அஜித் நடித்து கடந்த வருடம் வெளிவந்த வேதாளம் திரைப்படம் அதிகமான வசூலை அள்ளியது. விஜய் நடிப்பில் அண்மையில் வெளிவந்த கத்தி, துப்பாக்கி போன்ற பட வசூலையும் வேதாளம் முறியடித்துவிட்டது. இதுவரை அஜித் நடித்த படங்களிலேயே அந்தப் படம்தான் சாதனை வசூலை வசூலித்ததால் அவருடைய அடுத்த படம் பற்றிய பேச்சு அப்போதே ஆரம்பமானது.
மீண்டும் “வீரம், வேதாளம்” படங்களை இயக்கிய சிவாவின் இயக்கத்தில்தான் அஜித் நடிக்கப் போகிறார் என்றார்கள். அது ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுவிட்டது. சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் புதிய படத்தை சிவா இயக்க அஜித் கதாநாயகனாக நடிக்க உள்ளார். முன்னணி நாயகிகளில் ஒருவர் அஜித் ஜோடியாக நடிக்கலாம் எனத் தெரிகிறது.
இந்தப் படத்திற்காக அஜித்துக்கு பேசப்பட்டுள்ளதாகச் சொல்லப்படும் சம்பளம் திரையுலகத்தை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. வரிகளுடன் சேர்த்து சுமார் 40 கோடி வரை அஜித்தின் சம்பளமாகப் பேசப்பட்டுள்ளது என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தெறி படத்திற்காக விஜய்க்கு 25 கோடி ரூபாய் சம்பளம் என்று சொல்லப்படும் நிலையில், அஜித்தின் சம்பளம் 40 கோடி என்று தகவல் வெளியாகியுள்ளது திரையுலகத்தினரிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்திற்காக நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோருடைய சம்பளமே 60 கோடி வரை ஆகும் என்று சொல்லப்படுகிறது. அதன் பின் தயாரிப்புச் செலவுகள் என அனைத்தும் சேர்த்து 100 கோடி வரை செலவாகலாம் என்கிறார்கள்.
வேதாளம் படத்தின் தியேட்டர் வசூல், சாட்டிலைட் உரிமை, வெளிநாட்டு உரிமை என அனைத்தும் சேர்த்தே 100 கோடியைத் தொடாத போது எப்படி 100 கோடி ரூபாய் பட்ஜெட்டிற்கு திட்டமிடுவார்கள் என்றும் அனுபவசாலிகள் கேட்கிறார்கள். அஜித் படமாயிற்றே கணக்கு போடாமலா இருந்திருப்பார்கள்…?
Tags:
Cinema
,
அஜித்
,
கத்தி
,
சினிமா
,
தெறி
,
விஜய்
,
வீரம்
,
வேதாளம்