் நீதிமன்றத்தை நம் கண்முன்னே கொண்டு வந்துள்ளார், சந்தோஷ் நாரயணின் இசையின் பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே ஹிட் , அதை விட பின்னணி இசையில் கலக்கியுள்ளார், அதிலும் குறிப்பாக ‘அதோ’ BGM படத்தின் கதையை தாங்கி செல்கின்றது.

க்ளாப்ஸ்

படத்தின் கதைக்கு பொருந்திய கதாபாத்திரங்கள், அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர்.

பிரகாஷ்ராஜ்+ராதாரவி போன்ற சீனியர் நடிகர்களின் பங்களிப்பு, படத்தின் இரண்டாம் பாதி வேகம் எடுக்கின்றது.

கிளைமேக்ஸில் உதயநிதியும், பிரகாஷ்ராஜும் பேசும் வசனங்கள் ரசிக்க வைக்கின்றது. படத்தின் வசனம் ‘உங்களுக்கு தெரியாத விஷயத்தில் அறிவை தேவையில்லாமல் பயன்படுத்தாதீர்கள்’ போன்றவை யோசிக்க வைத்து ரசிக்க வைக்கின்றது.

இவை அனைத்தையும் விட, ரீமேக் படம் என்றாலும், நம் சமூகத்தில் பணக்காரர்களால் நடக்கும் பெரிய விபத்துக்களை எப்படி மூடி மறைக்கிறார்கள் என காட்டிய களம்.

பல்ப்ஸ்

படத்தின் முதல் பாதி கொஞ்சம் மெதுவாகவே நகர்கின்றது, எந்த இடத்திலும் சோர்வு இல்லை என்றாலும், இன்னும் கொஞ்சம் வேகமாக இருந்திருக்கலாம் என நினைக்க வைக்கின்றது. சில யதார்த்த மீறல், காட்சிகளில் மட்டும்.

மொத்தத்தில் இந்த மனிதனில் எடுத்த வழக்கை உதயநிதி வெற்றிகரமாக முடித்தது மட்டுமில்லாமல், ஒரு நடிகனாகவும் வெற்றி பெற்றுவிட்டார்.

ரேட்டிங்-3.25/5
மேலும் வாசிக்க…

வெற்றிவேல் திரை விமர்சனம்- Vetrivel Review

3:43 AM |
தாரை தப்பட்டை தன் குருநாதருக்காக கொடுத்தார் சசிகுமார். ஆனால், சசிகுமார் ரூட் இது இல்லையே, காதலுக்கு உதவி செய்ய வேண்டும், கஷ்டப்படுவோருக்கு உதவ வேண்டும், நாட்டிற்கு குறிப்பாக இளைஞர்களுக்கு தேவையான கருத்துக்களை பேஸ் வாய்ஸில் சொன்னால் தானே அது சசிகுமார் படம்.

அந்த சசிகுமார் எப்போது வருவார் என காத்திருந்த அனைவருக்கும் வசந்தமணி இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் தான் வெற்றிவேல்.

கதைக்களம்

சசிகுமாரும், ஆனந்த் நாக்கும்( ப்ரேமம் படத்தில் சாய் பல்லவியை திருமணம் செய்வாரே, அவரே தான்) அண்ணன், தம்பிகள். சசிக்கு படிப்பு வராமல் ஆசிரியரான அப்பா இளவரசிடம் திட்டு வாங்கிக்கொண்டே விவசாயத்திற்கு தேவையான உரம் வியாபாரம் பார்க்கின்றார். அதே சமயத்தில் தமிழ் சினிமாவின் வழக்கமான ஹீரோ என்ன செய்வார்களோ அதேபோல் மியா ஜார்ஜை காதலித்து டூயட்டும் பாடி வருகிறார்.

இவரின் தம்பி ஆனந்த் பக்கத்து ஊர் பெண் வருஷாவை காதலிக்கின்றார். வருஷா அந்த ஊர் தலைவர் பிரபுவின் மகள், இருந்தாலும் தம்பி விரும்பிவிட்டான் என்ற காரணத்திற்காக வருஷாவை தன் நண்பர்கள் உதவியுடன் கடத்தும் சமயத்தில் ஆள் மாற்றி நிகிலாவை கடத்துகிறார்கள்.

இதனால் நிகிலாவின் அப்பா தன் மகள் ஓடிப்போயிட்டாள் என ஊர் சொல்வதை கேட்கமுடியாமல் இறக்க சசி வேறு வழியில்லாமல் தன் காதலியான மியா ஜார்ஜை மறந்து நிகிலாவை திருமணம் செய்துக்கொள்கிறார்.

.இருந்தாலும் தன் தம்பி விரும்பிய பெண்ணை எப்படியாவது அவனுடன் சேர்த்து வைக்க வேண்டும் என மீண்டும் சசி கிளம்ப, பிரபு ஜாதி, கௌரவம் பார்த்து உடனே தன் தங்கை மகனுக்கு வருஷாவை திருமணம் செய்ய ஏற்பாடு செய்கிறார். இது தான் சமயம் என பிரபுவின் தங்கை விஜியும் ஒரு பரம்பரை பகை காரணமாக பழிவாங்க இந்த திருமணத்திற்கு சம்மதிக்க இறுதியில் வருஷா யாரை திருமணம் செய்துக்கொண்டார், சசி தன் தம்பியின் விருப்பத்தை நிறைவேற்றினாரா என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

இந்த சசி தான் சார் எங்களுக்கு வேண்டும் என்று கேட்கும் அளவிற்கு ஊருக்கு ஒரு எம்.ஜி.ஆராக வலம் வருகின்றார். இதுநாள் வரை நண்பர்களின் காதலுக்கு உதவி செய்த சசி, இதில் தன் தம்பியின் காதலுக்கு உதவி செய்கிறார். தன் தவறை உணர்ந்து நிகிலாவை திருமணம் செய்தாலும், அவரின் விருப்பத்தை கேட்காமலேயே அறிந்து அதன் படி நடந்துக்கொள்வது என குடும்பங்கள் கொண்டாடும் கதாபாத்திரம்.

மியா ஜார்ஜ் சசியுடன் பல நேரங்களில் தொலைப்பேசியில் பேசுகிறார். அவ்வளவு தான் பெரிதும் நடிக்கும் வாய்ப்பு இல்லை, சசியின் நிலை தெரிந்து அவர் காதலை விடும் இடத்தில் மனதில் நிற்கிறார். நிகிலா, வருஷா இருவருமே மிகைப்படுத்தி நடிக்காமல் அவர்கள் கதாபாத்திரத்தில் மிக யதார்த்தமாக நடித்து செல்கின்றனர்.

படத்தில் இவர்கள் அனைவரையும் விட எல்லோரையும் கவருவது பிரபு, விஜி தான். பிரபு மிகவும் சாந்தமாக இருந்தாலும் கௌரவம் காரணமாக முடிவு எடுத்து பின் தன் தவறை உணர்ந்து வருந்தும் இடத்திலும் அப்ளாஸ் அள்ளுகிறார். ஆனால், படம் முழுவதுமா தவறான முடிவா எடுத்து வருவது? விஜி இவரை தவிர வேறு யாரும் இதுபோல் மிரட்டலாக நடிக்க முடியாது. தன் அண்ணனை பழி வாங்க வேண்டும் என்று கடைசி வரை தன் திமிரை விடாமல் கலக்குகிறார்.

படத்தின் ஹைலேட் நாடோடிகள் டீம் ஒரு காட்சியில் ரிட்டர்ன் ஆவது தான். அவர்கள் பெண்ணை தூக்க வரும் இடத்தில் செய்யும் கலாட்டா தியேட்டரில் அரை மணி நேரத்திற்கு சிரிப்பு சத்தம் தான். டி. இமான் இசையில் ’உன்ன போல’ பாடல் ரசிக்க வைக்கின்றது. பின்னணி இசை கொஞ்சம் சத்தம் அதிகம். கதிரின் ஒளிப்பதிவு தஞ்சையை அழகாக படம் பிடித்துள்ளது.

க்ளாப்ஸ்

சசிகுமார் தன் வழக்கமான நடிப்பிற்கு திரும்பியுள்ளது.தம்பி ராமையா கொஞ்சம் ஓவர் ஆக்டிங் என்றாலும் அவர் வரும் காட்சி கலகலப்பிற்கு பஞ்சம் இல்லை.படத்தின் முதல் பாதி விறுவிறுவென செல்கின்றது.வசந்த மணியின் வசனங்கள், அதுவும் தற்போதுள்ள கிராம புற குடும்ப வாழ்க்கையில் பேசப்படும் இயல்பான வசனங்களாக ஈர்க்கின்றது.

