பாபிசிம்ஹா தன் திருமணத்திற்கு அப்புறம் அதிகமா சர்ச்சையில் சிக்குறார். ஏற்கனவே பாம்புசட்டை படத்தில் படத்தை பார்த்துட்டு வாங்குங்கன்னு இவர் போட்ட பிட்டில் தயாரிப்பாளர் மனோபாலா அதிர்ச்சியடைந்ததாக சொல்லப்பட்டது.
இப்போது, கைப்பேசி நிறுவனமொன்று தமிழில் தன் நிறுவனத்திற்காக ஒரு விளம்பரப்படம் எடுக்க,இங்குள்ள ஏஜென்ஸி மூலம் லிஸ்ட் எடுத்ததில் விஜய் சேதுபதியும் பாபி சிம்ஹாவும் இருந்திருக்கிறார்கள். விஜய் சேதுபதி ஓகே என்று அவர்கள் முடிவு பண்ணியிருக்கிறார்கள்.
அது லிஸ்ட் எடுத்து தந்த நிறுவனம் மூலம் பாபி சிம்ஹாவுக்கு தெரிய, அந்த மும்பை நிறுவனத்திற்கு நேரடியாக ஒரு மின்னஞ்சல் அனுப்பி, விஜய் சேதுபதியை விட நான் பெரிய நடிகன். தேசிய விருது பெற்றவன். அவ்வளவு பெரிய ரசிகர்கள் கூட்டம் வைத்திருக்கிறேன் என்றவுடன் பாபி சிம்ஹாவை புக் செய்துவிட்டார்கள் என்று சொல்லப்படுகிறது.
சம்பளம் 1 கோடியாம். பணத்துக்காக நண்பனையே காலை வாரி விட்டாரே பாபி என்கின்றது கோடம்பாக்கம்..
Tags:
Cinema
,
சினிமா
,
துரோகம்
,
நண்பன்
,
பாபிசிம்ஹா
,
விஜய் சேதுபதி