கதவை அடைத்துக் கொண்டு கதறி அழுதேன்: நடிகர் கமல் ஓபன் டாக்..!!

12:19 AM |
உலகநாயகன் கமலஹாசன் தன்னுடைய பிறந்தநாளன்று தான் கதறி அழுததாக மனம் திறந்து கூறியுள்ளார்.

முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் ரசிகர்கள் யாரும் தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்நிலையில் நடிகர் கமலஹாசன் தனது பிறந்தநாள் அனுபவம் குறித்து கூறியுள்ளார். அதில் இதேநாளில் பிறந்தநாள் கொண்டாடும் என் சினிமாத்துறையைச் சாராத நண்பர்களுடன் எப்போதும் ஒன்றாக இருப்பேன்.

ஆனால் இந்தமுறை அதற்கும் மறுப்பு தெரிவித்துவிட்டேன், வலி அதிகமாக உள்ளது.

மேலும் தன்னுடைய 16 வது பிறந்தநாள் தான் எனக்கு மிகவும் கடினமானது. அப்போது எந்த ஒரு லட்சியமும் இல்லாமல் இருந்தாகவும், எத்திசையில் செல்லவேண்டும் என்று தெரியாது, எதற்காக வாழ்கிறேன் என்றும் தெரியாது. என் அப்பா என்னை அழைத்து நன்கு கண்டித்தார், இதன் காரணமாக ஓர் அறைக்குள் புகுந்து கதவை அடைத்துக்கொண்டு கதறி அழுதேன் என கூறியுள்ளார்.
மேலும் வாசிக்க…

கீர்த்தி சுரேஷை கிண்டல் செய்த பார்த்திபன்..!!

12:01 AM |
பார்த்திபன் எப்போதும் கலகலப்பாக பேசுபவர். எந்த ஒரு முன் ஏற்பாடும் இல்லாமல் சரவெடி போல் பேசி விடுவார்.

நேற்று மாவீரன் கிட்டு இசை வெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்ட இவர் ‘இன்றைய மக்கள் சினிமாவை மிகவும் உற்று நோக்குகிறார்கள்.

சமீபத்தில் கூட ஒன்று படித்தேன் “தொடரி படத்தில் ரயில் அத்தனை வேகமாக செல்லும் போது கூட ஏன் கீர்த்தி பாவடை பறக்கவில்லை” என்று ஒருவர் கேள்வி கேட்டுள்ளார்.

இதை வைத்தே புரிந்துக்கொள்ள வேண்டும், ரசிகர்கள் சினிமாவை எப்படி கவனிக்கிறார்கள், இந்த படத்தை சுசீந்திரன் மிகவும் கவனமாக எடுத்துள்ளார்.’ என பார்த்திபன் பேச அரங்கமே அதிர்ந்தது.
மேலும் வாசிக்க…

சிவா-வை தொடர்ந்து மேடையிலேயே அழுத தனுஷ் காரணம் என்ன?

12:07 AM |
தனுஷ் எப்போதும் மனதில் பட்டதை வெளிப்படையாக கூறிவிடுவார். இவர் நடிப்பில் நேற்று கொடி படம் திரைக்கு வந்தது.

இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் தனுஷிடம் அவருடைய அம்மாவை பற்றி கேட்டனர்.

தன் அம்மா சிறுவயதில் தங்களுக்காக எத்தனை கஷ்டத்தைப்பட்டார் என்பதை கூறிக்கொண்டே இருக்கும் போது ஒரு கட்டத்தில் கண்ணீரை அடக்க முடியாமல் அழுதார்.

சில நிமிடங்கள் மிகவும் எமோஷ்னலாகவே அந்த பேட்டியில் தனுஷ் பேசி வந்தார்.
மேலும் வாசிக்க…

சிங்கம்-3 படத்தில் அனுஷ்காவிற்கு இப்படி ஒரு நிலைமையா? சோகத்தில் ரசிகர்கள்..!!

12:48 AM |
சிங்கம்-3 படம் டிசம்பர் மாதம் வெளிவரவுள்ளது. இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கின்றார், இவர் தான் கடந்த இரண்டு பாகத்திலும் ஜோடி.