பல்ப்ஸ்

முதல் பாதியில் அத்தனை வேகத்தை காட்டிய வசந்தமணி இரண்டாம் பாகத்தில் சில இடங்களில் தடுமாறுகிறார்.யூகிக்க கூடிய அடுத்தடுத்த காட்சிகள். படத்தில் வில்லன் கதாபாத்திரத்தை இன்னும் கொஞ்சம் பலப்படுத்தியிருக்கலாம்.மொத்தத்தில் குடும்பங்கள் கொண்டாடும் ”வெற்றி”வேல் இவர்.

ரேட்டிங்- 2.75/5
மேலும் வாசிக்க…

தெறி விமர்சனம் - Theri Movie Review

6:16 PM |
வித்தியாசமான மூன்று தோற்றத்தில் விஜய் நடித்து பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள படமிது. இதில் விஜய்யின் மகள் திவ்யா, மீனாவின் மகள் நைனிகாவும் இணைந்து நடித்துள்ளதால் குழந்தைகள் முதல் பெரியவர்களை கவரும் எனத் தெரிகிறது.

இவர்களின் எதிர்பார்ப்புகளை தெறி நிறைவேற்றியுள்ளதா என்பதை பார்த்து வருவோமா..?

நடிகர்கள் : விஜய், சமந்தா, எமி ஜாக்சன், பிரபு, மொட்டை ராஜேந்திரன், இயக்குனர் மகேந்திரன், பேபி நைனிகா, பேபி திவ்யா மற்றும் பலர்.

இசை : ஜி. வி. பிரகாஷ்

ஒளிப்பதிவு : ஜார்ஜ் சி வில்லியம்ஸ்

படத்தொகுப்பு : ஆண்டனி எல் ரூபன்

இயக்கம் : அட்லி

பிஆர்ஓ : டைமண்ட் பாபு

தயாரிப்பாளர் : கலைப்புலி எஸ் தாணு

இளைய தளபதி விஜய் நடிப்பில் பட்டித்தொட்டியெல்லாம் பட்டையை கிளப்ப இன்று உலகம் முழுவதும் வெளிவந்துள்ளது தெறி. ராஜா ராணி பிரமாண்ட வெற்றிக்கு பிறகு தளபதியுடன், அட்லீ கைகோர்த்துள்ள படம் என்பதே எதிர்ப்பார்ப்பு விண்ணை முட்டியது
விஜய் படத்திற்கென வழக்கம் போல் சில தடைகள்...ஆனால், இதையெல்லாம் அசல்ட்டாக தட்டி விட்டு பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்ப களம் இறங்கிவிட்டார் விஜய் குமார்
கதைக்களம்
தன் மகள் நைனிகாவுடன் கேரளாவில் நிம்மதியான, அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் விஜய். அங்கு நைனிகாவின் டீச்சர்எமிக்கு விஜய் மேல் காதல் ஏற்படுகின்றது. ஜாலியாக செல்லும் இவர் வாழ்க்கையில் உள்ளூர் ரவுடிகளால் தன் மகளுக்கு பிரச்சனை வர விஜய், அடித்து துவம்சம் செய்கிறார்.
பின் இத்தனை அமைதியாக இருக்கும் உங்களுக்குள் எப்படி இந்த மிருககுணம் என எமி கேட்க, பாட்ஷா ஸ்டைலில் விரிகிறது ப்ளாஷ்பேக்
ஊருக்குள் யார் தப்பு செய்தாலும் தட்டிகேட்கும் நேர்மையான போலிஸ் அதிகாரியாக விஜயகுமார், ஐடியில் பணிபுரியும் ஒரு ஏழை குடும்பத்தை சார்ந்த பெண் கற்பழிக்கப்படுவதை அறிகிறார்.
அவர் யார் என்பதை கண்டிப்பிடித்து நடு பாலத்தில் கொன்று தொங்க விட, அந்த இறந்தவரின் அப்பா எம் எல் ஏ மகேந்திரன்.
பின் அவர் விஜய் குடும்பத்தையே கொல்ல, உயிரை கையில் பிடித்துக்கொண்டு விஜய் கேரளா செல்கிறார்.
ஆனால், இவர் உயிரோடு இருப்பதை அறிந்த மகேந்திரன் மீண்டும் விஜய்யை துரத்த, இனி அமைதியாக இருந்தால் வேலைக்கு ஆகாது என விஜய் ஆடும் தெறியாட்டமே மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
இளைய தளபதி திரைப்பயணத்தில் பெஸ்ட் பெர்ப்பாமன்ஸ் என கூறலாம், நைனிகாவிற்கு அழகான தந்தையாக சமந்தாவிற்கு நல்ல கணவன் என அசத்துகிறார். அதிலும் விஜயகுமாராக போலிஸ் லத்தியை கையில் எடுத்து அதகளம் செய்கிறார்.
ப்ளாஷ் பேக் காட்சிகளில் வரும் சமந்தாவும் விஜய்யுடனான காதல் காட்சிகளில் மனதை கொள்ளை கொள்கிறார். அதிலும், தன் அப்பாவிடம் விஜய்யை அறிமுகப்படுத்தும் காட்சி, ராதிகாவிடம் எனக்கு அம்மா இல்லை, நீங்க என்னை உங்க பொண்ணா ஏத்துக்கோங்க என சொல்லும் காட்சியில் சூப்பர் சமந்தா.
எமி ஜாக்ஸன் தான் எதற்கு என்றே தெரியவில்லை, ப்ளாஷ்பேக் கேட்பதற்காவே படத்தில் வந்து செல்கிறார். இவை அனைத்தையும் விட படத்தில் நம்மை மிகவும் கவருவது நைனிகா குட்டி தான்.. இன்னும் பல வருடங்களுக்கு கால்ஷிட் புல் தான். அத்தனை அழகாக சின்ன வயதில் விஜய்க்கே கவுண்டர் கொடுத்து நடித்திருக்கிறார். தெறிடா பேபி.
படத்தில் பல காட்சியமைப்புகள் நிஜ வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அட்லீ காட்சிப்படுத்தியுள்ளார். பாலியல் தொல்லை, குழந்தை தொழிலாளர், வட இந்திய வேலையாட்களை இங்கு நடத்தும் விதம் என பல சென்சிட்டிவ் விஷயங்களை மாஸ் மன்னன் விஜய் வாயிலாக கூறியுள்ளார். ஜி.வி பின்னணி இசையில் கலக்கினாலும் கொஞ்சம் தீம் மியூஸிக்கில் தனி ஒருவன் சாயல்.
க்ளாப்ஷ் 
கண்டிப்பாக தளபதி தான்....அனைத்து ஏரியாவிலும் ரவுண்ட்கட்டி அடித்துள்ளார்.
விஜய்-சமந்தா காதல் காட்சிகள். மொட்டை ராஜேந்திரன் காமெடி, அதைவிட நைனிகா க்யூட் பெர்ப்பான்ஸ்
மகேந்திரன் கடைசி வரை கெத்தை விடாமல் சின்ன புன்னகையால் மிரட்டுகிறார். நடிப்பிற்கு வெல்கம் சார்.
படத்தின் காட்சியமைப்புக்கள்.. குறிப்பாக குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு வைத்தவரை நடு ரோட்டில் புரட்டியெடுக்கும் காட்சி, வட இந்தியா சிறுவன் அழகம் பெருமாள் இறந்தவுடன் சாக்லேட் சாப்பிடும் காட்சி (படம் பார்த்தவர்களுக்கு புரியும்) கிளாஷ் தெறி.
படத்தின் ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் மற்றும் ஸ்டண்ட் காட்சிகள், அதிலும் பஸ் ஏரியில் விழுந்த பிறகு விஜய் அந்த 100 அடி பாலத்தில் குதிக்கும் காட்சி பிரமிக்க வைக்கின்றது.
பல்ப்ஸ்
இரண்டாம் பாதியில் வரும் சில காட்சிகள் குறிப்பாக அந்த பேய் வருவது போன்ற காட்சி லாஜிக் மீறல்
சத்ரியன், என்னை அறிந்தால் சாயல் ரொம்பவே தெரிகின்றது.
மொத்தத்தில் தற்போது தெரிகிறதா அந்த புலி பதுங்கியது தற்போது பலமாக பாய்வதற்கு தான்...தெறியாட்டம்
ரேட்டிங் 3.25/5
எல்லோருக்கும் இனிய தமிழ் புது வருட வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.!

