ரசிகர்களுக்கு விஜய் அனுப்பிய நெகிழ்ச்சியான செய்தி..!!

12:27 AM |
இளைய தளபதி விஜய் எப்போதும் தன் ரசிகர்கள் மீது மிகுந்த அன்பு கொண்டவர். இவர் நடிப்பில் சமீபத்தில் வந்த தெறி வசூல் சாதனை படைத்து வருகின்றது.

இந்நிலையில் இப்படத்தின் வெற்றியால் படக்குழு மிகுந்த உற்சாகத்தில் உள்ளது. குறிப்பாக விஜய் புலி தோல்வியை கடந்து கிடைத்த வெற்றியால் மிகவும் சந்தோஷத்தில் உள்ளார்.

இதுக்குறித்து விஜய், ‘இப்படத்தை வெற்றி படமாக்கிய என் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி, இதேபோல் தொடர்ந்து உங்களுக்காக நல்ல படங்களை கொடுப்பேன்’ என கூறியுள்ளார்.
மேலும் வாசிக்க…

விஜய் தன் ரசிகர்களுக்கு கடும் உத்தரவு..!!

12:56 AM |
தற்போது தெறி படத்தின் ரிலிஸில் பிஸியாகவிருக்கின்றார். கடந்த முறை புலி படத்திற்கு ஏற்பட்ட தடங்கல் போல் இந்த முறை ஏதும் ஆகக்கூடாது என கவனமாக உள்ளார்.

இந்நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தல் வருவதால் தன் மக்கள் இயக்கம் சார்பாக யாரும் எந்த கட்சிக்கும் ஆதரவு தரக்கூடாது என உத்தரவு போட்டுள்ளார்.

ஏனெனில், ஒரு சிலர் குழுக்களாக பிரிந்து விஜய் பேரை சொல்லி அரசியல் செய்தவதாக அவருக்கு தெரியவந்துள்ளது, இதனால் தான் இந்த உத்தரவு என தெரிகின்றது.
மேலும் வாசிக்க…

தெறி படத்தில் இணைந்த டி.ஆர்..!!

3:13 AM |
புலி படத்தின் ஆடியோ வெளியீடு விழாவில் ‘இது அசத்தலான புலி, அசால்டான புலி, ஆரவாரமான புலி’ என மூச்சு விடாமல் விஜய் புகழ்ந்து பேசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் T.R.

இவர் இப்போது விஜய் நடிக்கும் தெறி படத்தில் ஒரு குத்து பாட்டு பாடியுள்ளாராம். அவர் பேசினாலே அனல் பறக்கும், பாடினால் சொல்லவா வேண்டும்.

விஜய், சமந்தா, எமி மற்றும் பலர் நடிப்பில் அட்லி இயக்கிவரும் தெறி ஏப்ரல் 14ம் தேதி தியேட்டர்களில் வெளியாகவுள்ளது.

பாடல்களை அனைவரும் எதிர்பார்த்துகொண்டிருக்கும் நிலையில், ஆடியோ வெளியீட்டு தேதி மிக விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.
மேலும் வாசிக்க…

அஜித்,விஜய்க்கு ஓகே. சூர்யாவுக்கு நாட்-ஓகே. ஸ்ருதிஹாசன் அதிரடி..!!

12:44 AM |
உலக நாயகன் கமல்ஹாசன் மகளும் பிரபல நடிகையுமான ஸ்ருதிஹாசன் அடிப்படையில் ஒரு பாடகி மற்றும் இசையமைப்பாளர் என்பது அனைவரும் அறிந்ததே. அவர் சமீபத்தில் தான் நடிக்கும் படங்களில் ஒரு பாடலை பாடுவதை வழக்கமாக கொண்டிருக்கின்றார்.

அஜித்துடன் அவர் நடித்த 'வேதாளம்' படத்திலும், விஜய்யுடன் அவர் நடித்த 'புலி' படத்திலும் ஸ்ருதிஹாசன் ஒரு பாடலை பாடியுள்ளார். இந்நிலையில் சூர்யாவுடன் ஸ்ருதிஹாசன் நடித்து வரும் 'S3' படத்திலும் அவர் ஒரு பாடலை பாடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், 'S3' படத்தில் தான் ஒரு பாடலையும் பாடவில்லை என்றும் தான் நடிக்கும் அனைத்து படங்களிலும் பாட வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றும் கூறியுள்ளார்.