இந்நிலையில் சமீபத்தில் வந்த சிங்கம்-3 போஸ்டரில் ஸ்ருதிஹாசன் கழுத்தில் தாலியுடன் சூர்யாவின் அருகில் நிற்கின்றார்.

இதைப்பார்த்த பலரும் அனுஷ்கா இறந்துவிடுவாரா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், ஒரு சிலர் ஆடியன்ஸை குழப்புவதற்காகவும் இப்படி புகைப்படங்களை வெளியிட்டு இருக்கலாம் என கூறியுள்ளனர்.
மேலும் வாசிக்க…

உலகநாயகன் கமல் அதிரடி முடிவு - ரசிகர்கள் அதிர்ச்சி..!!

10:29 PM |
பத்மஸ்ரீ கமலஹாசனுக்கு உலக அளவில் ஏராளாமான ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் செவாலியர் விருது வென்ற அவர் சபாஷ் நாயுடு படத்தை தற்போது எடுத்து வருகிறார்.

எதிர்பாராத விதமாக திடீரென்று அவருக்கு ஏற்பட்ட சிறு விபத்து, நீண்ட நாட்கள் அவரை படுக்கையில் கிடப்பில் போட்டது. இதனால் வேதனை அடைந்த ரசிகர்கள் அவருக்காக கோவில்களில் சிறப்பு பிராத்தனைகளை செய்தனர்.

தற்போது குணமாகிவிட்ட அவரை கண்டு ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டாலும், மீண்டும் ஒரு அதிர்ச்சியை கமல் அவர்களுக்கு தந்துள்ளார்.

வரும் நவம்பர் 7ம் தேதி அவரது பிறந்த நாள் வருவதையொட்டி ரசிகர்கள் பிறந்த நாள் கொண்டாட ஏற்பாடுகளை செய்வார்கள்.

ஆனால் இப்போது அவர் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை இப்படி இருப்பதால், என்னுடைய பிறந்தநாளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டுகிறேன் என்று அவரது நற்பணி இயக்கத் தோழர்களுக்கு ட்விட்டரில் கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.


மேலும் வாசிக்க…

சென்னையில் தனுஷ் அலுவலகம் முற்றுகை பரபரப்பு தகவல்கள்..!!

11:47 PM |
தமிழ் சினிமாவை தாண்டி ஹாலிவுட் வரை படங்கள் நடிக்க இருக்கிறார் தனுஷ். இவரது ரசிகர்களுக்கு இந்த அவ்வளவு சந்தோஷத்தை கொடுத்திருக்கிறது. இந்நிலையில் தனுஷின் ரசிகர்கள் அண்மையில் அவரது ஆபிஸை முற்றுகையிட்டு போராடியிருக்கின்றனர்.

காரணம் என்னவென்றால், கடந்த சில மாதங்களாக தனுஷ் ரசிகர் மன்றத் தலைவர் பொறுப்போடு செயல்படாமல் வெளிநாடு சென்றுவிட்டாராம்.

இதனால் வேறொரு தலைவரை தேர்ந்தெடுக்க தனுஷிடம் ரசிகர்கள் கேட்டுக் கொண்டனராம். இதனால் தனுஷும் சிலரை மட்டும் வர சொல்ல, மொத்த ரசிகர் கூட்டமே ஆபிஸில் ஆஜரனாதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த கூட்டம் எதற்காக கூடினார்களோ? அதை செய்தார்களா என்று தகவல் தெரியவில்லை.
மேலும் வாசிக்க…

வாரிசு நடிகைக்கு ஆப்பு வைத்த அழுகாச்சி ஹீரோ கிடுகிடு தகவல்கள்..!!

12:51 AM |
அழுகாச்சி ஹீரோ (டிவி ஹீரோவை இந்த மூணு நாளா அப்படித்தான் பாஸ் சொல்றாங்க வாரிசு நடிகையும் முதல் படத்தில் ஜோடி சேர்ந்தபோதே கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிவிட்டது.

அடுத்த படத்திலும் அது தொடர்ந்து நடிகையின் அக்கா கல்யாணத்தில் மாப்பிள்ளை பொண்ணு கோலம் வரைக்கும் போனது.

