தென்னிந்தியாவிலேயே நம்பர் 1 விஜய் தான்- நிரூபித்த சர்வே..!!

11:51 PM |
இளைய தளபதி விஜய் நம்பர் 1 இடத்தை நோக்கி பயணிக்கும் முன்னணி நடிகர். வசூலில் ரஜினிக்கு பிறகு நம்பி கட்டும் பந்தய குதிரையாக பயணிக்கின்றார்.

இந்நிலையில் யு-டியூப் பொறுத்த வரை கபாலி டீசர், பாடல்கள் செய்த ராஜ்ஜியம் அனைவரும் அறிந்ததே.

ஆனால், ரஜினியே செய்ய முடியாத ஒரு சாதனையை விஜய் செய்துவிட்டார். ஆம், தெறி டீசர், ட்ரைலர், பைரவா டீசர் என மூன்றுமே 1 கோடி ஹிட்ஸை தொட்டுவிட்டது.

ஒரு லட்சம் லைக்ஸுகளை தாண்டிவிட்டது, தென்னிந்தியாவில் யாரும் செய்யாத சாதனையை இதன் மூலம் விஜய் நிகழ்த்திவிட்டார்.
மேலும் வாசிக்க…

தெறியின் சாதனையை முறியடித்த கபாலி..!!

3:12 AM |

சூப்பர்ஸ்டாரின் கபாலி திரைப்படத்தின் டீசர் வௌியாகியிருந்தது. இந்நிலையில் இந்த டீசர் இளைய தளபதியின் தெறி டீசர் சாதனையை முறியடித்துள்ளது.

தெறி டீசர் வௌியாகி 6 1/2 மணித்தியாலத்தில் ஒரு இலட்சம் லைக்குகளை பெற்றிருந்தது.

இந்நிலையில் சூப்பர்ஸ்டாரின் கபாலி டீசர் வௌியிடப்பட்டு இரண்டு மணித்தியாலத்தில் குறித்த சாதனையை முறியடித்துள்ளது.

தற்போது வரை கபாலி டீசரை பதினாறு இலட்சத்திற்கும் அதிகமானவரகள் பார்வையிட்டுள்ளனர்.

இதன்மூலம் தான் சூப்பர்ஸ்டார் என்பதை ரஜினி மீண்டும் ஒருமுறைநிரூபித்துள்ளார்.
மேலும் வாசிக்க…

தெறி படத்தின் 2 நிமிடம் டிரைலர் இதோ..!!

3:13 AM |
விஜய் நடிப்பில் அட்லி இயக்கியுள்ள ‘தெறி’ படத்தை பற்றி நாளும் ஒரு புதிய அப்டேட் வந்த வண்ணம் உள்ளன. நேற்று, வருகிற 20-ந் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை பற்றிய அப்டேட்டை பார்த்தோம்.

இன்று இப்படத்தின் டிரைலர் பற்றிய அப்டேட் வெளிவந்துள்ளது. ஏற்கெனவே, ‘தெறி’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. பல்வேறு சாதனைகளையும் முறியடித்துள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் டிரைலரை, ஆடியோ வெளியாகும் மார்ச். 20-ந் தேதியே வெளியிடவுள்ளனர். ‘தெறி’ படத்தின் டிரைலர் 2 நிமிடம் ஓடக்கூடியதாக இருக்குமாம். டீசரைவிட டிரைலரில் கூடுதல் சுவாரஸ்யங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது.

டீசருக்கு கிடைத்த வரவேற்பை விட, இந்த டிரைலருக்கு கூடுதல் வரவேற்பு இருக்கும் என படக்குழு வட்டாரத்தில் கூறப்படுகிறது.
மேலும் வாசிக்க…

பாலிவுட்டாலும் வீழ்த்த முடியவில்லை- இளைய தளபதி தான் நம்பர் 1..!!

11:07 PM |
இளைய தளபதி விஜய்யின் ரசிகர்கள் பலம் அனைவரும் அறிந்ததே.

இவரின் தெறி டீசர் சமீபத்தில் வெளிவந்து படைத்த சாதனைகள் எல்லாம் நாம் முன்பே குறிப்பிட்டுயிருந்தோம்.

இந்த டீசர் வெளிவந்த ஒரு மணி நேரத்தில் 60 ஆயிரத்திற்கும் அதிகமான லைக்ஸுகளை பெற்று உலக அளவில் நம்பர் 1 என்ற இடத்திற்கு வந்தது.