ஆனாலும் இசையமைப்பாளர் அழைப்பு விடுத்தால் 'S3' படத்திலும் பாடத்தயார் என்று கூறியுள்ளார். மேலும் பல செய்திகளில் வருவது போன்று தான் 'S3' படத்தில் போலீஸாக நடிக்கவில்லை என்றும் தன்னுடைய கேரக்டர் இந்த படத்தின் மிகபெரிய சஸ்பென்ஸ் என்றும் ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.
மேலும் வாசிக்க…

புலி நஷ்ட ஈடு- முடிவு கிடைக்குமா??

11:17 PM |
இளைய தளபதி விஜய் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த படம் புலி. இப்படம் ரசிகர்களிடம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை.

மேலும், பலரும் இப்படத்தை அதிக தொகை கொடுத்து வாங்கியதால், பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியது. இதனால், பி.டி.செல்வகுமார் அடுத்து தயாரித்த போக்கிரி ராஜா படத்திற்கு ரெட் கார்ட் போடும் நிலைமை வந்தது.

இதை தொடர்ந்து இன்று புலி தயாரிப்பாளர் மற்றும் புலி படத்தின் விநியோகஸ்தர்கள் ஆகியோர் நஷ்ட ஈடு குறித்து பேசுவதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. மேலும், இன்றே இந்த பிரச்சனைகளுக்கு ஒரு நல்ல முடிவு எடுக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
மேலும் வாசிக்க…

புலி நஷ்டத்தால் போக்கிரி ராஜா படத்திற்கு ரெட் கார்ட்..!!

12:02 AM |
சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஸ்ரீதேவி, ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், சுதீப் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் ‘புலி’. தேவி ஸ்ரீபிரசாத் இசையமைப்பில் வெளியான இப்படத்தை பி.டி.செல்வகுமார் மற்றும் ஷிபு தமீன்ஸ் இணைந்து தயாரித்தார்கள்.

இப்படம் மக்கள் மத்தியில் பெரும் தோல்வியடைந்தது மட்டுமன்றி அப்படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கும் நஷ்டத்தை ஏற்படுத்தியது. அப்படத்தின் தயாரிப்பாளர்கள் தரப்பில் இருந்து நஷ்டஈடு எதுவும் விநியோகஸ்தர்களுக்கு தரப்படவில்லை.

இந்நிலையில், ‘புலி’ தயாரிப்பாளர்களில் ஒருவரான பி.டி.செல்வகுமார் தயாரிப்பில் பிப்ரவரி 26ம் தேதி வெளிவர இருக்கும் படம் ‘போக்கிரி ராஜா’. ஜீவா, ஹன்சிகா, சிபிராஜ் நடித்திருக்கும் இப்படத்தை ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கி இருக்கிறார்.

தற்போது, ‘போக்கிரி ராஜா’ படத்துக்கு விநியோகஸ்தர்கள் தரப்பில் இருந்து ரெட் கார்டு போடப்பட்டு இருக்கிறது. ‘புலி’ படத்தின் நஷ்டஈடு பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்த பிறகே இப்படத்தை வெளியிட முடியும் என்று சூழல் ஏற்பட்டு இருக்கிறது.
மேலும் வாசிக்க…

விஜய்க்காக பலரிடம் சண்டை போட்ட தயாரிப்பாளர்..!!

9:44 PM |
விஜய் மற்றும் அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரிடம் உதவியாளராக இருந்து புலி படத்தின் மூலம் தயாரிப்பாளராக உருவெடுத்தவர் செல்வக்குமார். இவர் தற்போது ஜீவாவை வைத்து போக்கிரி ராஜா படத்தை தயாரித்துள்ளார்.

இப்படத்தின் சிங்கிள் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி,  விஜய்யின் வெற்றியில் செல்வக்குமாருக்கும் ஒரு பெரிய பங்குண்டு.

விஜய்யை பற்றி யாராவது தவறாக பத்திரிக்கையில் எழுதினால், அவர்களிடம் நேரடியாக சென்று அவர் என்ன செய்தார் ஏன் இப்படி பொய்யாக எழுதுகிறீர்கள்? என்று சண்டையிடுவார், அந்த அளவிற்கு விஜய் மீது அவருக்கு பிரியம் என்றார்.
மேலும் வாசிக்க…

விஜய் வரிசையில் கார்த்தி ருசிகர தகவல்..!!