மேலும் வாசிக்க…

ஜித்தன் 2 திரை விமர்சனம் – Jithan 2 Movie Review

5:15 AM |
ஏறக்குறைய பத்து ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த ஜித்தனின் பகுதி இரண்டாக., ஆர் .பி.எம்.சினிமாஸ் ராகுல் தயாரித்து வழங்கி, அவரே இயக்கியும் இருக்கும் திரைப்படம் தான் ‘ஜித்தன் – 2’.

‘ஜித்தன் ‘படத்தின் க்ளைமாக்ஸில் இறந்து போன நாயகர் ரமேஷ், இதில் உயிருடன் வருகிறார். சற்றே, இன்னசென்டாக காட்சியளிக்கும் சூர்யா எனும் பெயருடைய அவர், இறக்கும் தருவாயில் தன் அப்பா சொன்னபடி, சொந்தமாக ஒரு வீடு வாங்குகிறார்.

கொடைக்கானல் பகுதியில் இருக்கும் எட்டாம் எண் உடைய அந்த வீடு ஒரு பேய் பங்களா. அந்த வீட்டிலிருக்கும் பேய், ரமேஷையும், ரமேஷ் பேய் ஓட்ட கூட்டி வரும் ப்ரண்ட்ஸ், போலீஸ், பெண் மந்திரவாதி உள்ளிட்ட எல்லோரையும் படுத்தும் பாடுதான் ஜித்தன் – 2 படம் மொத்தமும்!

ரமேஷ் – சூர்யாவாக செமயாய் பயந்து பயங்காட்டியிருக்கிறார். நடிப்பு விஷயத்தில் ‘ஜித்தன்’ ரமேஷ், ஜித்தன் என்பதை மீண்டும் நிருபித்திருப்பதற்காக பாராட்டலாம்.

பேயாக சிருஷ்டி டாங்கே, மெகாலி, மலையாளபெண் மந்திரவாதி, கருணாஸ், மயில்சாமி, அலட்டல் ஆந்திரா ரவுடியோகி பாபு, சோனா.. ஜார்ஜ், லொள்ளு சபா சுவாமிநாதன், நெல் லை சிவா, வேல்முருகன், ரோபோ சங்கர் உள்ளிட்டோர் இயக்குனர் சொன்னதை செய்திருக்கின்றனர்.

‘சின்னகுட்டி நாத்தனா சிம் கார்டை மாத்தினா….’ பாடல் ஸ்ரீகாந்த் தேவா இசையில் செம குத்து. ரீ – ரெக்கார்டிங்கும் பேய் படங்களுக்கே உரிய செம மிரட்டல்! S.K.மிட்செலின் ஒளிப்பதிவும் அப்படியே! படத்தொகுப்பாளர் மாருதி க்ரீஷின் கத்தரி, படத்தில் வரும் பேயை பார்த்து மிரண்டு பல இடங்களில் வேலை செய்ய, கத்தரிக்க மறந்திருப்பது பலவீனம்!

மற்றபடி, வின்சென்ட் செல்வாவின் கதை, திரைக்கதை, வசனத்தில் ராகுலின் இயக்கத்தில் முன்பாதி ஜித்தன் – 2 லாஜிக் இல்லாமல் பயமுறுத்தி இருந்தாலும் பின்பாதி படம் பரவசம்!

லாஜிக் பார்க்க மறந்து போனோ மென்றால், பேயின் மேஜிக் பார்த்து மிரண்டு விட்டு வரலாம்!

மொத்ததில், ”ஜித்தன் – 2′ – ‘மிரட்டும்பேய் சத்தம் டூ ரசிகன்!”
மேலும் வாசிக்க…

புகழ் விமர்சனம் - Pugazh Movie Review

7:42 PM |
தமிழ் சினிமாவில் இளைஞர்களின் அரசியல் குறித்து வந்த படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்த வகையில் இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்பதை மட்டுமின்றி ஒரு அரசியல் பிரமுகர் தவறு செய்தால் தட்டியும் கேட்க வேண்டும் என்ற கதைக்களத்தில் வெளிவந்துள்ள படம் தான் புகழ்.

ஜெய், சுரபி, RJ பாலாஜி, கருணாஸ் நடிக்க மணிமாறன் படத்தை இயக்கியுள்ளார்.

கதைக்களம்

தவறு எங்கு நடந்தாலும் தட்டிக்கேட்க வேண்டும் என்று தன் அப்பா, மாமா வளர்ப்பில் வளர்ந்தது மட்டுமின்றி ஊருக்கு ஒரு எம்.ஜி.ஆராக ஜெய் வலம் வருகிறார். சிறு வயதிலிருந்தே தன் ஊரில் இருக்கும் ஒரு மைதானத்தில் ஓடி ஆடி சந்தோஷமாக தன் நண்பர்களுடன் ஜெய் பொழுதை கழிக்கின்றார்.

கல்வி அமைச்சர் அந்த ஊரில் உள்ள ஒரு அரசியல் பிரமுகர் உதவியுடன் அந்த மைதானத்தை கைப்பற்றி ஒரு பில்டிங் கட்ட வேண்டும் என்று முயற்சி செய்கிறார். ஆனால், ஜெய் அது நாங்கள் வாழ்ந்து, விளையாடி வரும் மைதானம் என கங்கனம் கட்டி போராடுகிறார்.

தன் விரலை வைத்து தன் கண்களையே குத்துவது போல், ஜெய்யின் நண்பருக்கு அரசியல் ஆசைகாட்டி மேலும், அவரின் பணத்தேவையை பூர்த்தி செய்து அந்த மைதானத்தை பிடிக்க பார்க்கின்றார்.

ஆனால், எத்தனை சோதனை வந்தாலும் அந்த மைதானத்தை விட்டுக்கொடுக்காமல் இருக்கும் ஜெய், இத்தனை பெரிய அரசியலை தாண்டி வெற்றி பெற்றாரா என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

ஏற்கனவே இதே சாயலில் சமீபத்தில் மெட்ராஸ், அஞ்சல ஆகிய படங்கள் வந்தாலும், 100 காதல் கதைகள் வந்தாலும் நாம் பார்க்க தான் செய்கின்றோம். அந்த வகையில் இதுபோல் நல்ல கருத்துக்களை கொண்ட படங்கள் ஒரே சாயலில் வந்தாலும் பார்ப்பதற்கு என்ன? என்று தான் தோன்றுகின்றது.

ஜெய் தன் திரைப்பயணத்திலேயே பெஸ்ட் கதாபாத்திரம் என்று கூறலாம், புகழாக ஊரில் எந்த அநியாயம் நடந்தாலும் போராடும் குணமுடையவராகவும், தன்னை கொலை செய்ய முயற்சித்தவன் உன் நண்பன் தான் என பலர் சொல்லியும் கேட்காமல் நட்பிற்கு மரியாதை கொடுக்கும் இடத்திலும் செம்ம ஸ்கோர் செய்கிறார்.

சுரபி படத்திற்கு எந்த விதத்தில் தேவைப்படுகிறார் என்று தெரியவில்லை, பல காட்சிகளில் ஒட்டாமல் ஏதோ காதல் காட்சிகள் தேவை என்பதற்காக வந்து செல்கின்றார். இதே வரிசையில் தான் RJ பாலாஜி, காமெடி எல்லாம் ஓரங்கட்டி கொஞ்சம் எமோஷ்னல் முயற்சி செய்துள்ளார். சில இடங்களில் நன்றாக இருந்தாலும் பல இடங்களில் செட் ஆகவில்லை பாஸ்.

ஒரு தவறு நடந்தால் கண்டிப்பாக இளைஞர்கள் தட்டிக்கேட்க வேண்டும், அது எத்தனை பெரிய கொம்பனாக இருந்தாலும் தைரியமாக போராட வேண்டும் என்று ஒரு கதைக்களத்தை தேர்ந்தெடுத்ததற்காகவே இயக்குனர் மணிமாறனுக்கு ஒரு சல்யூட். ஆனால், இதை கமர்ஷியலாக எடுப்பதா? அல்லது ரியலிஸ்டிக்காக எடுப்பதா? என்பதில் கொஞ்சம் தடுமாறியுள்ளார்.

