புலி படத்தை முடித்து விட்டு அட்லி இயக்கும் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் விஜய். டயலாக் காட்சிகளை முதலில் படமாக்கியவர்கள் அதற்கிடையே வெளிநாடுகளுக்கு சென்று பாடல்களையும் படமாக்கி வந்து விட்டனர்.
அந்த வகையில், இன்னும் 25 நாட்களில் விஜய்யின் 59வது படத்தின் படப்பிடிப்பு முடிந்து விடும் என்று அந்த யூனிட்டைச் சேர்ந்தவர்கள் சொல்கிறார்கள். இந்த நிலையில், விஜய்யின் 60வது பட வேலைகளும் தற்போது நடந்துக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே விஜய்யை வைத்து குஷி படத்தை இயக்கிய எஸ்.ஜே.சூர்யா தான் விஜய்யின் அடுத்தப் படத்தை குஷி-2 என்ற பெயரில் இயக்குகிறார். தற்போது ஸ்கிரிப்ட் வேலைகளை முடித்து விட்ட அவர், லொகேசன் உள்ளிட்ட மற்ற வேலைகளில் இறங்கி விட்டாராம்.
மேலும், ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விஜய் நடித்த தலைவா படத்தைத் தயாரித்த ஸ்ரீ மிஸ்ரி புரொடக்சன்ஸ் சந்திரபிரகாஷ் ஜெயின்தான் அந்தப் படத்தை தயாரிக்கிறாராம். காரணம், தலைவா படத்தைத் தயாரித்த அவருக்கு பலக் கோடிகள் நஷ்டமாகி விட்டதாம். இதை ஈடுகட்டத்தான் இப்போது நடித்துக்கொடுக்கிறாராம் விஜய். டிசம்பரில் 59வது படத்தின் வேலைகள் முடிந்து விடும் என்பதால், ஜனவரியில் குஷி-2 படப்பிடிப்பு தொடங்கும் என்று தெரிகிறது.
Tags:
Cinema
,
குஷி-2
,
சினிமா
,
புலி
,
விஜய்
,
விஜய்யின் 60வது படம் குறித்து வெளிவந்த தகவல்