இந்த சாதனைனையை ஷாருக்கானின் FAN ட்ரைலர் முறியடிக்கும் என எல்லோரும் எதிர்ப்பார்த்த நிலையில் பாலிவுட் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

ஏனெனில் தற்போதும் இளைய தளபதி நம்பர் 1.
மேலும் வாசிக்க…

தெறி என்ன ஆனது- லேட்டஸ்ட் அப்டேட்..!!

12:39 AM |
இளைய தளபதி விஜய்யின் தெறி படத்தின் டீசர் பல சாதனைகளை படைத்து வருகின்றது. இந்நிலையில் இப்படம் தற்போது எந்த நிலையில் உள்ளது என ரசிகர்கள் படக்குழுவை நோக்கி கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சமீபத்தில் கிடைத்த தகவலின்படி இப்படத்தின் டப்பிங் வேலைகள் முழுவதும் முடிவடைந்து விட்டதாம்.

தற்போது கிராபிக்ஸ் மற்றும் கலர் கரேக்‌ஷன் வேலைகள் மட்டும் தான் மீதமுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க…

பிப்ரவரி 26 முதல் திரையில் தோன்றும் விஜய்யின் ‘தெறி’..!!

8:57 PM |
அறிமுக இயக்குனர் சந்தோஷ் இயக்கத்தில் அதர்வா, கேத்தரின் தெரசா நடித்திருக்கும் ஆக்ஷன் திரில்லர் திரைப்படம் கணிதன்.

இப்படம் வரும் பிப்ரவரி 26-ல் திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் இப்படம் வெளியாகும் திரையரங்குகளில் இடைவெளியின் போது விஜய் நடித்துள்ள தெறி படத்தின் டீசர் திரையிடப்படும் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

இவ்விரு படங்களையும் வி கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ். தாணு தயாரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்க…

வேதாளத்தை தொடர்ந்து அந்த சாதனையை எப்போது முறியடிக்கும் தெறி- விஜய் ரசிகர்களின் காத்திருப்பு..!!

11:31 PM |
தமிழ் சினிமாவில் தற்போதையே ட்ரண்டே பர்ஸ்ட் லுக், டீசர், ட்ரைலரிலேயே ஹிட் அடிப்பது தான். இதில் எப்போதும் பெரிய போட்டி நிலவுவது அஜித், விஜய் ரசிகர்களிடம் தான்.

இந்நிலையில் தெறி டீசர் தமிழ் சினிமாவின் அனைத்து சாதனைகளையும் முறியடித்தது, லைக்ஸ், ஹிட்ஸ் என கலக்கியது.

வேதாளம் டீசர் சாதனையை தொடர்ந்து அடுத்து தன் படமான புலியையும் முறியடித்து தற்போது ஐ படத்தின் ஹிட்ஸை முறியடிக்க காத்திருக்கின்றது தெறி டீசர்.

தற்போது வரை இந்த டீசரை 81 லட்சம் பேர் பார்த்துள்ளனர். ஐ டீசர் 1 கோடி ஹிட்ஸை தாண்டியது குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்க…

எவரும் எட்ட முடியாத இமாலய சாதனை படைத்த தெறி..!!

11:32 PM |
இளைய தளபதி விஜய் நடிப்பில் ஏப்ரல் 14ம் தேதி திரைக்கு வரவுள்ள படம் தெறி. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வந்த பல சாதனைகளை படைத்துள்ளது.

மகுடத்திற்கு மகுடம் வைத்தார் போல் இந்த டீசர் நேற்றுடன் 70 லட்சம் ஹிட்சை தாண்டியுள்ளது, இதுவரை ஐ டீசர் மட்டும் 1 கோடி ஹிட்ஸை தாண்டியது.

விரைவில் இந்த சாதனையை முறியடிக்கவிருக்கும் தெறி, இதுவரை 2.55 லட்சம் லைக்ஸுகளை பெற்று இந்திய அளவில் அதிகம் லைக்ஸ் செய்த டீசர் என்ற சாதனை பெற்றுள்ளது. கிட்டத்தட்ட வேதாளம் டீசரை விட 1 லட்சம் லைக்ஸ் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்க…

ஒரே நேரத்தில் தல தளபதி படைத்த சாதனை..!!

12:15 AM |
விஜய், அஜித் இருவரும் தங்கள் சாதனைகளை தாங்களே முறியடித்து வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் தெறி டீசர் அஜித்தின் வேதாளம் படத்தின் டீசர் சாதனையை முறியடித்தது.இந்த டீசர் தற்போது வரை 67 லட்சத்திற்கு மேல் பார்த்துள்ளனர். இந்நிலையில் சத்தமில்லாமல் அஜித் படத்தின் பாடல் ஒன்றும் ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளது.