2:08 AM |
புலி படத்தை அடுத்து இளைய தளபதி விஜய் நடித்து வரும் தெறி படத்தின் படப்பிடிப்புகள் இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. ராஜா ராணி படத்தின் வெற்றியை அடுத்து அட்லி இயக்கிவரும் இப்படத்தில் மூன்று விதமான கெட்டப்புகளில் விஜய் நடித்துள்ளார்.

இதில், மொட்டை அடித்ததுபோன்ற ஒரு கெட்டப்பிலும் விஜய் நடித்திருக்கிறார். இந்த கெட்டப் சம்பந்தப்பட்ட காட்சிகளை லடாக்கில் படமாக்கியுள்ளனர். அப்போது விஜய் ரசிகர்களிடம் எடுத்துக்கொண்ட புகைப்படத்தால் இந்த கெட்டப் வெளியே தெரிய வந்தது.

இந்நிலையில் இதேபோன்ற கெட்டப்பை தற்போது கார்த்தியும், அவர் நடிக்கும் "கஸ்மோரா" படத்தில் வைத்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. சமீபகாலமாக கார்த்தி பொது விழாக்களில் கலந்துகொள்ளும்போது, தலையில் தொப்பியுடன் கலந்துகொள்கிறார். ஆனால், அந்த தொப்பிக்கு பின்புறம் அவரது தலையில் முடி இல்லாததுபோல் இருக்கிறது.

விஜய்யும் "தெறி" படப்பிடிப்பின்போது ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களில் இதுபோன்ற தொப்பியுடன் காட்சியளித்தார். பின்பு, அவரது மொட்டைத் தலை வெளிச்சத்துக்கு வந்தது. அதுபோல்தான், கார்த்தியும் "கஸ்மோரா" படத்தில் மொட்டைத் தலையுடன் நடித்திருப்பார் என்று யூகிக்கப்படுகிறது.


மேலும் வாசிக்க…

விஜய்க்காக பணத்தை அள்ளிக்கொடுத்த டி.ஆர்- வெளிவந்த உண்மை தகவல்..!!

1:22 AM |
இளைய தளபதி விஜய்யை அனைத்து திரைப்பிரபலங்களுக்கு மிகவும் பிடிக்கும். ஏனெனில், யாருக்கு எந்த உதவி வேண்டுமானாலும் முதல் ஆளாக ஓடி வந்து உதவுவார்.

அந்த வகையில் சிம்புவின் வாலு படத்திற்கு விஜய் உதவியது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் விஜய்க்கு புலி படத்தின் போது பல பிரச்சனைகள் அவரை சூழ்ந்தது.

அப்போது முதல் ஆளாக வந்த டி.ஆர், படத்தின் ரிலிஸிற்காக எத்தனை கோடி வேண்டும் நான் தருகிறேன் என முன் வந்தாராம். இதை சமீபத்தில் நடந்த போக்கிரி ராஜா சிங்கிள் ட்ராக் விழாவில் பி.டி.செல்வகுமார் கூறினார்.
மேலும் வாசிக்க…

மீண்டும் புலி ஃபார்முலாவில் விஜய்யின் அடுத்த படம்..!!

8:23 PM |
விஜய் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த படம் புலி. இப்படம் ரசிகர்கள் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை.

ஆனால், இப்படத்தின் பாடல்களை அனைத்தும் ரசிகர்களை கவர்ந்தது, இந்த படத்தின் ப்ரோமோ பாடல்களை தவிர மற்ற அனைத்து பாடல்களையும் வைரமுத்து அவர்கள் தான் எழுதியிருந்தார்.

இந்நிலையில் விஜய் அடுத்து பரதன் இயக்கத்தில் நடிக்கும் படத்திலும் அனைத்து பாடல்களையும் வைரமுத்து தான் எழுதவுள்ளாராம்.
மேலும் வாசிக்க…

விஜய் 59: பர்ஸ்ட்லுக் வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு..!!

