ராஜா ராணி படத்தின் வெற்றியின் மூலம் அனைவரையும் கவர்ந்த அட்லி தற்போது இளைய தளபதி விஜய்யை வைத்து இயக்கி வரும் படம் "தெறி". பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இப்படத்தின் டீசர் இன்று நள்ளிரவு வெளியாகி அனைத்து சாதனைகளையும் தவுடு பொடியாக்கி வருகிறது.
தெறி டீசர் வெளியாகி 15 நிமிடத்தில் 50ஆயிரம் லைக்கையும், 70 நிமிடத்தில் 75ஆயிரம் லைக்கையும் பெற்றது. மேலும் ஆறரை மணி நேரத்தில் 1லட்சம் லைக்குகளை குவித்து சாதனை படைத்தது.
இந்திய அளவில் வேறு எந்த வீடியோவும் செய்யாத சாதனை இதுவாகும். இதற்கு முன் தல அஜித்தின் வேதாளம் படத்தின் டீசர் 18 மணி நேரத்தில் 1லட்சம் லைக்குகளை குவித்ததே இந்நாள் வரை சாதனையாக இருந்து வந்தது. அதை இன்று தெறி டீசர் முறியடித்துள்ளது. மேலும் வேதாளம் டீசர் மூன்று மாதத்தில் பெற்ற 1லட்சத்து 40ஆயிரம் லைக்குகளை பெற்ற சாதனையை இன்றே தெறி முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:
Cinema
,
அட்லி
,
அஜித்
,
சினிமா
,
தெறி
,
தெறி டீசர்
,
ராஜா ராணி
,
விஜய்
,
வேதாளம்