அஜித்துக்கு ‘எஸ்’, விஜய்க்கு ‘நோ’… சந்தானத்தின் புது பாலிஸி..!!

4:03 AM |
‘இயக்குநர் எம்.ராஜேஷ், உதயநிதி ஸ்டாலின், சிம்பு இவங்க மூணு பேரைத்தவிர வேற யாரு கூப்பிட்டாலும் காமெடியனா நடிக்க மாட்டேன். இனிமே, ஒன்லி ஹீரோ தான்’ என சூடம் கொளுத்தி சத்தியம் பண்ணாத குறையாகச் சொன்னார் சந்தானம்.

ஆனால், அவர்கள் கூப்பிட்ட போதும் கூட, ‘நான் இப்போ ரெண்டு படங்கள்ல பிஸி, ஸாரி பிரதர்’ என டேக்கா கொடுத்தார். இந்தநிலையில், ‘தெறி’ படத்தில் விஜய்க்கு நண்பனாக நடிக்க சந்தானத்திடம் கேட்டாராம் அட்லி. ஆனால், ஒரே வார்த்தையாக ‘நோ’ சொல்லிவிட்டாராம் சந்தானம்.

இத்தனைக்கும் தன்னுடைய முதல் படமான ‘ராஜா ராணி’யில் சந்தானத்துக்கு நல்ல ரோல் தான் கொடுத்திருந்தார் அட்லி. இருந்தாலும் தன் கொள்கையை விட்டுக்கொடுக்க முடியாது என சந்தானம் சொல்ல, அவருக்குப் பதிலாக மொட்டை ராஜேந்திரனை நடிக்க வைத்தனர்.

தற்போது, ‘சிறுத்தை’ சிவா இயக்க இருக்கும் அஜித்தின் அடுத்த படத்தில் காமெடியனாக நடிக்கிறார் சந்தானம் என்கிறார்கள். அஜித்தே நேரடியாகக் கேட்டதால், கொள்கையைத் தூக்கிக் கொல்லையில் போட்டுவிட்டு, வாசக்கதவை அகலமாகத் திறந்து விட்டாராம். இது விஜய் ரசிகர்களுக்குத் தெரிஞ்சா என்னாகுமோ?
மேலும் வாசிக்க…

நயன்தாராவை கர்ப்பமாக்கிய இளம் இயக்குனர்; அதிர்ச்சியில் திரையுலகம்..!!

1:13 AM |
நயன்தாரா என்றாலே சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது. சிம்புவிடம் காதல் தோல்வி, பின் பிரபுதேவாவிடம் தன் வாழ்க்கையையே பறிகொடுத்தது, தற்போது ஆர்யாவுடன் காதல் கிசுகிசு என சர்ச்சைகளுக்கு பெயர்போனவர் நயன்தாரா. இவ்வளுவு சர்ச்சைகள் பின் தொடர்ந்தும் கூட, நயன்தாராவிற்கு மார்க்கெட் உயர்ந்துகொண்டே தான் செல்கின்றது.

ராஜா ராணி, ஆரம்பம் என ஹிட் கொடுத்து தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார் நயன்தாரா. பெரிய ஹீரோக்களுடன் மட்டும் நடிக்காமல் ‘அனாமிகா’ போன்ற கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலும் நடிகின்றார். இதற்கு காரணம் பாலிவுட் நடிகை வித்யா  பாலனை முந்த வேண்டும் என்பதே. இதற்காக சிறிய ஹீரோக்களுடன் நடித்தாலும் பரவாயில்லை, என ஒப்புக்கொள்கின்றார். அப்படி ஒப்புக்கொண்ட படம் தான், அறிமுக இயக்குனர் அஷ்வின் சரவணன் இயக்கும் புதிய படம். இப்படம் திகில் நிறைந்த பேய் படமாம். இதில் முழுக்க முழுக்க நயன்தாராவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாப்பாத்திரமாம். இந்த படத்தில் ஒரு கைக்குழந்தைக்கு அம்மாவாக நடிக்க உள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின.

தற்பொழுது நயன்தாரா இந்த படத்தில் கர்பிணிப்பெண்ணாகவும், ஒரு குழந்தைக்கு அம்மாவாகவும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு காரணம் இளம் இயக்குனர் அஷ்வின் சரவணன் தானாம். கர்ப்பிணி பெண்ணாக நடிப்பதன் மூலம், ரசிகர்களின் அனுதாபம் அதிகமாக கிடைக்கும் என கூறி நயன்தாராவை கர்ப்பமாக்க முடிவு செய்துள்ளார். ஒரு புதிய இயக்குனர் படத்தில், நயன்தாரா ஒரு குழந்தைக்கு அம்மாவாகவும், கர்ப்பிணி பெண்ணாகவும் நடிக்க சம்மதித்துள்ளது திரை பிரபலங்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
மேலும் வாசிக்க…

அட்லீ இப்படி செய்யலாமா? அஜித் ரசிகர்கள் கடும் கோபம்..!!