அந்த கெமிஸ்ட்ரி அப்படியே நீடிப்பதால் அடுத்த படத்திலும் வாய்ப்பு தருவார் என எதிர்பார்த்தார் நடிகை. ஆனால் ஹீரோ முடியாது என சொல்லி சர்ச்சை, காத்தாடி என்று வரிசையாக பெரிய ஹீரோயின்களாக புக் பண்ணிவிட்டார். அப்ப அதுக்கும் அடுத்த படம்? அதிலும் வாய்ப்பு இல்லை என்று சொல்லிவிட்டாராம்.

கிசுகிசுக்காக பயப்படவில்லை. ஒரே ஹீரோயினுடன் நடித்தால் ரசிகர்களுக்கு போரடித்துவிடும் என்று காரணம் சொல்லியிருக்கிறார். போரடிப்பது ரசிகர்களுக்கா? உங்களுக்கா? என்று கேட்டுவிட்டு அதோடு ரிலேஷன்ஷிப்பை கிடுகிடுவென பிரேக் அப் செய்துவிட்டாராம் நடிகை.
மேலும் வாசிக்க…

தனுஷை விட நான் கீழ தான் - சிம்பு..!!

1:56 AM |
நடிகர் சிம்பு இன்று Periscope மூலம் தனது ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வருகிறார். இதில் ஒரு தனுஷ் ரசிகர் , உங்களை தனுஷுடன் ஒப்பிட்டு பேசுவதை உங்க ரசிகர்களிடம் நிறுத்த சொல்லுங்க, அவர் திறமைக்கு இப்போ எங்கேயோ இருக்கிறார் என்றார். அதற்கு பதிலளித்த சிம்பு,

"தனுஷோட வளர்ச்சியில் எனக்கு சந்தோஷம் தான், நான் அவரை விட கீழ என்று நீங்கள் நினைத்தால் ஓகே, அவரை மட்டுமில்ல மற்ற நடிகர்களை விடவும் நான் கீழ தான். அதனால் என்ன பிரச்சனை இப்போ, அவருடைய உழைப்பால் இந்த உயர்வுக்கு வந்து இருக்கிறார், அதை பார்த்து என்றுமே நான் பொறாமை பட மாட்டேன்.

இப்போ எனக்கு இருக்கும் யோசனை என் ரசிகர்களை மேலும் சந்தோஷ படுத்த வேண்டும். அவ்வளவு தான் என்றார்.
மேலும் வாசிக்க…

எம்.எஸ்.தோனி திரைவிமர்சனம் - MS Dhoni Review

11:54 PM |
இந்திய சினிமா மட்டுமில்லை, உலக கிரிக்கெட் ரசிகர்களே எதிர்ப்பார்த்து காத்திருந்த படம் எம்.எஸ்.தோனி தி அண்ட் டோல்ட் ஸ்டோரி. ஒரு சாதரண ரயில்வே டிக்கெட் கலேக்ட்டர் எப்படி இந்தியாவே தலையில் தூக்கி கொண்டாடும் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் ஆனார், என்பதை நீரஜ் பாண்டே இயக்கத்தில், தோனியாக சுஷாந்த் நடிக்க இன்று உலகம் முழுவதும் இந்த படம் வெளிவந்துள்ளது.

கதைக்களம்
தோனி இன்று நமக்கு ஒரு சக்சஸ்புல் மனிதராக தான் தெரியும், பல கோப்பைகளை இந்தியாவிற்காக வென்றவர் என பல சாதனைகளுக்கு சொந்தக்காரர்.

ஆனால், இந்த இடத்தை அவர் அடைய பட்ட கஷ்டங்கள் சாதரணம் இல்லை, தோனியின் வாழ்க்கையில் அவர் எத்தனை கஷ்டப்பட்டு இந்த இடத்தை அடைந்தார் என்பதையும், அவர் வாழ்க்கையில் நடந்த இன்பம், துன்பம், காதல், மோதல் என நமக்கு தெரியாத பல விஷயங்களை மிகவும் நேர்த்தியாக கூறியிருக்கும் படம் தான் இந்த எம்.எஸ்.தோனி தி அண்ட் டோல்ட் ஸ்டோரி.

படத்தை பற்றிய அலசல்
தோனி கிரிக்கெட் உலகிற்கு எப்படி வருகிறார் முதல் உலக கோப்பையை எப்படி வெல்கிறார் என்பது வரை உள்ளது. சுஷாந்த் படம் முடிந்தவுடன் திரையரங்கமே எழுந்து கைத்தட்டுகின்றது, அவர் நடிப்பிற்கு இதுவே ஒரு சான்று.