வேதாளம் படத்தில் இடம்பெற்ற
ஆலுமா
டோலுமா
பாடல் 92 லட்சம் ஹிட்ஸை தாண்டியுள்ளது. வாழ்த்துக்கள் தலதளபதி.
மேலும் வாசிக்க…

தெறி டீசர் சாதனைகளும், சோதனைகளும்..!!

11:06 PM |
இளைய தளபதி விஜய் நடிப்பில் தெறி படம் இந்த கோடை விடுமுறைக்கு வரவிருக்கின்றது.

இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து பல சாதனைகளை செய்து வருகின்றது.உலக அளவில் குறைந்த நேரத்தில் 50 ஆயிரம் லைக்ஸ், இந்திய அளவில் அதிக லைக்ஸ் என பல சாதனைகளை படைத்தது நாம் அறிவோம்.

இந்நிலையில் இந்த டீசர் வந்த சில மணி நேரங்களில் யாரோ ஹாக் செய்தது அனைவரும் அறிந்ததே, தற்போது இந்த டீசர் 45 ஆயிரம் டிஸ்லைக்குகளை பெற்றுள்ளது.

வேதாளம் 60 ஆயிரம் டிஸ்லைக்குகளை பெற, தெறி டீசரும் இதை நெருங்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். சாதனைகளுடன், சோதனைகளையும் கடந்த வருகின்றது தெறி டீசர்.
மேலும் வாசிக்க…

தெறி டீசர் பஞ்சாயத்து! அஜீத் ரசிகர்கள் மீது சந்தேகம்..!!

2:30 AM |
நேற்றிரவு வெளியான ‘தெறி’ படத்தின் டீஸரை இதுவரை முப்பது லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்ததால் கன ஜோராக காலரை உயர்த்திக் கொண்டு கிளம்ப வைத்திருக்கிறது விஜய் ரசிகர்களை. அதுவும் வெளியிட்ட ஒரே மணி நேரத்தில் இரண்டு லட்சம் பேர் டீசரை பார்த்ததால், இந்த முறை திருவிழா கோலம்தான் என்று விஜய் ரசிகர்கள் சந்தோஷப்படுகிறார்கள். ஆனால் அந்த சந்தோஷத்தில் கல் விழுந்தது சிறிது நேரத்திலேயே! இதில் காப்புரிமை பிரச்சனை இருப்பதாக கூறி, யூ ட்யூப் தளம் அந்த வீடியோவை உடனே நீக்கிவிட்டது. இதனால், ‘கண்ணுக்கு எட்டியது, கருத்துக்கு எட்டலையே?’ என்று கவலையால் தவித்தார்கள் விஜய் ரசிகர்கள்.

வெகு காலமாகவே விஜய் ரசிகர்களும் அஜீத் ரசிகர்களும் ஒருவர் சட்டையை மற்றவர் பிடித்துக் கொண்டு இழுபறி நடத்திக் கொண்டிருப்பதால், இந்த காப்புரிமை பிரச்சனை அஜீத் ரசிகர்களால் எறியப்பட்ட கல்லா? அல்லது வேறு ஏதாவது சதியா? என்ற கோணத்தில் தயாரிப்பாளர் தாணுவும் இயக்குனர் அட்லீயும் களத்தில் இறங்க… இந்த நிமிஷம் வரை உருப்படியாக ஒரு க்ளுவும் கிடைக்கவில்லையாம் அவர்களுக்கு.

இதற்கிடையில் இவ்விரு ரசிகர்களும் சமூக வலைதளங்களில் கடும் வார்த்தைகளால் மோதிக் கொண்டது இன்டஸ்ட்ரியை மேலும் திகைக்க வைத்தது. உதயநிதி போன்ற இரு ஹீரோக்களின் அபிமானிகள் “அடிச்சுக்காதீங்கப்பா…” என்று கெஞ்சியும் கூட்டத்தில் சிக்கிய வாழைப்பழம் போலதான் ஆனது அவரது நிலைமை.

தெறி படத்தின் டைரக்டர் அட்லீக்கு அஜீத்திடம் நேரடி பழக்கம் இருந்தாலும், அது குறித்தெல்லாம் அலட்டிக் கொள்ளாமல் “இந்த வேலையை செய்தது அஜீத் ரசிகர்களாகதான் இருக்கும்” என்று சில இடங்களில் வாயை விட்டதாகவும் கூறப்படுகிறது. அதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக அஜீத் பெயரில் சமூக வலைதளங்களில் செயல்படும் தீவிர அபிமானிகளின் செயல்பாடுகளை கண்டறிய தொழில் நுட்ப வல்லுனர்களின் உதவியை நாடியிருக்கிறாராம் அவர்.