வேல்ராஜின் ஒளிப்பதிவு இரவு நேர காட்சிகளையும் தெளிவாக படப்பிடித்து அசத்துகின்றது. விவேக்-மெர்வின் இசையில் பாடல்கள் பெரிதும் கவரவில்லை என்றாலும் பின்னணி இசையில் மிரட்டியுள்ளனர்.

க்ளாப்ஸ்

நல்ல கதைக்களம், இதற்கு நன்றாக பொறுந்திய ஜெய் மற்றும் அவர் நண்பர்களின் கதாபாத்திரம். இவர்கள் அனைவரையும் விட லோக்கல் சேர்மனாக நடித்திருக்கும் வில்லன். பெரியதாக அதட்டலும் இல்லாமல், மேனரிசத்தில் கலக்கியுள்ளார். பல படங்களில் இனி வாய்ப்பு காத்திருக்கின்றது. ஜெய்யின் அண்ணனாக கருணாஸ், இத்தனை யதார்த்தமாக ஒரு அண்ணனை பார்த்திருக்க முடியாது. இனி கருணாஸிற்கு குணசித்திர கதாபாத்திரம் குவிய போகின்றது.

படத்தின் வசனம் பல இடங்களில் கைத்தட்ட வைக்கின்றது. அரசியலை விட வேறு எந்த தொழில் பணம் அதிகம் கிடைக்க போகின்றது. அரசியலுக்கு வாங்க, என்பது போல் பல வசனங்கள். போலிஸை வைத்துக்கொண்டே, போலிஸிற்கு தெரியாமல் மக்களுக்கு பணத்தை கொடுத்து விடுங்கள் என்று கூறுவது போன்ற காட்சியமைப்புக்கள் நகைச்சுவை தாண்டி நாட்டில் நடக்கும் விஷயத்தை அப்பட்டமாக காட்டுகின்றது.

பல்ப்ஸ்

முன்பே கூறியது போல் படத்தை எப்படி கொண்டு செல்வது என்று தெரியாமல் ஒரு கட்டத்திற்கு மேல் திரைக்கதை கொஞ்சம் தடுமாறுகின்றது.
படம் முழுவதும் யதார்த்தமாக சென்று கிளைமேக்ஸில் ஒரு மாஸ் ஹீரோ போல் ஜெய் நடந்துக்கொள்வது ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ஜெய்யின் நண்பர் தன் பதவியை ராஜினாமா செய்தால், தன் சேர்மன் பதவி போய் விடும் என்று தெரிந்தும் கிளைமேக்ஸில் அவரை வில்லன் வெட்ட நினைப்பது என்ன லாஜிக்?

மொத்தத்தில் தவறுகளை தட்டிக்கேட்கும் இளைஞர்களுக்கு மட்டுமில்லை, ஜெய்யிற்கும் இந்த படம் புகழ் சேர்க்கும்.
மேலும் வாசிக்க…

பிச்சைக்காரன் திரைவிமர்சனம் - Pichaikaran Review

2:06 AM |
விஜய் ஆண்டனி படங்களுக்கு நம்பி போகலாம் என்ற மனநிலையை அவர் ஏற்கனவே மக்கள் மனதில் பதித்து விட்டார். இதை தொடர்ந்து ட்ரைலரிலேயே ஹிட் அடித்து, இன்று பெரிய எதிர்ப்பார்ப்புடன் வெளிவந்திருக்கும் படம் பிச்சைக்காரன். இப்படத்தை இயக்குனர் சசி இயக்க, விஜய் ஆண்டனியே நடித்து தயாரித்துள்ளார்.

கதைக்களம்

சுமார் 900 கோடி சொத்துகளுக்கு அதிபதி விஜய் ஆண்டனி, தனக்கு எல்லாமே தன் அம்மா என்று வாழ்பவர், இவரின் தொழிற்சாலையில் ஒரு நாள் எதிர்ப்பாராத விபத்தால் விஜய் ஆண்டனி அம்மா கோமா நிலைக்கு செல்கிறார்.

இதை தொடர்ந்து ஆங்கில மருத்துவம், நாட்டு மருத்துவம் என எதற்கும் இயல்பு நிலைக்கு திரும்பாத நிலையில் ஒரு சாமியாரின் அறிவுரையால், 48 நாட்களுக்கு தான் ஒரு கோடிஸ்வரன் என்பதை மறந்து தன் அம்மாவிற்காக பிச்சைக்காரனாக வாழ்கிறார்.

ஒரு பிச்சைக்காரனாக தன்னை தயார்படுத்தி பிச்சை எடுக்கையில், பல பேரின் மூலம் இவருக்கு இன்னல்கள் வருகின்றது. மேலும், விஜய் ஆண்டனியின் மாமா அவரின் சொத்தை கைப்பற்ற சூழ்ச்சி செய்கிறார்.

விஜய் ஆண்டனியின் வேண்டுதல் நிறைவேறி அவருடைய அம்மா குணமானாரா? தனக்கு வரும் இன்னல்களை முறியடித்தாரா? என்பதை சசி மிக உணர்ச்சிப்பொங்க கூறியிருக்கிறார்.

படத்தை பற்றிய அலசல்

நாம் இந்த விமர்சனத்தின் முதல் வரியது கூறியது போல் இந்த படமும் விஜய் ஆண்டனியின் ஒரு சிறந்த தேர்வுதான். கோடிஸ்வர வாழ்க்கையில் இருந்து பிச்சைக்காரனாக அவர் மாற எடுக்கும் முயற்சிகள், தன் அம்மாவிற்காக ஏங்கும் மகனாகவும் செம்ம ஸ்கோர் செய்கிறார்.

சாட்னா ஏற்கனவே சலீம் படத்தில் நடிக்க வேண்டியவர், ஒரு சில காரணங்களால் இந்த படத்தில் கமிட் ஆகியுள்ளார். விஜய் ஆண்டனி ஒரு பிச்சைக்காரன் என்பது தெரியாமல் அவருடன் சேர்ந்து ஊற் சுற்றுகிறார், சந்தோஷமாக காதலிக்க, ஒரு கட்டத்தில் அவரு பிச்சைக்காரன் என்று தெரிந்து அவரை விட்டு விலக நினைத்தாலும், காதலால் அவருடனே பயணிப்பது என ரசிகர்களை கவர்கிறார்.

படத்தின் மிகப்பெரும் பலமே வசனங்கள் தான், பேப்பர் போட்றவன் பேப்பர் காரன், அப்போ பிச்சை போட்றவங்க தான பிச்சைக்காரன், பக்தர்கள் கோவிலுக்கு வெளியில் பிச்சை எடுக்கிறார்கள், நாம் கோவிலுக்கு வெளியே பிச்சை எடுக்கின்றோம் என சாட்டையடி வசனங்களை நகைச்சுவையாக கூறியுள்ளனர்.

படத்தின் இசையும் விஜய் ஆண்டனி தான் என்பதால், படத்திற்கு என்ன தேவையோ அதை அழகாக கொடுத்துள்ளார், தேவையில்லாத பாடல்கள் இல்லாமல் கதைக்கு தேவையான இடத்தில் தான் பாடல்கள் வருகின்றது. பின்னணி இசையிலும் ஜொலிக்கின்றார்.

ஆனால், விஜய் ஆண்டனி தற்போதே முழு மாஸ் ஹீரோவாகி விட்டார் என்று தான் சொல்ல வேண்டும், எத்தனை பேரை நீங்கள் கூட்டி வந்தாலும் அடித்து தும்சம் செய்கிறார், அது தான் கொஞ்சம் யதார்த்தத்தை மீறி நிற்கின்றது. பிரசன்ன குமாரின் ஒளிப்பதிவு பிச்சைக்காரர்கள் வாழ்க்கையை அழகாக படம்பிடித்துள்ளது.

க்ளாப்ஸ்

சசி இது ஒரு உண்மைக்கதை என்று தான் படத்தை முடிக்கின்றார், இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள், அவர்களுக்கும் மனதுண்டு, என பிச்சைக்காரர்கள் வாழ்க்கையை அழுகை, சோகம் என எடுக்காமல் அவர்களுக்கான உலகத்தில் சந்தோஷமாக இருப்பது போல் காட்டியதற்காகவே கைக்கொடுத்து பாராட்டலாம்.

