உலக நாயகன் கமல்ஹாசன் மகளும் பிரபல நடிகையுமான ஸ்ருதிஹாசன் அடிப்படையில் ஒரு பாடகி மற்றும் இசையமைப்பாளர் என்பது அனைவரும் அறிந்ததே. அவர் சமீபத்தில் தான் நடிக்கும் படங்களில் ஒரு பாடலை பாடுவதை வழக்கமாக கொண்டிருக்கின்றார்.
அஜித்துடன் அவர் நடித்த 'வேதாளம்' படத்திலும், விஜய்யுடன் அவர் நடித்த 'புலி' படத்திலும் ஸ்ருதிஹாசன் ஒரு பாடலை பாடியுள்ளார். இந்நிலையில் சூர்யாவுடன் ஸ்ருதிஹாசன் நடித்து வரும் 'S3' படத்திலும் அவர் ஒரு பாடலை பாடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், 'S3' படத்தில் தான் ஒரு பாடலையும் பாடவில்லை என்றும் தான் நடிக்கும் அனைத்து படங்களிலும் பாட வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றும் கூறியுள்ளார்.
ஆனாலும் இசையமைப்பாளர் அழைப்பு விடுத்தால் 'S3' படத்திலும் பாடத்தயார் என்று கூறியுள்ளார். மேலும் பல செய்திகளில் வருவது போன்று தான் 'S3' படத்தில் போலீஸாக நடிக்கவில்லை என்றும் தன்னுடைய கேரக்டர் இந்த படத்தின் மிகபெரிய சஸ்பென்ஸ் என்றும் ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.
Tags:
Cinema
,
S3
,
அஜித்
,
கமல்ஹாசன்
,
சினிமா
,
சூர்யா
,
புலி
,
விஜய்
,
வேதாளம்