கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து வருபவர்
சுதீப். இவர் தமிழில்
‘நான் ஈ’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். சுதீப் தற்போது
‘ஹெப்புலி’ எனும் கன்னட திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், படப்பிடிப்பின்போது நேற்று சுதீப்பிற்கு திடீர் காய்ச்சல் மற்றும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் உடனடியாக பெங்களூரு பன்னரகட்டா ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இதுகுறித்து நடிகர் சுதீப் கூறுகையில், ‘ஓய்வு இன்றி தொடர்ந்து படப்பிடிப்பில் ஈடுபட்டதால் உடல்நல குறைபாடு ஏற்பட்டுள்ளது. சிகிச்சைக்கு பின் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தற்போது எனக்கு ஓய்வு தேவைப்படுகிறது. ரசிகர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம்‘ என்றார்.
Tags:
Cinema
,
காய்ச்சல்
,
சிகிச்சை
,
சினிமா
,
சுதீப்
,
நான் ஈ
,
மருத்துவமனை
,
ரசிகர்கள்