இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா, சிருஷ்டி டாங்கே என பல நட்சத்திரங்கள் நடித்துக் கொண்டிருக்கும் படம்தான் தர்மதுரை. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் விசாகப்பட்டினத்தில் நடந்த படப்பிடிப்பில் கல்லூரி விழா நடைபெறுவது போன்ற காட்சிகளை படமாக்கிக் கொண்டிருந்தார் இயக்குநர் சீனு ராமசாமி.
இதில் விஜய் சேதுபதி, தமன்னா, சிருஷ்டி டாங்கே போன்றோர் நடித்துக் கொண்டிருக்க படப்பிடிப்பின் இடைவெளியில் விஜய் சேதுபதி மற்றும் தமன்னாவுடன் சிருஷ்டி ஒரு செல்ஃபி எடுத்து அதை அவரது ட்விட்டர் பக்கத்தில் போட்டுள்ளார். இதை பார்த்த இயக்குநர் சீனு ராமசாமி, சிருஷ்டியை அழைத்து காரசாரமாக திட்டி தீர்த்துவிட்டாராம்.
சாரி சார் நான் தான் தெரியாம போட்டுட்டேன் என்று இயக்குநரிடம் மன்னிப்பும் கேட்டுள்ளார். யார் திருஷ்டி பட்டுதோ குழந்தை இப்படி திட்டு வாங்கிடிச்சேன்னு பலர் புலம்பினார்களாம்.
Tags:
Cinema
,
ஐஸ்வர்யா
,
சிருஷ்டி
,
சினிமா
,
தமன்னா
,
தர்மதுரை
,
விஜய் சேதுபதி