4:14 AM |
இளையதளபதி விஜய் புலி படத்துக்கு பிறகு அட்லீயின் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பர்ஸ்ட்லுக் தீபாவளி அன்றே வெளிவருவதாக தெரிவித்திருந்தனர்.

ஆனால் ஒரு சில காரணத்தால் தள்ளி போக தற்போது அதற்கு விடை கிடைத்துள்ளது.

தற்போது கிடைத்த தகவல் படி வருகிற 26ம் தேதி விஜய் 59 படத்தின் பர்ஸ்ட்லுக் வெளியிடு என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் இப்படத்தின்  இயக்குனர் அட்லி.

இதை அறிவித்த சில நிமிடங்களிலேயே விஜய் ரசிகர்கள் இந்த செய்தியை இந்திய அளவில் டிரன்ட் செய்து வருகின்றன.
மேலும் வாசிக்க…

புலி படம் வெளியான பிறகு நடிகர் விஜய்யின் வீடு பார்த்தீர்களா?? கொஞ்சம் பாருங்களே..!!

10:42 PM |
மேலும் வாசிக்க…

50வது நாளை கடந்த புலி..!!

2:11 AM |
சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் சமீபத்தில்  வெளியாகி திரையில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் படம் புலி. இப்படத்தில் ஹன்சிகா, சுருதிஹாசன், ஸ்ரீதேவி ஆகியோர் நடித்துள்ளனர்.  இப்படம் விஜய் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இப்படம் வெளியாகி  இன்றுடன் 50 நாளை கடந்து வெற்றிகரமாக திரையில் ஓடி கொண்டு இருக்கிறது இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
மேலும் வாசிக்க…

புலி படத்தின் பித்தலாட்டங்களை பகிரங்கமாக ஒப்புக்கொண்ட தயாரிப்பாளர்கள்..!!

9:15 AM |
‘புலி’ படம் சென்ற மாதம் வெளிவந்தது. படம் ரிலீசுக்கு முந்தைய நாள் விடிய விடிய வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். விஜய் வீடு மற்றும் அலுவலகம், புலி படத்தின் தயாரிப்பாளர்கள் வீடு, கலைப்புலி s.தாணு அவர்களின் வீடு உட்பட சில இடங்களில் சோதனை நடந்தது. இந்த திடீர் சோதனையால் புலி படத்தின் பாக்கிதொகையை சம்பந்தப்பட்டவர்கள் யாராலும் செலுத்த முடியாமல்போனது. இதனால் படம் வெளிவருமா என அதிகாலை வரை மர்மமாகவே இருந்தது, பின்னர் ஒரு வழியாக 10 மணிக்கு மேல் அனைத்து திரையரங்குகளிலும் வெளியானது. இது அனைவரும் அறிந்ததே.

புலி படம் வெளிவந்த பின்னர் படம் அசுர வெற்றி, அபார வெற்றி, வசூல் சாதனை, அம்பானி பாராட்டினார், ரஜினி மற்றும் லிங்குசாமி வாழ்த்தினர் என தயாரிப்பாளர் தரப்பில் இருந்து செய்திகள் வெளியாகிய வண்ணம் இருந்தன. தற்பொழுது புலி படத்தின் தயாரிப்பாளர்கள் பி.டி.செல்வகுமார் மற்றும் சிபு புலி படத்தின் மூலம் மறைக்கப்பட்ட பித்தலாட்டங்களை பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார். நடிகை ஸ்ரீதேவி, தனக்கு இன்னும் கொடுக்கப்பட வேண்டிய சம்பளபாக்கி கொடுக்கவில்லை என புகார் கூறியதன் விளைவே பி.டி.செல்வகுமார் உண்மைகளை உளறக்காரணமாக அமைந்துவிட்டது.