தோனியின் வாழ்க்கையில் நாம் பார்க்காத சில சோகப்பக்கங்களை நீரஜ் மிக அழகாக காட்டியுள்ளார், சாதரண குடும்பத்தில் பிறந்து சரித்திர நாயகன் ஆகத்துடிக்கும் ஒரு இளைஞன் வாழ்க்கையில் வறுமையால் எந்த பக்கம் செல்வது என்று தெரியாமல் சுஷாந்த் தோனியாக வாழ்ந்து இருக்கிறார்.

அதிலும் நம் பாதையை நாம் தான் தீர்மாணிக்கவேண்டும், வாழ்க்கை முழுவதும் பவுன்சர் வந்துக்கொண்டே தான் இருக்கும், நாம் தான் குணிந்து செல்ல வேண்டும் என்பது போன்ற வசனங்கள் ரசிக்க வைக்கின்றது. இடைவேளையில் தோனி தன் வாழ்க்கையை தீர்மாணிக்கின்றார்.

அதன்பிறகு அவர் வாழ்க்கையில் நாம் அறியாத ஒரு காதல், சாக்‌ஷிக்கு முன் வரும் காதல், அதன் சோகமான முடிவு என பல சர்ப்ரைஸ் ரசிகர்களுக்கு உள்ளது. அதிலும் தோனி எப்படி இத்தனை பொறுமையாக இருக்கிறார் என்பதன் விளக்கமும் காட்சிகளாகவே காட்டப்பட்டுள்ளது.

யார் முன்பும் தோனி அழுகமாட்டார் என்பதையும் காட்டியவிதம் சூப்பர், இசை, ஒளிப்பதிவு என அனைத்திலும் சிக்ஸர் தான், அப்படியே CJ வேலையில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம், யுவராஜ், கம்பீர், சேவாக் ஆகியோரின் நட்பு குறித்து காட்டியவிதம் தற்போதாவது தெரிந்திருக்கும் ரசிகர்களுக்கு நாம் எண்ணியது எல்லாம் பொய் என்று.

படத்தின் கிளைமேக்ஸ் அனைவரும் அறிந்தது தான், உலகமே பார்த்தது தான், ஆனால், கொஞ்சம் கூட அந்த சந்தோஷம் குறையவில்லை, அத்தனை சந்தோஷத்தில் துள்ளிக்குதிக்கின்றார் ரசிகர்கள்.

க்ளாப்ஸ்
சுஷாந்த் மற்றும் படத்தில் நடித்தவர்களின் அனைவரின் நடிப்பு.

ரசிகர்கள் பலரும் அறியாத பல தகவல்களை காட்டிய விதம்.

படத்தின் வசனம். கிளைமேக்ஸ் காட்சிகள்.

பல்ப்ஸ்
படத்தின் நீளம் மட்டுமே, கிரிக்கெட் அறியாத ரசிகர்களுக்கு கொஞ்சம் பொறுமையை சோதிக்கும்

மொத்தத்தில் சாதரண மனிதன் சரித்திர நாயகன் ஆனதை நாம் அனைவரும் கொண்டாடியே தீர வேண்டும்.
மேலும் வாசிக்க…

பிரபுதேவா ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தி..!!

12:37 AM |
நடிகர் பிரபுதேவா தற்போது விஜய் இயக்கத்தில் உருவாகிவரும் தேவி படத்தில் நடித்து வருகிறார். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் தயாராகி வரும் இந்த படத்தில் வரும் ஒரு பாடலுக்காக படப்பிடிப்பு நடத்தியுள்ளனர்.

500 நடன கலைஞர்களுக்கு மேல் அதில் பங்கேற்றுள்ளனர்.

நடனமாடிக் கொண்டிருந்த போது நடந்த விபத்தில் பிரபுதேவாவின் முதுகு பகுதியில் அடிபட்டுள்ளது வலியால் துடித்த அவரை உடனே வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

அவரை இரண்டு, மூன்று நாட்களுக்கு ஓய்வு எடுக்க மருத்துவர்கள் கூறியிருப்பதாக, இந்த படத்தை தயாரிக்கும், நடிகர் Sonu Sood தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க…

ரசிகை ஒருவர் அஜித் மீது கொண்ட பற்றை காட்ட செய்த விஷயம்..!!