படத்தின் வசனம், இந்த உலகத்தில் பணக்காரன், ஏழை, பிச்சைக்காரன் எல்லோரும்க்கும் ஒரே எதிரி பசி போன்ற வசனங்கள் கைத்தட்ட வைக்கின்றது.

காமெடிக்கு என்று படத்தில் யாருமில்லை என்றாலும், விஜய் ஆண்டனியின் மாமா அவருடைய ட்ரைவர் செய்யும் கலாட்டா மற்றும் வில்லன் கேங்கில் பிச்சைக்காரனிடம் அடி வாங்கியது குறித்து பேசும் வசனங்கள் சிரிப்பை வரை வைக்கின்றது.

மேலும் பிச்சைக்காரர்கள், மனநோயளிகளை ஒரு சிலர் தங்கள் சுய நலத்திற்காக எப்படியெல்லாம் பயன்படுத்துகிறார்கள் என்பதை வெட்ட வெளிச்சமாக காட்டியுள்ளனர்.

பல்ப்ஸ்

என்ன தான் உண்மைக்கதை என்றாலும் கொஞ்சம் யதார்த்தத்தை விலகி தான் நிற்கின்றது.

விஜய் ஆண்டனி சண்டைக்காட்சிகளில் கையில் யார் கிடைத்தாலும் அடித்து விடுவார் போல. 4வது படத்திலேயே இத்தனை பேரை அடிக்க வேண்டுமா?

இன்னும் ‘நான்’ விஜய் ஆண்ட்னியை மறக்க முடியவில்லை, பல இடங்களில் நான், சலீம் விஜய் ஆண்டனியை நினைவுப்படுத்துகிறார்.

மொத்தத்தில் இந்த பிச்சைக்காரன் எல்லோராலும் கவனிக்கப்பட வேண்டியவன்.

ரேட்டிங்- 3/5
மேலும் வாசிக்க…

24 டீசர் விமர்சனம் - 24 Teaser Review

2:25 AM |
முதன்முதலாக சூர்யா மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்துள்ள '24' படத்தின் டீசர் வரும் வெள்ளியன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளநிலையில் நமக்காக படக்குழுவினர் டீசரின் சிறப்புக்காட்சியை திரையிட்டு காட்டியுள்ள நிலையில் படக்குழுவினர்களுக்கு நன்றி தெரிவித்து கொண்டு இந்தடீசர் விமர்சனத்தை ஆரம்பிக்கின்றோம்.

ஒரு நிமிடம் எட்டு வினாடிகள் ஓடும் இந்த டீசரில் சூர்யா மூன்றுவிதமான கெட்டப்புகளில் தோன்றுகிறார். முதன்முதலாக சூர்யா அசுரத்தனமான வில்லன்கேரக்டரில் நடித்துள்ளார். மேலும் ஒரு வயதான கேரக்டரும், இளமையான கேரக்டர் என சூர்யாவின் கேரக்டர்கள் அமைந்துள்ளது. இந்த இரண்டுவேடங்களும் தந்தை-மகன் கேரக்டர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த டீசரில் இருந்து விஞ்ஞானி கெட்டப்பில் குறுந்தாடியுடன் வரும் சூர்யாவின் பெயர் ஆத்ரேயா என்றும், அவர்தான் இந்த படத்தின் வில்லன் என்பதும்தெரிய வருகிறது. மேலும் வில்லன் சூர்யாவும், வயதான சூர்யாவும் டுவின்ஸ் ஆக இருக்க வாய்ப்பு உள்ளது. "ஒரு கருவறையில் உதித்தோம்.... ஒரு சிலநொடி இடைவெளியில் ஜனித்தோம்" என்ற வசனம் டீசரின் ஆரம்பத்தில் ஒலிக்கின்றது. இதிலிருந்தே இருவரும் டுவின்ஸ் இருக்கலாம் எனயூகிக்கப்படுகிறது.

மேலும் வயதான சூர்யாவுக்கு நித்யாமேனனும் இளமையான சூர்யாவுக்கு சமந்தாவும் ஜோடிகளாக நடித்துள்ளனர். சூர்யாவின் மூன்று கேரக்டர்களும்குறிப்பாக வில்லன் ஆத்ரேயா கேரக்டர் சூர்யாவின் நடிப்புக்கு சரியான தீனி போட்டுள்ளதால் இந்த கேரக்டர் சூர்யாவின் ரசிகர்களுக்கு பெருவிருந்தாகஇருக்கும் என்பது மட்டும் உறுதி.
மேலும் வாசிக்க…

கணிதன் விமர்சனம் - Kanithan Review

11:29 PM |
நடிகர் : அதர்வா
நடிகை : கேத்ரீன் தெரசா
இயக்குனர் : சந்தோஷ்
இசை : டிரம்ஸ் சிவமணி
ஓளிப்பதிவு : அரவிந்த் கிருஷ்ணா

தூர்தர்ஷன் சேனலில் செய்தி வாசிப்பாளராக இருக்கும் ஆடுகளம் நரேனுக்கு பிபிசி சேனலில் பணிபுரிய வேண்டும் என்பது நீண்டகால ஆசை. ஆனால் அது நிறைவேறாமலே இருக்கிறது.

இவரது மகனான அதர்வா இன்ஜினியரிங் படித்து விட்டு மனோபாலா நடத்தி வரும் தனியார் சேனலில் நிருபராக பணிபுரிந்து வருகிறார். தந்தையின் நிறைவேறாத கனவை நிறைவேற்றும்பொருட்டு தான் பிபிசி சேனலில் சேரவேண்டும் என்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார் அதர்வா.

இந்நிலையில், மனோபாலாவின் மகளான கேத்ரின் தெரசாவுக்கும் அதர்வாவுக்கும் காதல் மலர்கிறது. ஒருநாள் போலி சர்டிபிகேட் மூலம் பல வங்கிகளில் பணம் வாங்கி ஏமாற்றி இருப்பதாக கூறி அதர்வாவை போலீஸ் கைது செய்கிறது.

முதலில் எதுவும் புரியாத அதர்வாவுக்கு, பின்னர் தன்னுடைய சர்டிபிகேட் மட்டுமல்லாமல், பல இளைஞர்களின் சர்டிபிகேட்டுகளும் இதுபோல் போலியாக எடுத்து பல வங்கிகளில் பணத்தை கொள்ளையடித்திருப்பது தெரியவருகிறது.

செய்யாத தவறுக்கு ஜெயிலுக்கு செல்லும் அதர்வா, அங்கிருந்து வெளியே வந்துபோலி சர்டிபிகேட் மூலம் பண வாங்கிய கும்பலை கண்டுபிடித்தாரா? தனது லட்சியமான பிபிசி சேனலில் சேர்ந்தாரா? கேத்ரின் தெரசாவை கரம் பிடித்தாரா? என்பதே மீதிக்கதை.

படத்தின் முதல் பாதியில் நிருபராகவும் இரண்டாம் பாதியில் ஆக்‌ஷன் ஹீரோவாகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் அதர்வா. தன்னைத்தானே காப்பாற்றிக்கொள்ள இவர் எடுக்கும் முயற்சிகள் ரசிக்கும் படியாக உள்ளது. பாடல் காட்சிகளில் சிறப்பாக நடனமாடியிருக்கிறார்.

கேத்ரீன் தெரசா அவரது முந்தைய படமான ‘மெட்ராஸ்’, ‘கதகளி’ ஆகியவற்றில் பார்த்திராத ஒரு புத்துணர்ச்சியான கேத்ரீன் தெரசாவை இப்படத்தில் பார்க்க முடிகிறது. கவர்ச்சியில் தாராளம் காண்பித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். நரேன், பாக்யராஜ், கருணாகரன் உள்ளிட்ட பலர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

வில்லனாக நடித்திருக்கும் தருண் அரோரா பார்வையாலேயே மிரட்டியிருக்கிறார். வில்லனுக்கு உண்டான தோற்றம் கொண்டு ஸ்டைலீஷாக நடித்திருக்கிறார். ஆர்ப்பாட்டம் இல்லாமல் அளவான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஊடகம் சார்ந்த கதையை எழுதி இயக்கியிருக்கும் இயக்குனர் சந்தோஷுக்கு பாராட்டு. ஒரு நிருபருக்கு ஏற்படும் சிக்கல்களை அவர்களின் திறமைகள் மூலம் எப்படி எதிர்கொள்வது என்பதை சிறப்பாக காண்பித்திருக்கிறார். நிருபர் கதாபாத்திரத்திற்கு அதர்வாவை தேர்வு செய்தது சிறப்பு. போலி சான்றிதழ்களை வைத்து வைத்து செய்யும் தில்லுமுல்லுகளை அழகாகவும் தைரியமாகவும் சொல்லியிருக்கிறார்.

