அழுகாச்சி ஹீரோ (டிவி ஹீரோவை இந்த மூணு நாளா அப்படித்தான் பாஸ் சொல்றாங்க வாரிசு நடிகையும் முதல் படத்தில் ஜோடி சேர்ந்தபோதே கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிவிட்டது.
அடுத்த படத்திலும் அது தொடர்ந்து நடிகையின் அக்கா கல்யாணத்தில் மாப்பிள்ளை பொண்ணு கோலம் வரைக்கும் போனது.
அந்த கெமிஸ்ட்ரி அப்படியே நீடிப்பதால் அடுத்த படத்திலும் வாய்ப்பு தருவார் என எதிர்பார்த்தார் நடிகை. ஆனால் ஹீரோ முடியாது என சொல்லி சர்ச்சை, காத்தாடி என்று வரிசையாக பெரிய ஹீரோயின்களாக புக் பண்ணிவிட்டார். அப்ப அதுக்கும் அடுத்த படம்? அதிலும் வாய்ப்பு இல்லை என்று சொல்லிவிட்டாராம்.
கிசுகிசுக்காக பயப்படவில்லை. ஒரே ஹீரோயினுடன் நடித்தால் ரசிகர்களுக்கு போரடித்துவிடும் என்று காரணம் சொல்லியிருக்கிறார். போரடிப்பது ரசிகர்களுக்கா? உங்களுக்கா? என்று கேட்டுவிட்டு அதோடு ரிலேஷன்ஷிப்பை கிடுகிடுவென பிரேக் அப் செய்துவிட்டாராம் நடிகை.
Tags:
Cinema
,
கிசுகிசு
,
கிடுகிடு தகவல்கள்
,
சினிமா
,
ரசிகர்கள்
,
வாரிசு நடிகை
,
ஹீரோ