9:56 PM |
தல அஜித்திற்கு நாடுமுழுவதும் எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள் என அனைவர்க்கும் தெரியும். அதில் ரசிகை ஒருவர் அஜித் மீது கொண்ட பற்றை காட்ட செய்த விஷயம் அனைவரையும் ஆச்சர்ய படவைத்துள்ளது.

இவர் அஜித்தின் உருவத்தை தன் கையில் டாட்டூவாக வரைந்துகொண்டுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது.
   

மேலும் வாசிக்க…

ரசிகர்களுக்கு ஷாக் குடுத்து ஹாட் லுக்கில் களமிறங்கும் ப்ரேமம் சாய் பல்லவி

12:07 AM |
மேலும் வாசிக்க…

டாப்ஸியை பின் தொடர்ந்த மர்ம நபர்..!!

2:31 AM |
தன்னைப் பின்தொடர்ந்து வீட்டுக்குள் புக முயன்ற நபரால் தான் அதிர்ச்சியடைந்ததாக நடிகை டாப்ஸி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள  அறிக்கை விபரம் வருமாறு:

ஒரு நடிகையாக ரசிகர்களால் விரும்பப்படுவதை  நாங்கள் விரும்பக் கூடியவர்கள்தான். ஆனால் எங்களை சிறப்பு கவனத்துக்கு உரியவர் என்று உணரச் செய்வதற்கும், அச்சமூட்டுவதற்கும் சிறிய வேறுபாடுதான் உள்ளது.

அந்த வகையில் என்னுடைய  படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் இருக்கும் பாதுகாப்பு வளையத்தையும் மீறி  இந்த நபர் என்னை முதலில் சந்திக்க வந்த பொழுது நான் அதிர்ச்சியடைந்தேன்.  என்னைப்  பார்க்க வரும் ரசிகர்களையும், என்னுடைய நடிப்பை பாராட்டுபவர்களையும் நான் மதிக்கிறேன்.  அனால் என்னுடைய அந்தரங்கத்தையும் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அந்த நபருடன் நான் நல்ல முறையில்தான் பேசிவந்தேன். ஆனால் என்னுடைய வீட்டுக்குள் அவர் நுழைய முயன்ற பொழுதுதான் நான் எச்சரிக்கை  அடைந்தேன்.

இது தொடர்பாக நான் காவல் துறையிடம் புகார் எதுவும் அளிக்கவில்லை.ஆனால் மீண்டுமொரு முறை அவர் இவ்வாறு நடந்து கொண்டால் அவரால் எனக்கு ஆபத்து என்று காவல்துறையிடம்ம் புகார் செய்ய வேண்டி வரும்.

இவ்வாறு டாப்ஸி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் வாசிக்க…

நடிகையால் விஜய் வாங்கிய திட்டு..!!

10:44 PM |
இளைய தளபதி விஜய் தனக்கென்று மாஸ் ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார். அவரை யாராவது திட்ட முடியுமா? அப்படி திட்டினால் அவருடைய ரசிகர்கள் விடுவார்களா? வெளுத்து வாங்கிவிடுவார்கள்.

அந்த வகையில் விஜய்யின் திரைப்பயணத்தில் ஆரம்ப காலத்தில் அவருடன் பல படங்களில் இணைந்து நடித்தவர் சங்கவி.

இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘நான் விஜய் சாருடன் இணைந்து நடித்த போது ஆற்றில் இறங்குவது போல் ஒரு காட்சி.

அதில் நான் வேகமாக இறங்கிவிட்டேன், விஜய் இறங்கவில்லை, அதற்கு அந்த படத்தின் இயக்குனர், “ஏன் உன்னால் இறங்க முடியாதா?” என கோபமாக கேட்டார், அந்த இயக்குனர் வேறு யாரும் இல்லை, விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி தான்’ என கூறியுள்ளார்.
மேலும் வாசிக்க…

அரசாங்கமே வேண்டாம், விஜய் மட்டும் போதும்- இப்படி ஒரு கிராமமா?

12:28 AM |
இளைய தளபதி விஜய்க்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அதிலும் இவருக்கு கேரளாவில் எந்த தமிழ் நடிகருக்கும் இல்லாத அளவிற்கு ரசிகர்கள் இருக்கின்றனர்.