“எவ்வளவு செலவானாலும் பரவால்ல தம்பி. தப்பு செஞ்சவங்களை விடக் கூடாது” என்று தயாரிப்பாளர் தாணுவும் கூறி வருவதால், இந்த சண்டை இப்போதைக்கு ஓயாது போலிருக்கிறது!
மேலும் வாசிக்க…

18 மணி நேர சாதனையை 6 மணி நேரத்தில் முறியடித்த தெறி..!!

2:50 AM |
ராஜா ராணி படத்தின் வெற்றியின் மூலம் அனைவரையும் கவர்ந்த அட்லி தற்போது இளைய தளபதி விஜய்யை வைத்து இயக்கி வரும் படம் "தெறி". பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இப்படத்தின் டீசர் இன்று நள்ளிரவு வெளியாகி அனைத்து சாதனைகளையும் தவுடு பொடியாக்கி வருகிறது.

தெறி டீசர் வெளியாகி 15 நிமிடத்தில் 50ஆயிரம் லைக்கையும், 70 நிமிடத்தில் 75ஆயிரம் லைக்கையும் பெற்றது. மேலும் ஆறரை மணி நேரத்தில் 1லட்சம் லைக்குகளை குவித்து சாதனை படைத்தது.

இந்திய அளவில் வேறு எந்த வீடியோவும் செய்யாத சாதனை இதுவாகும். இதற்கு முன் தல அஜித்தின் வேதாளம் படத்தின் டீசர் 18 மணி நேரத்தில் 1லட்சம் லைக்குகளை குவித்ததே இந்நாள் வரை சாதனையாக இருந்து வந்தது. அதை இன்று தெறி டீசர் முறியடித்துள்ளது. மேலும் வேதாளம் டீசர் மூன்று மாதத்தில் பெற்ற 1லட்சத்து 40ஆயிரம் லைக்குகளை பெற்ற சாதனையை இன்றே தெறி முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் வாசிக்க…

உலக அளவில் தெறி டீசர் நம்பர் 1- அனைத்து சாதனைகளையும் முறியடித்தது..!!

10:31 PM |
தெறி டீசர் நேற்று எல்லோரும் எதிர்ப்பார்த்தது போல் சரியாக 12.00AM மணிக்கு வந்தது. டீசர் வந்த சில நிமிடங்களிலேயே லைக்ஸ் குவிந்தது.ஒரு மணி நேரத்தில் 56 ஆயிரம் கைக்ஸுகளை பெற்றது,

இதன் மூலம் வேதாளம் சாதனையை முறியடித்தது மட்டுமில்லாமல் உலக அளவில் நம்பர் 1 இடத்திற்கு வந்துள்ளது.

மேலும், தற்போது வரை 1.2 லட்சம் லைக்ஸுகளை பெற்றது மட்டுமில்லாமல், 7 லட்சம் ஹிட்ஸை தாண்டியுள்ளது. வாழ்த்துக்கள் தெறி டீம்.
மேலும் வாசிக்க…

விஜய்யின் தெறி டீசர் ஒரு பார்வை..!!

6:11 PM |
இளைய தளபதி ரசிகர்கள் அனைவரும் தெறி படத்தின் டீசர் வெளியிட்டிற்காக காத்திருந்தனர். அதுகேற்ப படத்தின் டீசரும் இன்று வந்துள்ளது.

"Twingle Twingle Little Star"இதுதான் விஜய் படத்தின் டீசரின் Dialogue. விஜய் அவருக்கேற்ற Action, Comedy கலாட்டா போன்றவையும் வைத்து தெரிக்கவிட்டிருக்கிறார். மேலும் அட்லீ இயக்கத்தில் ஜி. வி. பிரகாஷ் குமாரின் வலுவூட்டும் இசை. போலிஸ் கெட்டப்பில் விஜய்யின் துப்பாக்கி விளையாடியிருக்கிறது.

மாசாக வெளியாகியிருக்கும் தெறி படத்தின் டீசர் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.கலைப்புலி எஸ்.தாணு பிரமாண்டமாக தயாரித்து வரும் இப்படத்தில் விஜய், சமந்தா, எமிஜாக்சன், பிரபு, ராதிகா சரத்குமார், இயக்குனர் மகேந்திரன், சத்யராஜ், மொட்டை ராஜேந்திரன், அழகம் பெருமாள், காளி வெங்கட், உள்பட பலர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது

விஜய்யின் தெறி படத்தின் டீசரை பார்க்க க்ளிக்

மேலும் வாசிக்க…
2015 Thediko.com