தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் மன்னர்கள் விஜய், அஜித். இவர்கள் படங்கள் வருகிறது என்றாலே பேனர், போஸ்டர் என திரையரங்குகள் திருவிழா போல் இருக்கும், இதில் விஜய், அஜித் இருவரின் படங்கள் ஒரே நாளில் வந்தால் திரையரங்கில் வெட்டு குத்து நடக்கும்.
ஆனால், இந்த சமூக வலைத்தளங்கள் எப்போது வந்ததோ சண்டையெல்லாம் தற்போது இணையத்தில் தான் அனல் பறக்கிறது, அது ஒரு ஆக்கப்பூர்வமாக இருந்தால் பரவாயில்லை, அதனால் எந்த பயனும் யாருக்கும் இல்லை.
இவர்களால் அந்த நடிகர்களின் மதிப்பிற்கு தான் பாதிப்பு ஆகும், அதைவிட கொடுமை என்னவென்றால் எந்த ஒரு நடிகரை பற்றி எந்த செய்தி போட்டாலும் இவர்கள் ரசிகர்களின் சண்டை தான் கமெண்ட் பாக்ஸில் இருக்கும்.
தற்போது இந்த சண்டை எல்லை மீறி சமீபத்தில் நடந்த சுவாதி கொலை வழக்கு வரை வந்து நின்றுள்ளது. இதில் மிகவும் அசிங்கம் என்னவென்றால், அந்த கொலைக்காரன் புகைப்படத்தை போலிஸ் வெளியிட்டது, அதில் விஜய், அஜித் தலையை வைத்து மார்பிங் செய்து இவர்கள் செய்த கலாட்டா பலரையும் கோபப்படுத்தியது.
எந்த விஷயத்தில் விளையாடுவது என்றே தெரியவில்லை, அப்படி என்ன இவர்களுக்குள் பிரச்சனை, அந்த நடிகர்கள் இதையெல்லாம் ஒருதுளி கூட கண்டுக்கொள்வது கிடையாது,அவர்கள் நடிக்கிறார்கள் கோடி கோடியாக சம்பாதிக்கிறார்கள் ரசிகர்கள் பிரச்சனையால் எத்தனை பேர் பாதிக்கப்படுகிறார்கள் என அவர்களுக்கு தெரியுமோ? இல்லையோ?.
சில நடுநிலையாளர்களிடம் இதுக்குறித்து கேட்ட போது, “இவர்களுக்குள் நீ பெரிய ஆளா, நான் பெரிய ஆளா? என்பதில் தொடங்குகிறது இந்த சண்டை, ஆனால், அந்த சண்டை அவர்களுக்குள் இருப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை, வழக்கம் போல் அவர்கள் செய்யும் கொடுமையை பார்த்து சிரித்துவிட்டு நகர்ந்துவிடுவோம்,
ஆனால், இதுபோல் சென்சிட்டிவான விஷயத்திற்கு கூட இவர்களின் நடிகர்கள் சண்டையை உள்ளே கொண்டு வருவது மிகவும் வருத்தத்தை அளிக்கின்றது, இதெற்கெல்லாம் தீர்வே இல்லை என்று தான் தோன்றுகின்றது’ என கோபமாக கூறுகின்றனர். இதேபோல் பல கட்டுரைகள் நம் தளமே வெளியிட்டு விட்டது, இதைப்பார்த்தும் யாரும் திருந்துவார்களா என்றால் கேள்விக்குறி தான்.
Tags:
Cinema
,
அஜித்
,
சண்டை
,
சினிமா
,
சுவாதி கொலை
,
விஜய்
,
விஜய் அஜித் ரசிகர்கள்