1:21 AM |
ஒரு இயக்குனராக அட்லீ, ராஜா ராணி, தெறி என இரண்டு சூப்பர் ஹிட் படத்தை கொடுத்து தன்னை நிலை நிறுத்தி விட்டார். வளர்ந்து வரும் சமயத்தில் கொஞ்சம் நிதானம் தேவை என்பார்கள்.

ஆனால், தெறி வெற்றியால் அட்லீ கொஞ்சம் நிதானம் இழந்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும், ஏனெனில் தன் பேஸ்புக் பக்கத்தில் தெறி குறித்த விமர்சனங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில் அஜித்தை கிண்டல் செய்யும் ஒரு பேஸ்புக் பக்கத்தின் புகைப்படத்தை ஆர்வமிகுதியில் அட்லீ ஷேர் செய்து விட்டார். இது அஜித் ரசிகர்களிடம் உச்சக்கட்ட கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் வாசிக்க…

+2 தேர்வில் பாஸ் ஆவார அட்லி ? - ஒரு நேர்காணல்..!!

1:21 AM |
தமிழகத்தில் ப்ளஸ் 2 பொதுத்தேர்வு நேற்று முன் தினம் நிறைவடைந்தது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த தேர்வை ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் எழுதியுள்ள நிலையில் ‘தெறி’ இயக்குனர் அட்லியும் ப்ளஸ் 2 தேர்வை எழுதியுள்ளதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

‘எனது முதல் படமான ‘ராஜா ராணி’ படத்தை முடித்தவுடன் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதிய உணர்வில் இருந்ததாகவும், தற்போது ‘தெறி’ படத்தை முடித்தவுடன் ப்ளஸ் 2 தேர்வை எழுதிவிட்டு ரிசல்ட்டுக்கு காத்திருக்கும் மாணவனைப் போல் இருப்பதாகவும் அட்லி தனது பேட்டியில் கூறியுள்ளார்.

மேலும் தன்னால் முடிந்தவரை இந்த படத்திற்கு பெஸ்ட் உழைப்பை கொடுத்துள்ளதாகவும், இனி ரசிகர்கள்தான் இந்த படத்திற்கான தீர்ப்பை தர வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். ரசிகர்கள் கண்டிப்பாக இந்த படத்திற்காக அட்லிக்கு 100க்கு 100 மார்க் வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் வாசிக்க…

விஜய் ஹீரோ கமல்ஹாசன் வில்லன்- செம்ம கதை ரெடி..!!

11:08 PM |
கமல்ஹாசனின் குட்புக் லிஸ்டில் எப்போதும் விஜய்க்கு ஒரு இடம் உண்டு. அந்த வகையில் இவர்கள் இணைந்து நடித்தால் எப்படியிருக்கும்?. சரவெடி தான்.

இவர்கள் இருவரையும் வைத்து இயக்குவதற்கு ஒருவர் ரெடி, இதில் விஜய் ஹீரோ, கமல்ஹாசன் வில்லனாம்.

அப்படி யார் அந்த இயக்குனர் என்று யோசிக்கிறீர்க்ளா? ராஜா ராணி படத்தில் ‘யாயாயா’ என்று சத்தத்தை எழுப்பி சிரிப்பாரே அருண்ராஜா காமராஜ் அவரே தான்.

இவருக்கு இயக்குனர் ஆகவேண்டும் என்று தான் விருப்பமாம், மேலும், தெறி படத்தில் தோட்டா தெறிக்க தெறிக்க பாடலை எழுதியவரும் இவரே தான்.

கூடிய விரைவில் இவருடைய ஆசை நிறைவேற  வாழ்த்துக்கள்.


மேலும் வாசிக்க…

பஹத் பாசிலை ஏன் திருமணம் செய்துக்கொண்டேன்- முதன் முதலாக கூறிய நஸ்ரியா..!!

9:38 PM |
நேரம், ராஜா ராணி மூலம் ஒட்டு மொத்த தமிழ் சினிமாவையும் கவர்ந்து இழுத்தவர் நஸ்ரியா. இவர் தமிழ் சினிமாவின் பெரிய ரவுண்ட் வருவார் என எதிர்ப்பார்த்த நிலையில், மலையாள நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்துக்கொண்டார்.