இந்நிலையில் கேரளாவில் பாலக்காட்டில் உள்ள அட்டப்பாடி என்ற பகுதியில் உள்ள கிராம மக்கள் தீவிர விஜய் ரசிகர்களாம்.இவர்கள் யாருமே பள்ளிப்படிப்பை விரும்பவில்லையாம், மேலும், அரசாங்கத்தின் எந்த ஒரு உதவியையும் வேண்டாம் என்று தொடர்ந்து மறுத்து வருகிறார்கள்.

இவர்களின் ஒரே பொழுதுப்போக்கு விஜய் படம் பார்ப்பது மட்டும் தானாம், அதனால், அந்த ஊர் உயர் அதிகார்கள் விஜய்யை அழைத்து வந்து கல்வி எத்தனை முக்கியம் என்பதை கூற வைக்கலாம் என்று யோசித்து வருகிறார்களாம்.
மேலும் வாசிக்க…

ஐஸ்வர்யாராயை முற்றுகையிட்ட ரசிகர்கள் - மகளுக்கு அடி..!!

3:40 AM |
நடிகை ஐஸ்வர்யாராய் தனது மகள் ஆராத்யா, தாய் விருந்தா ராய் ஆகியோருடன் ஓய்வுக்காக லண்டன் சென்று இருந்தார். அங்கு சில வாரங்கள் தங்கி இருந்து விட்டு இந்தியா திரும்பினார். ஐஸ்வர்யாராய் விமான நிலையத்துக்கு வரும்போதெல்லாம் அவரை காண ரசிகர்கள் திரள்வது உண்டு. விமானநிலையத்தில் காத்திருக்கும் இதர பயணிகளும் அவரை சூழ்ந்து கொண்டு ஆட்டோகிராப் கேட்டு நச்சரிப்பார்கள்.

இதனால் அவரது பாதுகாப்புக்காக விமான நிலையத்தில் ‘பாடிகார்ட்’களை நிறுத்தி வைப்பார்கள். இதுபோல் லண்டனில் இருந்த வந்த ஐஸ்வர்யாராயின் பாதுகாப்புக்காக ‘பாடிகார்ட்’கள் வரவழைக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் மும்பை விமான நிலையத்தில் தயாராக நின்று கொண்டு இருந்தனர். ஐஸ்வர்யாராய் விமானத்தில் இருந்து இறங்கி வந்ததும் ‘பாடிகார்ட்’கள் சூழ்ந்து கொண்டு காரை நோக்கி அவரை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.

ஐஸ்வர்யாராயை பார்த்ததும் ரசிகர்களும் பயணிகளும் ஓடோடி வந்து அவரை முற்றுகையிட்டனர். போட்டோகிராபர்களும் சூழ்ந்து கொண்டு போட்டோ எடுத்தார்கள். காருக்கு அருகில் சென்றதும் பாதுகாவலர்கள், ரசிகர்களையும் போட்டோகிராபர்களையும் தள்ளி விட்டனர். இதில் ஒருவர் தடுமாறி ஐஸ்வர்யாராயின் தாய் விருந்தாராய் மீது விழுந்தார். இதனால் விருந்தாராய் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு அடிபட்டு அலறினார்.

மகள் ஆராத்யாவை காரின் பின்சீட்டில் உட்கார வைத்துக் கொண்டு இருந்த ஐஸ்வர்யாராய் தாயின் அலறல் கேட்டு திரும்பி பார்த்தார். கீழே அவர் விழுந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியாகி அருகில் செல்வதற்காக கார் கதவை சாத்தினார். அந்த கதவு மகளின் தலையில் அடித்து வலியால் அந்த குழந்தை ஓ வென்று கத்தி அழுதது. தாய், குழந்தை இருவரையும் மாறி மாறி பார்த்து சில நொடிகள் தடுமாறிய அவர் பின்னர் குழந்தையின் தலையை தேய்த்து விட்டுக் கொண்டு பின்னால் திரும்பி என் அம்மாவை தள்ளி விட்டது யார் என்று ஆவேசமாக கத்தினார்.

இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஐஸ்வர்யாராய் கோபத்தை பார்த்து அதிர்ச்சியான கூட்டத்தினர் அங்கிருந்து விலகி சென்றனர். பாதுகாவலர்கள் அவரது தாயை தூக்கி விட்டனர். தாயை அழைத்துக் கொண்டு ஐஸ்வர்யாராய் மின்னல் வேகத்தில் காரில் ஏறி சென்று விட்டார்.
மேலும் வாசிக்க…

மார்பில் பச்சை குத்திய த்ரிஷா… கையில் பச்சை குத்திய ஓவியா…!!

2:55 AM |
மார்பு , கை மற்றும் தோள் பட்டையில் பச்சை குத்தியுள்ளார் த்ரிஷா…. அதே பாணியில், இப்போது ஒவியாவும் டாட் டுக்குமாறியுள்ளார்..

களவாணி, கலகலப்பு , ஹலோ நான் பேசுறேன் ஆகிய படங்கள் மூலம் பிரபலம் அடைந்த, ஒவியா,  பாங்காக் நகருக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார். அங்கு அவர் தன்னுடைய வலது கையில் மிகப் பெரிய டாட்டு (மச்சம்) ஒன்றை வரைந்துள்ளார்.

பெண்ணின் உருவம் கொண்ட அந்த டாட்டுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை அவரது சமூக வலை தளத்தில் பதிவு செய்துள்ளார்.
இவரது டாட்டு (மச்சம் ) ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.
மேலும் வாசிக்க…

நடிகர் சுதீப் மருத்துவமனையில்..!!

1:43 AM |
கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் சுதீப். இவர் தமிழில் ‘நான் ஈ’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். சுதீப் தற்போது ‘ஹெப்புலி’ எனும் கன்னட திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், படப்பிடிப்பின்போது நேற்று சுதீப்பிற்கு திடீர் காய்ச்சல் மற்றும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் உடனடியாக பெங்களூரு பன்னரகட்டா ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இதுகுறித்து நடிகர் சுதீப் கூறுகையில், ‘ஓய்வு இன்றி தொடர்ந்து படப்பிடிப்பில் ஈடுபட்டதால் உடல்நல குறைபாடு ஏற்பட்டுள்ளது. சிகிச்சைக்கு பின் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தற்போது எனக்கு ஓய்வு தேவைப்படுகிறது. ரசிகர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம்‘ என்றார்.


மேலும் வாசிக்க…

மதுரை வந்த சமந்தாவிடம் ரசிகர்கள் செய்த அசிங்கம் கதறி அழுத சமந்தா..!!

10:59 PM |
மேலும் வாசிக்க…

மதுரையில் நடிகை சமந்தாவின் காரை குத்திக் கிழித்த ரசிகர்கள்... போலீஸ் தடியடி..!!

12:10 AM |
சமந்தா மதுரையில் கலந்து கொண்ட வீ கேர் 32வது கிளை திறப்பு விழாவில் போலீஸ் தடியடி நடந்தது. சில ரசிகர்கள் சமந்த வந்த காரின் டயரை குத்திக் கிழித்தனர். நேற்று மாலை 3 மணியளவில் வீகேர் நிறுவனத்தின் 32 வது கிளையைத் திறக்க மதுரைக்கு வந்தார் சமந்தா.

சமந்தா வருவதையறிந்த பொதுமக்கள் ஏராளமாக அங்கு குவிந்தனர். சமந்தா வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இருந்தும் அதிக அளவில் மக்கள் மேடையை நோக்கி முன்னேறினர். இதில் மேடை தகர்ந்தது.

நிலைமை மோசமாவதை உணர்ந்த உடனே சமந்தா திரும்ப முயன்றார். ஆனால் அவர் திரும்பிவிடக்கூடாது என்ற எண்ணத்தில் சமந்தா வந்த சொகுசு காரின் டயரைக் குத்திக்கிழித்து பஞ்சராக்கினர் சிலர்.

ரசிகர்களின் முற்றுகை தாங்காமல் ஒலி பெருக்கி கருவிகள் சரிந்தன. பாதுகாவலர்கள் சமந்தாவை மீட்டு மாடிக்கு கொண்டு சென்ற நிலையில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர். பின் மாற்றுக் காரில் சமந்தா அனுப்பி வைக்கப்பட்டார்.




மேலும் வாசிக்க…

Top Hot


2015 Thediko.com