தமிழ் சினிமாவில் எந்த ஒரு படமாக இருந்தாலும் படத்தில் நடிப்பதற்கு தனி சம்பளம், அந்த படத்தை பிற மொழிகளில் டப் செய்தால் அதற்கு தனி சம்பளம் என்பதே வழக்கமான நியதி. அதை சம்மதபட்ட நடிகர், நடிகை வேண்டாம் எனக்கூறினால் தான், கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை. ஸ்ரீதேவி அதன் அடிப்படையில் தான் புகார் கூறினார். ஆனால் ஸ்ரீதேவிக்கு சம்பளமாக பேசிய 3கோடி கொடுக்கப்பட்டுவிட்டது. தெலுங்கில் டப்பிங் பேச நாங்கள் தனியாக சம்பளம் பேசவில்லை, ஸ்ரீதேவியின் கணவர் தான் பணம் தரவில்லையெனில் ஸ்ரீதேவி நடிக்கமாட்டார் என மிரட்டினார். எனவே அவர்களுக்கு பணம் கொடுப்பதாக ஒப்புக்கொண்டோம்.
தெலுங்கில் டப்பிங்பேச 15 லட்சமும், ஹிந்தியில் பேச ஹிந்தி சேட்டிலைட் உரிமையில் 20% (55 லட்சம்) விதம் போனிக்கபூரிடம் கொடுத்துவிட்டோம். முதலில் பேசியபடி அனைத்து பணத்தையும் கொடுத்து விட்டோம், அவர்களிடம் தான் எங்களுக்கு வரவேண்டிய 20 லட்சம் உள்ளது. ஹிந்தியில் ஸ்ரீதேவிக்கு மார்கெட் உள்ளது அங்கு வெளியிட்டால் படம் நன்றாக ஓடும் எனக்கூறினார். எனவே அங்கு ஒரு கோடிக்கு மேல் செலவு செய்து படத்தை வெளியிட்டோம். ஆனால் அங்கிருந்து ஒரு ரூபாய் கூட எங்களுக்கு வரவில்லை. மேலும் ஸ்ரீதேவி, அவருக்கு பிடித்த காஸ்டியும் டிசைனர்களை ஏற்பாடு செய்ததால் 50 லட்சத்திற்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது என பி.டி.செல்வகுமார் பத்திரிக்கை அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் பி.டி.செல்வகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, படத்தை உரிய நேரத்தில் வெளியிடாமல் பல மாதங்கள் இயக்குனர் சிம்புதேவன் தாமதப்படுத்தியதாலும், டாக்ஸ் பிரி கிடைக்காததாலும் நஷ்டம் அதிகமானது. மேலும் படம் ரிலீஸ் சமயத்தில் வருமானவரித்துறையினர் சோதனை செய்ததால் நெருக்கடிக்கு ஆளானோம் எனவும் தெரிவித்துள்ளார்.

இவ்வளவு நடந்துமுடிந்த பின்பு தான் புலி படம் வசூல் சாதனை என பி.டி.செல்வகுமார் தரப்பில் இருந்து விளம்பரப்படுத்தப்பட்டது. நஷ்டமான ஒரு படத்திற்கு லாபம் என விளம்பரப்படுத்தியது எதற்காக? மேலும் வருமானவரித்துறையினரின் சோதனையினால் நெருக்கடியில் உள்ளதாகவும், அதை புரிந்துகொண்டு எக்ஸ்ட்ராவாக கேட்டுக்கும் பணத்தை தரமுடியாத எங்களின் சூழ்நிலையை புரிந்து கொண்டு ஸ்ரீதேவி புகாரை திரும்பபெற்றுக்கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளார் பி.டி.செல்வகுமார்.

வருமானவரித்துறையினர் சோதனையினால் பி.டி.செல்வகுமாருக்கு என்ன நெருக்கடி? இவர்கள் சரியாக வருமானவரி கட்டியிருந்தால் எந்த நெருக்கடியும் ஏற்படவாய்பில்லை. பி.டி.செல்வகுமார் கூறுவதை பார்த்தால் வருமானவரித்துறை சோதனையில் பலகோடி ரூபாய்கள் பறிமுதல் செய்யப்பட்டது போல் உள்ளது.

அப்படி உண்மையிலேயே கஷ்டத்தில் இருந்தால், ஏன் புதியதாக இரண்டு படங்களை தயாரித்து வருகின்றார். உண்மையில் கஷ்டம் பி.டி.செல்வகுமாருக்கா? அல்லது புலி படத்தில் நடித்த விஜய் அவர்களுக்கா? விஜய் வீட்டில் இருந்து வருமானவரித்துறையினர் கருப்புபணம் கைப்பற்றியதாக கூறப்பட்ட செய்தியை விஜய் மறுத்தார். ஆனால் தற்பொழுது பி.டி.செல்வகுமார்  மற்றும் சிபு வருமானவரித்துறையினரால் நெருக்கடியில் உள்ளோம் எனக்கூறியுள்ளார். இதன் மூலம் புலி படத்தில் நடந்த பித்தலாட்ட குளறுபடிகள் அனைத்தும் தற்பொழுது வெளியாகி உள்ளன.
மேலும் வாசிக்க…

விஜய்யின் 60வது படம் குறித்து வெளிவந்த தகவல்..!!

