கீர்த்தி சுரேஷுடன் காதல் என்று கிசுகிசுக்கப்படுவது குறித்து அறிந்த தனது தாய் கூறியதை நடிகர் சதீஷ் ரெமோ சக்சஸ் மீட்டில் தெரிவித்துள்ளார்.
பைரவா படத் துவக்க விழாவில் மாலையும், கழுத்துமாக நின்ற கீர்த்தி சுரேஷும், சதீஷும் திருமணம் செய்து கொண்டதாக வதந்தி பரவியது.
இதை அவர்கள் மறுத்தனர். வதந்தி அடங்கினாலும் சதீஷும், கீர்த்தியும் காதலிப்பதாக பேசப்படுகிறது.
கீர்த்தி
கீர்த்தி சுரேஷை நீ காதலிக்கிறியாமே. நீ அந்த பொண்ணை தான் திருமணம் செய்துகொள்ளப் போகிறாயா என தனது தாய் தன்னிடம் கேட்டதாக சதீஷ் ரெமோ சக்சஸ் மீட்டில் தெரிவித்தார்.
வதந்தி
இல்லம்மா. கீர்த்தியும், நானும் காதலிப்பதாக கூறப்படுவது வெறும் வதந்தி. நான் அவரை மணக்கப் போவது இல்லை என்று சதீஷ் அவரின் தாயிடம் கூறியுள்ளார்.
மேனகா
கீர்த்தி முன்னாள் நடிகை மேனகாவின் மகள் என சதீஷ் தனது அம்மாவிடம் தெரிவித்துள்ளார். இதை கேட்ட அவரோ, அப்படின்னா மேனகா கார்ட்ஸில் பத்திரிக்கை அடுச்சிடுவோம் என தெரிவித்துள்ளார்.
ட்வீட்
சதீஷுக்கும், கீர்த்திக்கும் காதல் என்று கிசுகிசுக்கப்படும் போது அவர்கள் ட்விட்டரில் ரக்ஷா பந்தன் அன்று செல்லமாக விளையாடியது பலரின் சந்தேகத்தையும் உறுதிபடுத்திவிட்டது.
Tags:
Cinema
,
கீர்த்தி சுரேஷ்
,
சதீஷ்
,
சினிமா
,
ட்வீட்
,
திருமணம்
,
மேனகா
,
வதந்தி