டிரம்ஸ் சிவமணியின் இசை படத்திற்கு பெரும் பலம். இவருடைய இசையில் பாடல்கள் அனைத்தும் அருமை. அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவும் சிறப்பாக அமைந்திருக்கிறது.

மொத்தத்தில் ‘கணிதன்’ தேர்ச்சி.
மேலும் வாசிக்க…

மிருதன் விமர்சனம் - Miruthav Review

10:13 PM |
மிருதன் என்பதன் பொருள்... மிருகமான மனிதன் என்பதே!

ஜெயம் ரவி, லக்ஷ்மிமேனன் நடிக்க, குளோபல் இன்போடெயின்மெண்ட் எஸ்.மைக்கேல் ராயப்பன் வழங்க, செராபின் ராய சேவியர் தயாரித்திருக்க,நாய்கள் ஜாக்கிரதை படத்தை இயக்கிய சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் வெளிவந்துள்ள இரண்டாவது படம் தான் மேற்படி மிருதன்.

கதைப்படி, போக்குவரத்து போலீஸ் வேலையை விரும்பி ஏற்றுக்கொண்டு ஊட்டியில் பணியாற்றும் இளைஞரான ஜெயம் ரவி, பெற்றோர் இல்லாதவர். தன் தங்கை பேபி அனிக்காவுடன்., இவருக்காக அவர், அவருக்காக இவர், என அண்ணன், தங்கை இருவரும் ஒருவர் மீது, ஒருவர் உயிரை வைத்தபடி ஊட்டியில் மகிழ்ச்சிகரமாக வசிக்கின்றனர். இந்நிலையில், யதேச்சையாக தான் சந்திக்கும் இளம் பெண் மருத்துவர் லக்ஷ்மி மேனன் மீது ஜெயம் ரவிக்கு காதல் வருகிறது.

ஆனால், அதேநேரம், லட்சுமி மேனனுக்கு ஒரு மருத்துவ காதலன் இருப்பதும் ரவிக்கு தெரிய வருகிறது.இந்நிலையில், மனிதனின் மூளையில் மிருகவெறியை மட்டுமே முழுக்க முழுக்கத் தூண்டி விட்டு உடலை உருக்குலைத்துக் கோரமாக்கி, சக மனிதனையே வெறி பிடித்துக் கடிக்கவைக்கும் அதி அபாயகரமான வைரஸ், அடங்கிய திரவம் ஒன்று ஊட்டி பகுதியில் ஆய்வகத்துக்கு எடுத்துச் செல்லும்போது சாலையில் கொட்டி விடுகிறது.

அதை நாய் ஒன்று, நக்கி குடித்துவிட, அந்த நாய்க்கு உடனடியாக வெறி பிடிக்கிறது. வெறி பிடித்த அந்தநாய் ஒரு மனிதனைக் கடிக்கிறது. அதனிடம் கடிபட்ட அந்த மனிதன் மிருக வெறியோடு, தன் அம்மாவைக் கடிக்க, அவரும்  உடனடியாக  தன் மருமகளைக் கடிக்க,  குடும்பத்திற்கே வெறி பிடிக்கிறது. மொத்த குடும்பமும் வெளியே வந்து, மற்ற மனிதர்களைக் வெறியோடு துரத்தி கடிக்கின்றனர். இப்படியே அந்த பகுதியில் கடிபடும் எல்லோரும் மற்றவர்களைக் கடிக்கும் மிருக வெறி மனிதர்களாக அதாவது மிருதன்களாக மாறுகின்றனர்.

சில மணி நேரங்களில், இரண்டொரு நாட்களில் மிருக - மனிதர்கள், அதாங்க., மிருதன் களின் எண்ணிக்கை அதிகம் ஆகி ஊட்டிக்குள் எமர்ஜென்சி கால தடை உத்தரவு அறிவிக்கப்படுகிறது.மனித குலத்தை வேரோடு அழிக்க முயலும் அந்தகொடிய வைரசுக்கு ஏற்றமாற்று மருந்து கண்டுபிடித்து,

மேற்கொண்டு மிருதன்கள் உருவாவதை தடுப்பதோடு, மிருதன்களாக மாறிய ஆண், பெண்களை மனிதர்களாக்கும் பணியில் பெண் மருத்துவர் லட்சுமி மேனனும், அவரது மருத்துவக் குழுவும் ஈடுபட, அதற்கு தன் தங்கையுடன நாயகர் ஜெயம் ரவியும், அவரது சக போலீஸ் நண்பர் கருணாகரனும் எவ்வாறு உதவுகிறார்கள்..? என்னும் கதையோடு, வெகு வேகமாக பரவும் வெறிநோயை அறவே தீர்க்கும் மருந்து கண்டுபிடிக்கப்பட்டதா?,

லட்சுமி மேனன் மீதான ஜெயம் ரவி யின் காதல் கைகூடியதா?- இல்லையா ...? கொலைவெறி நோய் பரப்பும் மிருதன்களிடம் இருந்து, இவர்கள் தப்பித்தார்களா? இல்லை, அவற்றிடம் கடி வாங்கி இவர்களும் மிருதன் ஆனார்களா...? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு கூட்டம் கூட்டமாக வந்து மிரட்டும் மிருதன்களுடன் வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் விடை சொல்லி, மிருதனின் அடுத்த பாகத்துக்கும் கட்டியம் கூறி முடிகிறது மிருதன்படத்தின் மீதிக் கதை....!தனி ஒருவன்,

பூலோகம்  என ஹாட்ரிக் வெற்றிகளைத் தந்த ஜெயம் ரவி., இப்படத்தில் நடிக்க கொஞ்சம் யோசித்திருக்கலாம் என மிருதன் மொத்த படத்தையும் பார்க்கும் போது சற்றே தோன்றினாலும், ஜெயம் ரவி இல்லாமல் இந்தப் படத்தை யோசிக்கக் கூட முடியாது... எனும் அளவிற்கு ஆரம்பம் முதல் இப்படத்தில் ரசிகர்களை கவர்பவர் ரவி ஒருவரே! லஞ்ச லாவண்ய போக்குவரத்துக் காவலராக, பாசமுள்ள அண்ணனாக, கண்ணியம் மிக்க காதலனாக, நட்புக்கு தலை வணங்கும் நல் நண்பனாக , சராசரி மனிதனாக, இறுதியில் மிருதனாக, மிருதனான பின்னும் காதல் மணம் மாறாத காதலானாக ஜெயம் ரவி பிரமாதப்படுத்தியிருக்கிறார்.

பேஷ், பேஷ்!லட்சுமி மேனன் இரக்க சுபாவமுள்ள கோபதாபம் நிரம்பிய இளம் பெண் மருத்துவராக, தன்னை, காதலிப்பவருக்கும், கணவராக போகிறவருக்கும் இடையில் கிடந்து தவிக்கிற தவிப்பு கச்சிதம் லட்சுமியும் அதில் நச் - டச் கொடுத்துள்ளார். பலே, பலே!காளி வெங்கட்., ஜெயம் ரவியின் சக போலீஸ் நண்பராக அவ்வப்போது அடக்க மாட்டாத சிரிப்பை ஏற்படுத்துகிறார்.

நாயகி லட்சுமி மேனனின் எம்பி அப்பாவாக பந்தா பேர்வழியாக வரும் ஆர்என்ஆர்.மனோகர். மிருதன்களை தன் கட்சித் தொண்டர்களாக கருதி ஆம்புலன்ஸில் இருந்து இறங்குவதும், பின் துண்டைக்காணோம், துணியைக் காணோம் என ஓடுவதும், அவரது தொண்டி சிறிது வண்டி பெரிது சீரியஸ் டைம் காமெடி டயலாக் உள்ளிட்டவையும்  ஹாஸ்யம் !ஸ்ரீமன், ஜீவா ரவி, ராகவன், பேபி அனிக்கா, சுரேந்திரன், கிரேன் மனோகர் அமித் பார்கவ், திலிப்ராயன், நெல்லை சிவா, சூப்பர் குட் கண்ணன், கே.ஆர்.ரஞ்சன் ஆகியோரும் தங்கள் பாத்திரங்களுக்கு பலம் சேர்க்க சிறப்பாய் நடித்துள்ளனர்.

