தமிழ் சினிமாவின் சாதனைகளை முதல் நாள் வசூலில் முறியடித்துவிட்டதாகக் கூறப்படும் ‘வேதாளம்’ படம் சினிமாவில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
வேதாளம் படத்தின் வசூல் வேட்டை, இடைவிடாத மழை நாட்களிலும் தொடர்ந்து கொண்டிருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது.
முதல் நாளில் தமிழகத்தில் மட்டுமே 15 கோடிகளை வாரிச்சுருட்டிய இப்படம், தற்போது 8 நாட்களில் தமிழகத்தில் மட்டும் 64 கோடிகளை வசூல் செய்துள்ளதாம். தமிழ் சினிமா வரலாற்றைப் பொறுத்தவரை இது ஒரு புதிய சாதனையாக கருதப்படுகிறது. அதோடு, உலகளவிலான வசூலில் 8 நாட்களில் நூறு கோடியை எட்டியிருக்கிறதாம் வேதாளம். இதை உறுதிப்படுத்தும் விதமாக வேதாளம் படத்தில் நடித்த வில்லன் நடிகர் தனது ட்விட்டர் பக்கத்தில் வேதாளம் 100 கோடி வசூல் செய்துள்ளதாக ட்விட் செய்துள்ளார். ரஜினி, ஷங்கர் கூட்டணியில் உருவான ‘எந்திரன்’ படமே 100 கோடியை எட்டுவதற்கு இதைவிட அதிக நாட்களை எடுத்துக் கொண்டதாம்.
உலகளவில் அஜித்தின் ‘வேதாளம்’ திரைப்படம் 8 நாட்களில் தோராயமாக வசூலித்துள்ள விவரம் கீழே...
தமிழ்நாடு - 64 கோடி
கேரளா - 5.12 கோடி
கர்நாடகா - 6.73 கோடி
இந்தியாவின் இதர பகுதிகளில் - 2.10 கோடி
வெளிநாடுகளில் - 27 கோடி
Tags:
அஜித்
,
சினிமா
,
வேதாளம்
,
வேதாளம் 8 நாளில் 100 கோடி வசூல்