உலகநாயகன் கமலஹாசன் தன்னுடைய பிறந்தநாளன்று தான் கதறி அழுததாக மனம் திறந்து கூறியுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் ரசிகர்கள் யாரும் தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்நிலையில் நடிகர் கமலஹாசன் தனது பிறந்தநாள் அனுபவம் குறித்து கூறியுள்ளார். அதில் இதேநாளில் பிறந்தநாள் கொண்டாடும் என் சினிமாத்துறையைச் சாராத நண்பர்களுடன் எப்போதும் ஒன்றாக இருப்பேன்.
ஆனால் இந்தமுறை அதற்கும் மறுப்பு தெரிவித்துவிட்டேன், வலி அதிகமாக உள்ளது.
மேலும் தன்னுடைய 16 வது பிறந்தநாள் தான் எனக்கு மிகவும் கடினமானது. அப்போது எந்த ஒரு லட்சியமும் இல்லாமல் இருந்தாகவும், எத்திசையில் செல்லவேண்டும் என்று தெரியாது, எதற்காக வாழ்கிறேன் என்றும் தெரியாது. என் அப்பா என்னை அழைத்து நன்கு கண்டித்தார், இதன் காரணமாக ஓர் அறைக்குள் புகுந்து கதவை அடைத்துக்கொண்டு கதறி அழுதேன் என கூறியுள்ளார்.
Tags:
Cinema
,
கதறி அழுத கமலஹாசன்
,
கமலஹாசன்
,
சினிமா
,
பிறந்தநாள்
,
ரசிகர்கள்
,
ஜெயலலிதா