இமானின் இசையில், அந்த முன்னாள் காதலி... பாடலும், மிருதன் பாடலும் மனசுக்குள் மகுடி வாசிக்கிறது பின்னணி இசை சில பல காட்சிகளில் ஒஹோ! சில காட்சிகளில் ஒ.கேங்கோ.... எனும் அளவில் இருக்கிறது. வெங்கடேஷின் ஒளிப்பதிவும், கிராபிக்ஸ், சி.ஜி.. உள்ளிட்டவைகளும்  சேர்ந்து காட்சிகளின் திகிலுக்கும் பரபரப்பிற்கும் பெரும்பலம் சேர்க்கின்றன.

கே.ஜெ.வெங்கட் ரமணனின் படத்தொகுப்பு முன்பாதியில் பக்கா அப்பு, பின் பாதியில் பக்கா ஆப்பு! கணேஷ்குமாரின் பிரமாண்டசண்டைக் காட்சிகளும் சபாஷ் ரகம்! மனிதர்களுக்கு வைரஸ் பரவும் அந்த அம்மா, பிள்ளை, மருமகளுக்கு வெறி பிடிக்கும் காட்சி, விவரிக்கப்பட்ட விதம் அருமை, புதுமை! பெரும்பாலான காட்சிகளில் கோர முகத்துடன் இவ்வளவு இணை, துணை நடிகர்கள் தேவை தானா? என்பது இயக்குனருக்கே வெளிச்சம்!

சோம்பி தன்மை கதையில் சென்டிமென்ட்டை கலக்க வேண்டும் என்று முடிவானபின் டாப் கியரில் படமும் காட்சிகளும் எகிறியிருக்க  வேண்டாமா? கதைப்படி, சோம்பி ஆகி கடிப்பவர்களும், அப்படி சோம்பியானவர்களிடம் கடிப்படுபவர்களும் தங்களுக்குள் ஏதேதோ மாற்றங்கள் நிகழ்வதை உணர்ந்து மாறும் காட்சிகளை இன்னும் உணர்ச்சிபூர்வமாக படமாக்கியிருக்கலாம்.

அதிலும் குறிப்பாக தண்ணீரைக் கண்டால் சோம்பி பயப்படும் என்னும் கான்செப்ட்டுக்கு  ஏற்ப., அதை வைத்து தண்ணீரைப் பயன்படுத்தி, இன்னும் மிரட்டலான  காட்சிகளை காட்சிப்படுத்தாமல் க்ளைமாக்ஸில் ஒரு தீயணைப்பு வண்டியின் ஒரு லாரி தண்ணீரோடு சோம்பியின் தண்ணீர் பய காட்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருப்பது இடிக்கிறது.மிருதன் மாதிரி ஸோம்பி வகைப்படங்களின் மிகப் பெரிய பலமே ஒரு கட்டம் வரை திகில் கூட்டும் அமைதியும், எப்போது எங்கே எப்படி ஸோம்பிக்கள் வந்து தாக்கும்?அவற்றால் மனிதர்கள் கடிக்கப்படுவது  எப்போது நடக்கும்..? என்ற திகிலும் , சஸ்பென்சும எதிர்பார்ப்பும் தான்.

ஆனால், மிருதனில் சோம்பிக்கள் எல்லாம் அடுத்தடுத்து வந்து., துப்பாக்கிக் குண்டுக்கு குறிப்பாக ஹீரோ ஜெயம் ரவியின் துப்பாக்கி ரவைக்குஇரையாகிக் கொண்டே இருப்பது சலிப்பை தருகிறது. இரண்டாம் பகுதி முழுக்க இதுவே மீண்டும் மீண்டும் நிகழ்வது மேலும் சலிப்பை ஏற்படுத்துகிறது.

டாக்டர் சோம்பியின் சஸ்பென்ஸ் உடைபடும் இடமும் நம்பும்படியாக படமாக்கப்படவில்லை.இன்றைய சூழலில், எதாவது வித்தியாசமாக ரசிகர்கள் எதிர்பார்க்கும் நிலையில் இதுவரை தமிழ் சினிமாவில் சொல்லப்படாத ஒரு விஷயத்தை கையில் எடுத்து இருப்பது தான் இந்தப் படத்தின் சிறப்பு. ஆனால் , அதை பிரமாண்டமாக, பிரமாதமாக சொல்ல முடியாதது தான் மிருதனின் மிகப் பெரும் சறுக்கல்!

அதே மாதிரி ஹீரோ ஜெயம் ரவி சுடும் வரை மனிதர்களின் கழுத்தை கடிக்காமல் சோம்பிகள் மோப்பம் பிடிப்பதும் மோர்ந்து பார்ப்பதும் காமெடி.இதுமாதிரி ஒருசில குறைகள் இருந்தாலும் சக்தி செளந்தர்ராஜனின் இயக்கத்தில்,

ரவியின் மிருதன் - ரசிகன் சிலருக்கு த்ரில்லன் சிலருக்கு வருத்தன்!
மேலும் வாசிக்க…

சேதுபதி திரைவிமர்சனம் - Sethupathi Review

2:29 AM |
தமிழ் சினிமாவில் ஹீரோக்கள் என்ன தான் கேங்ஸ்டர் படம் நடிச்சாலும் சூப்பர் ஸ்டார் முதல் சமீபத்திய ரைசிங் ஸ்டார் வரைக்கும் போலிஸ் ட்ரஸ் அணிந்தால் தான் செம்ம கெத்து. அப்படியிருக்க தொடர்ந்து கிளாஸ் வகை படங்களை செய்து வரும் விஜய் சேதுபதிக்கு மட்டும் மாஸ் காட்ட ஆசை இருக்காதா என்ன?.

அதனால் தான் தன் பேவரட் இயக்குனர் அருணுடன் இணைந்து போலிஸ் லத்தியை கையில் எடுத்திருக்கிறார் சேதுபதி.

கதைக்களம்

படத்தின் ஆரம்ப காட்சியிலேயே ஒரு போலிஸை ஸ்கெட்ச் போட்டு எரித்து விடுகின்றனர். அந்த கொலை விஜய் சேதுபதி போலிஸாக இருக்கும் ஏரியாவில் நடக்க, இந்த கேஸை விஜய் சேதுபதி கையில் எடுக்கிறார்.

போலிஸை கொன்றால் அவன் எவனாக இருந்தாலும் தூக்க வேண்டும் என துடிப்புடன் பல தடயங்களை கண்டுப்பிடிக்க, அந்த ஊரில் மிகப்பெரும் கட்டப்பஞ்சாயத்து நடத்தும் வாத்தியார் என்பவர் தான் இந்த கொலைக்கு காரணம் என தெரிகின்றது.

ஊரே அவரை பார்த்து பயந்து நடுங்கும் நேரத்தில் சேதுபதி தைரியமாக அவரை கைது செய்கின்றார். இந்த அவமானத்திற்காக விஜய் சேதுபதியை பழிவாங்க, செயின் திருட்டு வழக்கில் வரும் சிறுவர்களை துப்பாக்கியை காட்டி மிரட்டி விசாரிக்கும் போது, யாரோ துப்பாக்கியை ரீலோட் செய்து அவர் கையில் கொடுக்கின்றனர்.

அவரும் யதார்த்தமாக சுட, சிறுவன் கழுத்தில் புல்லட் பாய்கின்றது. இதன் பிறகு விஜய் சேதுபதியை தற்காலிக வேலை நிறுத்தம் செய்ய, வாத்தியார் ஆட்டம் அதிகமாகின்றது. பின் வழக்கம் போல் தன் மீசையை முறுக்கி, விஜய் சேதுபதி தன் இரண்டாவது இன்னிங்ஸில் வாத்தியாரை எப்படி பந்தாடுகிறார் என்பதை மாஸ் கமர்ஷியலாக கூறியிருக்கிறார் அருண்.

படத்தை பற்றிய அலசல்

அட..இது விஜய் சேதுபதி தானா!!! என ஆச்சரியப்பட வைக்கின்றது. முறுக்கு மீசை, தைரியமான போலிஸ் ரம்யா நம்பீசனுக்கு அன்பான கணவன், குழந்தைகளுக்கு பாசமுள்ள அப்பா என்று முழு மாஸ் ஹீரோவாகவே மாறிவிட்டார். கிளாஸில் இருந்து மாஸிற்கு ப்ரோமோஷன் கிடைத்து விட்டது சேதுபதி. வாழ்த்துக்கள்.

