தன்னைப் பின்தொடர்ந்து வீட்டுக்குள் புக முயன்ற நபரால் தான் அதிர்ச்சியடைந்ததாக நடிகை டாப்ஸி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை விபரம் வருமாறு:
ஒரு நடிகையாக ரசிகர்களால் விரும்பப்படுவதை நாங்கள் விரும்பக் கூடியவர்கள்தான். ஆனால் எங்களை சிறப்பு கவனத்துக்கு உரியவர் என்று உணரச் செய்வதற்கும், அச்சமூட்டுவதற்கும் சிறிய வேறுபாடுதான் உள்ளது.
அந்த வகையில் என்னுடைய படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் இருக்கும் பாதுகாப்பு வளையத்தையும் மீறி இந்த நபர் என்னை முதலில் சந்திக்க வந்த பொழுது நான் அதிர்ச்சியடைந்தேன். என்னைப் பார்க்க வரும் ரசிகர்களையும், என்னுடைய நடிப்பை பாராட்டுபவர்களையும் நான் மதிக்கிறேன். அனால் என்னுடைய அந்தரங்கத்தையும் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
அந்த நபருடன் நான் நல்ல முறையில்தான் பேசிவந்தேன். ஆனால் என்னுடைய வீட்டுக்குள் அவர் நுழைய முயன்ற பொழுதுதான் நான் எச்சரிக்கை அடைந்தேன்.
இது தொடர்பாக நான் காவல் துறையிடம் புகார் எதுவும் அளிக்கவில்லை.ஆனால் மீண்டுமொரு முறை அவர் இவ்வாறு நடந்து கொண்டால் அவரால் எனக்கு ஆபத்து என்று காவல்துறையிடம்ம் புகார் செய்ய வேண்டி வரும்.
இவ்வாறு டாப்ஸி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Tags:
Cinema
,
ஆபத்து
,
சினிமா
,
டாப்ஸி
,
படப்பிடிப்பு
,
மர்ம நபர்
,
ரசிகர்கள்