சிம்புதேவன் இயக்கத்தில் இளையதளபதி , ஸ்ருதிஹாசன்,ஹன்சிகா ,சுதீப் மற்றும் பல முகங்கள் நடிப்பில் வெளியான திரைப்படம்தான் புலி. இந்த படம் கடந்த அக்டோபர் மாதம் முதலாம் திகதி உலக திரை அரங்குகளில் வெளியிடப்பட்டது.
ரசிகர்கள் மத்தியில் பாரிய எதிர்பார்ப்புடன் வெளியான இந்த படம் ரசிகர்களின் மனதை நினைத்த அளவில் இடம் பிடிக்கவில்லை என பல இந்திய ஊடகங்கள் செய்திகளை வெளியிட்ட வண்ணம் இருந்தன.
படத்தின் செலவு 118 கொடிகள் என பட குழுவினர் அறிவித்து இருந்தனர் . அக்டோபர் மாத நிறைவில் புலி திரைப்படம் 130 கோடிகளை கடந்து வசூல் சாதனை படைத்து இருப்பதாக அதே இந்திய ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.
இது விஜய் ரசிகர்களுக்கு பெரிய விருந்துஎன்றுதான் சொல்ல வேண்டும்.
Tags:
Cinema
,
சினிமா
,
புலி
,
புலி படத்தின் மொத்த வசூல்
,
விஜய்
,
ஸ்ருதிஹாசன்