முதன்முதலாக சூர்யா மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்துள்ள '24' படத்தின் டீசர் வரும் வெள்ளியன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளநிலையில் நமக்காக படக்குழுவினர் டீசரின் சிறப்புக்காட்சியை திரையிட்டு காட்டியுள்ள நிலையில் படக்குழுவினர்களுக்கு நன்றி தெரிவித்து கொண்டு இந்தடீசர் விமர்சனத்தை ஆரம்பிக்கின்றோம்.
ஒரு நிமிடம் எட்டு வினாடிகள் ஓடும் இந்த டீசரில் சூர்யா மூன்றுவிதமான கெட்டப்புகளில் தோன்றுகிறார். முதன்முதலாக சூர்யா அசுரத்தனமான வில்லன்கேரக்டரில் நடித்துள்ளார். மேலும் ஒரு வயதான கேரக்டரும், இளமையான கேரக்டர் என சூர்யாவின் கேரக்டர்கள் அமைந்துள்ளது. இந்த இரண்டுவேடங்களும் தந்தை-மகன் கேரக்டர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த டீசரில் இருந்து விஞ்ஞானி கெட்டப்பில் குறுந்தாடியுடன் வரும் சூர்யாவின் பெயர் ஆத்ரேயா என்றும், அவர்தான் இந்த படத்தின் வில்லன் என்பதும்தெரிய வருகிறது. மேலும் வில்லன் சூர்யாவும், வயதான சூர்யாவும் டுவின்ஸ் ஆக இருக்க வாய்ப்பு உள்ளது. "ஒரு கருவறையில் உதித்தோம்.... ஒரு சிலநொடி இடைவெளியில் ஜனித்தோம்" என்ற வசனம் டீசரின் ஆரம்பத்தில் ஒலிக்கின்றது. இதிலிருந்தே இருவரும் டுவின்ஸ் இருக்கலாம் எனயூகிக்கப்படுகிறது.
மேலும் வயதான சூர்யாவுக்கு நித்யாமேனனும் இளமையான சூர்யாவுக்கு சமந்தாவும் ஜோடிகளாக நடித்துள்ளனர். சூர்யாவின் மூன்று கேரக்டர்களும்குறிப்பாக வில்லன் ஆத்ரேயா கேரக்டர் சூர்யாவின் நடிப்புக்கு சரியான தீனி போட்டுள்ளதால் இந்த கேரக்டர் சூர்யாவின் ரசிகர்களுக்கு பெருவிருந்தாகஇருக்கும் என்பது மட்டும் உறுதி.
Tags:
24 Teaser
,
Review
,
Teaser Review
,
சமந்தா
,
சூர்யா
,
நித்யாமேனன்