2:24 AM |
புலி படத்தை முடித்து விட்டு அட்லி இயக்கும் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் விஜய். டயலாக் காட்சிகளை முதலில் படமாக்கியவர்கள் அதற்கிடையே வெளிநாடுகளுக்கு சென்று பாடல்களையும் படமாக்கி வந்து விட்டனர்.

அந்த வகையில், இன்னும் 25 நாட்களில் விஜய்யின் 59வது படத்தின் படப்பிடிப்பு முடிந்து விடும் என்று அந்த யூனிட்டைச் சேர்ந்தவர்கள் சொல்கிறார்கள். இந்த நிலையில், விஜய்யின் 60வது பட வேலைகளும் தற்போது நடந்துக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே விஜய்யை வைத்து குஷி படத்தை இயக்கிய எஸ்.ஜே.சூர்யா தான் விஜய்யின் அடுத்தப் படத்தை குஷி-2 என்ற பெயரில் இயக்குகிறார். தற்போது ஸ்கிரிப்ட் வேலைகளை முடித்து விட்ட அவர், லொகேசன் உள்ளிட்ட மற்ற வேலைகளில் இறங்கி விட்டாராம்.

மேலும், ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விஜய் நடித்த தலைவா படத்தைத் தயாரித்த ஸ்ரீ மிஸ்ரி புரொடக்சன்ஸ் சந்திரபிரகாஷ் ஜெயின்தான் அந்தப் படத்தை தயாரிக்கிறாராம். காரணம், தலைவா படத்தைத் தயாரித்த அவருக்கு பலக் கோடிகள் நஷ்டமாகி விட்டதாம். இதை ஈடுகட்டத்தான் இப்போது நடித்துக்கொடுக்கிறாராம் விஜய். டிசம்பரில் 59வது படத்தின் வேலைகள் முடிந்து விடும் என்பதால், ஜனவரியில் குஷி-2 படப்பிடிப்பு தொடங்கும் என்று தெரிகிறது.
மேலும் வாசிக்க…

புலி படத்தின் மொத்த வசூல் யாருக்காவது தெரியுமா?? பாருங்கள் அசந்துபோவீர்கள்..!!

1:55 AM |
சிம்புதேவன் இயக்கத்தில் இளையதளபதி , ஸ்ருதிஹாசன்,ஹன்சிகா ,சுதீப் மற்றும் பல முகங்கள் நடிப்பில் வெளியான திரைப்படம்தான் புலி. இந்த படம் கடந்த அக்டோபர் மாதம் முதலாம் திகதி உலக திரை அரங்குகளில் வெளியிடப்பட்டது.

ரசிகர்கள் மத்தியில் பாரிய எதிர்பார்ப்புடன் வெளியான இந்த படம் ரசிகர்களின் மனதை நினைத்த அளவில் இடம் பிடிக்கவில்லை என பல இந்திய ஊடகங்கள் செய்திகளை வெளியிட்ட வண்ணம் இருந்தன.

படத்தின் செலவு 118 கொடிகள் என பட குழுவினர் அறிவித்து இருந்தனர் . அக்டோபர்  மாத நிறைவில் புலி திரைப்படம் 130 கோடிகளை கடந்து வசூல் சாதனை படைத்து இருப்பதாக அதே இந்திய ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.

இது விஜய் ரசிகர்களுக்கு பெரிய விருந்துஎன்றுதான் சொல்ல வேண்டும்.
மேலும் வாசிக்க…

கார் களவனாக மாறிய நட்டி..!!

12:42 AM |
நடிகர் நட்ராஜ் ‘சதுரங்க வேட்டை’ படம் வெற்றி பெறவே பல படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது.ஆனால் அதையெல்லாம் ஒதுக்கி வைத்து விஜய் நடிப்பில் வெளியான புலி படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய சென்றார்.