ரம்யா நம்பீசன் இரு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்ததற்கே பாராட்டலாம், இளம் நடிகைகள் யாரும் துணிந்து நடிப்பார்களா என்றால் கேள்விக்குறி தான், ‘என் புருஷன் காலையில சண்டைப்போட்டா, மாலையில் என்னை கொஞ்ச வருவான், அதுக்காகவாது நான் அவர் கூட இருக்க வேண்டும்’ என விஜய் சேதுபதிக்கு சப்போர்ட்டாக கலக்கியுள்ளார்.

படத்தின் மிகப்பெரிய ஹைலைட் விஜய் சேதுபதியின் கதாபாத்திர வடிவம் தான், ஒரு மாஸ் போலிஸ் என்றாலும் எந்த இடத்திலும் செயற்கையாக தெரியக்கூடாது என்று கொஞ்சம் மெனக்கெட்டுள்ளனர். குழந்தை முன்பு புகார் கொடுக்க வரும் கணவனை, குழந்தையை வெளியே போகச் சொல்லி விட்டு திட்டுவது, தன் மகள் முன்பு மனைவியை அடித்தததை சமாளிப்பது என யதார்த்த காப் இந்த சேதுபதி.

தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு பல காட்சிகள் மிகவும் ரியலாக உள்ளது, அதை விட ஸ்ரீகர் பிரசாத்தின் எடிட்டிங், வேகமான திரைக்கதைக்கு செம்ம ப்ளஸ் கூட்டியிருக்கின்றது. தெகிடி படத்தை தொடர்ந்து நிவாஸின் இசை சேதுபதியிலும் மிரட்டல். ஆனால், தீவிர அனிருத் ரசிகராக இருப்பார் போல, விஐபி, காக்கிசட்டை இசையெல்லாம் வந்து போகின்றதே.

க்ளாப்ஸ்

படத்தின் இரண்டாம் பாதி, விறுவிறுவென செல்கின்றது, அதிலும் விஜய் சேதுபதி வீட்டை முற்றுகையிடும் வில்லன் கும்பலை போனிலேயே மிரட்டும் சீன் தியேட்டர் விசில் சத்தத்தில் அதிர்கின்றது.

படத்தில் முதல் பாதியில் ஆங்காங்கே வரும் சின்ன சின்ன டுவிஸ்டுகள், நம் கவனம் ஒரு போலிஸிடம் இருக்கும் போது, அதை அழகாக திசை திருப்பும் காட்சி.

ஸ்ரீகர் பிரசாத்தின் விறுவிறு எடிட்டிங். விஜய் சேதுபதி- ரம்யா நம்பீசன் காதல் காட்சிகள்.

பல்ப்ஸ்

பார்த்து பழகி போன வில்லன், இரண்டாம் பாதியில் யூகிக்க கூடிய டுவிஸ்டுகள்.

படத்தின் முதல் பாதியில் பல காட்சிகள் பெரிய விளக்கம் இல்லாமல் உடனே முடிவது போல் இருக்கும் காட்சியமைப்புகள்.

வில்லன் விஜய் சேதுபதி மீது காட்டும் கோபம், அவர் குடும்பதை தூக்க ப்ளான் போடுவது தான் ஏன் இத்தனை தாமதம் என்று தெரியவில்லை, அதற்குள் கிளைமேக்ஸே நெருங்கிவிடுகின்றது.

மொத்தத்தில் ரவுடி விஜய் சேதுபதியை விட இந்த போலிஸ் சேதுபதி செம்ம கெத்து.

ரேட்டிங்- 3.25/5
மேலும் வாசிக்க…

ஜில் ஜங் ஜக் திரை விமர்சனம் - Jil Jung Juk Review

9:40 PM |
நடிகர் சித்தார்த் ‘ஏடாகி எண்டர்டைன்மெண்ட்’ எனும் பட நிறுவனம் ஆரம்பித்து சொந்தமாக தயாரித்து நாயகராக நடித்தும் வெளிவந்திருக்கும் படம் தான் “ஜில்.ஜங். ஜக்.”

ஒரு பெரும் போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவன் தெய்வா எனும் தெய்வநாயகம். பெட்ரோல் தட்டுப்பாடு, இன்னும் சில அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடுகளால் 2020-ம் ஆண்டில் தொழில் முடங்கிப் போன அந்த தாதா, தன்னிடம் கடைசி, கடைசியாக இருக்கும் நான்கு கோடி மதிப்புள்ள சரக்கை ஹைதராபாத்துக்கு வரும் சைனிஸ் பார்ட்டியிடம் கைமாற்றி விட்டு காசு பார்க்க நினைக்கிறார்.

ஆனால், போட்டியாளர்கள் கண்களிலும், போலீஸீன் கண்களிலும் மண்ணைத்துவி விட்டு சரக்கை ஹைதராபாத்துக்கு கொண்டு செல்ல தன் பழைய ஆட்களையும், பழைய பார்முலாவையும் நம்பாத தெய்வநாயகம், தேர்ந்தெடுக்கும் மூன்று பேரும், ஒரு காரும், அது சார்ந்த காமெடி கதையும்தான் ஜில் ஐங் ஜக் மொத்தப் படமும்!

நாஞ்சில் சிவாஜி எனும் ‘ஜில்’லாக சித்தார்த், தில்லாக இப்படி ஒரு கதையை தேர்ந்தெடுத்து நடித்து கூடவே இப்படத்தை தயாரித்தும் இருக்கிறார்.

கதைப்படி, பேச்சில் வல்லவரான சித்தார்த் படம் முழுக்க பேசும் வார்த்தைகள் புரியாது இருப்பது ரசிகனை நெளிய வைக்கிறது. என்றாலும் நடிப்பில் நிறையவே ஸ்கோர் செய்திருப்பதற்காக சித்தார்த்தை பாராட்டலாம்.

சித்தார்த்தின் நண்பர்களாக ஜங் – ஜங்குலிங்கமாக வரும் அவினாஷ்ரகுதேவனுக்கும், ஜக் – ஜாகுவார் ஜகன்னாக வரும் சனந்துக்கும் தனக்கு உரிய முக்கியத்துவத்தை கதையிலும் காட்சி படுத்தலிலும் கொடுத்திருப்பதற்காக தயாரிப்பாளர் சித்துவை பாராட்டலாம்.

ரோலெக்ஸ் ராவுத்தராக வரும் டத்தோ ராதாரவி, தெய்வா எனும் தெய்வநாயகமாக வரும் ஆர்-அமரேந்திரன், அட்டாக் ஆல்பர்ட் டாக வரும் எம்.ஜி.சாய்தீனா, மருந்து -கே.பகவதி பெருமாள், நாசிம்மன் – நாகா, பைந்தமிழ் – பிபின், காளி – ஷரத், ஜக் கின் அப்பா ஆர் எஸ்.சிவாஜி, ராவுத்தர் அடியாள் – விஜய முத்து, குணா-ஆர்.பிரவீன், நடிகை சோனு சாவந்த்தாக வரும் ஜாஸ்மின்பாஸின் உள்ளிட்ட நட்சத்திரங்களில் எல்லோருமே தேவைக்கு அதிகமாக நடித்து ரசிகனின் பொறுமையை சோதிக்கின்றனர்.

ஆறுதல், படம் முழுக்க பின்க் கலரிலும் ஆஷ் கலரி லும் வரும் அந்த இரண்டு ஒல்டு மாடல் கார்கள் மட்டிலும் தான்.

சிவஷங்கரின் கலை இயக்கம், குருட்ஸ் ஸ்னை டரின் படத்தொகுப்பு, ஸ்ரேயா ஸ்கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு, தீரஜ் வைத்தியின் எழுத்து ,இயக்கம் உள்ளிட்டவைகளில் ஸ்ரேயா ஸ்கிருஷ்ணாவின் ஒளிப்பதிவும், சிவஷங்கரின் கலை இயக்கமும் திரும்பி பார்க்க வைக்கின்றன.

ஆக மொத்தத்தில், ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் காமெடி எனும் போர்வையில் ‘ஜில்.ஜங்.ஜக்’ கடித்திருப்பது டிராஜிடி!

பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் சித்தார்த்!
மேலும் வாசிக்க…
2015 Thediko.com