விஷால் நடிப்பில் இந்த பொங்கலுக்கு கதகளி படம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் இவர் பிஸியாக இருக்கின்றார்.
இந்நிலையில் இவரின் ஆம்பள படத்தில் SUMOவில் நீங்கள் பறப்பது போல் ஒரு காட்சி உள்ளதே, அதை பலரும் கிண்டல் செய்தார்கள் நீங்கள் இதுகுறித்து என்ன நினைக்கிறீர்கள் என கேட்டனர்.அதற்கு அவர் ‘இதில் எந்த தவறும் இல்லை, அது அவர்களுடைய பணம், படம் சரியில்லை என்றால் விமர்சிக்க முழு சுதந்திரமும் உள்ளது.
மேலும், இது எங்களுக்கான ஒரு எச்சரிக்கை மணி என்று கூட சொல்லலாம், எங்களை திருத்திக்கொள்ளும் ஒரு வாய்ப்பு’ என அவர் கலக்கலாக அதற்கு பதில் அளித்தார்.
Tags:
Cinema
,
Kathakali Review
,
Vishal
,
சினிமா
,
விஷாலின் அதிரடி பதில்