புலி படம் வெளியான நிலையில், நட்ராஜ் தற்போது நடிப்பில் கவனம் செலுத்தவுள்ளார்.இவர் அடுத்ததாக புதுமுக இயக்குனர் தாஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். தாஜ் கூறிய ஒற்றை வரி கதை மிகவும் பிடித்துப்போக, நடிக்க சம்மதித்திருக்கிறார் நட்ராஜ்.

இப்படத்திற்கு போங்கு என்று தலைப்பு வைத்திருப்பதாக கூறப்படுகிறது. பயணக்கதையாக உருவாக இருக்கும் இப்படத்தில் நட்ராஜ் கார் திருடனாக நடிக்க இருக்கிறார்.இதில் நட்ராஜுக்கு ஜோடியாக ராய் லட்சுமி நடிக்க இருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் வாசிக்க…

விஜய்யின் அடுத்த படத்தையும் குறி வைக்கும் பிரபல தயாரிப்பு நிறுவனம்..!!

10:49 PM |
இளையதளபதி விஜய்யை புலி கொஞ்சம் பிராண்டி விட்டு சென்றாலும் அதை பற்றி கவலைப்படாமல் அவரது அடுத்த படத்திற்கான வேலைகளில் பிசியாக இருக்கிறார் விஜய். இயக்குநர் அட்லீ இயக்கிக் கொண்டிருக்கும் இப்போதைக்கு காக்கி என பெயரிடப்பட்டிருக்கும் படத்தின் படப்பிடிப்பு 70 சதவீதம் முடிந்துவிட்டது.

படத்தை ஜனவரியில் முடித்துவிட வேண்டுமென உழைத்துக் கொண்டிருக்கிறது காக்கி டீம். இதனை தொடர்ந்து இப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான லைக்கா வாங்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே லைக்கா நிறுவனம் விஜய்யின் கத்தி படத்தை தயாரித்திருந்தார்கள். சமீபத்தில் தங்கமகன், நானும் ரௌடிதான் படத்தின் வெளியீட்டு உரிமையை வாங்கி அதில் வெற்றியும் கண்டுவிட்டார்கள். தற்போது விஜய்யின் அடுத்த படத்தையும் லைக்கா வாங்கவிருப்பதால் அனைவரின் பார்வையும் மீண்டும் லைக்கா மீது திரும்பியுள்ளது. எந்த புத்துல இருந்து எப்ப பாம்பு கிளம்புன்னு தெரியலையே பாஸு...
மேலும் வாசிக்க…

ஹாலிவுட் படத்தின் காப்பியா விஜய்யின் புலி..!!

8:23 PM |
ஒரு படம் உருவாகும் அப்படத்தின் போஸ்டரை வைத்து இது எந்தப் படத்தின் காப்பி என்பதை கண்டுபிடித்து விடுகின்றனர் ரசிகர்கள். அந்த அளவு தொழில்நுட்பத்தை தங்கள் விரல் நுனியில் வைத்திருக்கின்றனர். அதுவும் பெரிய நட்சத்திரங்கள் நடிக்கும் படம் என்றால் ஏதாவது செய்தி கிடைக்காதா? என்ற சல்லடை போட்டு தேடி வருகின்றனர்.

இந்நிலையில் சிம்பு தேவன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள புலி’ படம் அக்டோபர் மாதம் 1ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி கொண்டிருக்கையில் படம் பற்றி ஒவ்வொரு செய்தியாக வந்து கொண்டிருக்கிறது. இதில் சில பொய்யான தகவல்களும் கலந்து வருகின்றன.

புலி படத்தில் உள்ள குள்ள மனிதர்களின் காட்சியை ஒரு கொரியன் படத்தின் காப்பி என்று கூறி வந்தனர். தற்போது இது 1988ஆம் ஆண்டு வெளியான வில்லோவ் (Willow) என்ற ஹாலிவுட் படத்தின் காப்பி என்று சத்தியம் செய்யாத குறையாக ஒரு வீடியோவை பதிவேற்றி உள்ளனர்.

அட அவசரத்த பாருங்களேன்  இன்னும் ஜஸ்ட் ஒரு மாசம்தான். வெயிட் பண்ணி பார்த்திடுவோம்.
மேலும் வாசிக்க…
2015 Thediko.com