இதனால் ரசிகர்கள் பலரும் அதிருப்தி அடைந்தனர். இந்நிலையில் சமீபத்தில் இதுக்குறித்து நஸ்ரியா, ‘25 வயதிலேயே திருமணம் செய்யவேண்டும் என்ற முடிவை நான் தான் எடுத்தேன்.

மேலும், பஹத் வீட்டில் அவருக்கு தீவிரமாக பெண் பார்த்து வந்தது நான் அறிந்தேன், அவரை தவற விட எனக்கு மனதே இல்லை, அதனால், தான் உடனே பஹத்தை திருமணம் செய்ய சம்மதித்தேன்’ என கூறியுள்ளார்.
மேலும் வாசிக்க…

விஜய் வரிசையில் கார்த்தி ருசிகர தகவல்..!!

2:08 AM |
புலி படத்தை அடுத்து இளைய தளபதி விஜய் நடித்து வரும் தெறி படத்தின் படப்பிடிப்புகள் இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. ராஜா ராணி படத்தின் வெற்றியை அடுத்து அட்லி இயக்கிவரும் இப்படத்தில் மூன்று விதமான கெட்டப்புகளில் விஜய் நடித்துள்ளார்.

இதில், மொட்டை அடித்ததுபோன்ற ஒரு கெட்டப்பிலும் விஜய் நடித்திருக்கிறார். இந்த கெட்டப் சம்பந்தப்பட்ட காட்சிகளை லடாக்கில் படமாக்கியுள்ளனர். அப்போது விஜய் ரசிகர்களிடம் எடுத்துக்கொண்ட புகைப்படத்தால் இந்த கெட்டப் வெளியே தெரிய வந்தது.

இந்நிலையில் இதேபோன்ற கெட்டப்பை தற்போது கார்த்தியும், அவர் நடிக்கும் "கஸ்மோரா" படத்தில் வைத்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. சமீபகாலமாக கார்த்தி பொது விழாக்களில் கலந்துகொள்ளும்போது, தலையில் தொப்பியுடன் கலந்துகொள்கிறார். ஆனால், அந்த தொப்பிக்கு பின்புறம் அவரது தலையில் முடி இல்லாததுபோல் இருக்கிறது.

விஜய்யும் "தெறி" படப்பிடிப்பின்போது ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களில் இதுபோன்ற தொப்பியுடன் காட்சியளித்தார். பின்பு, அவரது மொட்டைத் தலை வெளிச்சத்துக்கு வந்தது. அதுபோல்தான், கார்த்தியும் "கஸ்மோரா" படத்தில் மொட்டைத் தலையுடன் நடித்திருப்பார் என்று யூகிக்கப்படுகிறது.


மேலும் வாசிக்க…

18 மணி நேர சாதனையை 6 மணி நேரத்தில் முறியடித்த தெறி..!!

2:50 AM |
ராஜா ராணி படத்தின் வெற்றியின் மூலம் அனைவரையும் கவர்ந்த அட்லி தற்போது இளைய தளபதி விஜய்யை வைத்து இயக்கி வரும் படம் "தெறி". பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இப்படத்தின் டீசர் இன்று நள்ளிரவு வெளியாகி அனைத்து சாதனைகளையும் தவுடு பொடியாக்கி வருகிறது.

தெறி டீசர் வெளியாகி 15 நிமிடத்தில் 50ஆயிரம் லைக்கையும், 70 நிமிடத்தில் 75ஆயிரம் லைக்கையும் பெற்றது. மேலும் ஆறரை மணி நேரத்தில் 1லட்சம் லைக்குகளை குவித்து சாதனை படைத்தது.

இந்திய அளவில் வேறு எந்த வீடியோவும் செய்யாத சாதனை இதுவாகும். இதற்கு முன் தல அஜித்தின் வேதாளம் படத்தின் டீசர் 18 மணி நேரத்தில் 1லட்சம் லைக்குகளை குவித்ததே இந்நாள் வரை சாதனையாக இருந்து வந்தது. அதை இன்று தெறி டீசர் முறியடித்துள்ளது. மேலும் வேதாளம் டீசர் மூன்று மாதத்தில் பெற்ற 1லட்சத்து 40ஆயிரம் லைக்குகளை பெற்ற சாதனையை இன்றே தெறி முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் வாசிக்க…
2015 Thediko.com