பாலிவுட்டிலிருந்து வரும் செய்திகள் அனைத்தும் அதிர்ச்சி கலந்த செய்தியாகத்தான் வருகிறது. ஒரு முன்னணி நடிகர் என்னடான்னா, ‛‛நான் நிர்வாணமாக நடித்துள்ளேன், சென்சார் போர்டு அனுமதித்தால் அதை ரசிகர்களுடன் சேர்ந்து பார்க்க எனக்கு ஆசை என்று கூறியிருக்கிறார்.
இப்போது இன்னொரு முன்னணி நடிகை ஒருவர், சக நடிகர்களுடன் நான் செக்ஸ் வைத்து கொள்வது கிடையாது என்று கூறி அதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறார். அவர் வேறு யாரும் அல்ல, நடிகர் அனில் கபூரின் வாரிசான சோனம் கபூரும், தனுஷூடன் ராஞ்சனா படத்தில் நடித்தவரும் தான்.
இதுப்பற்றி சோனம் கபூர் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது. ‛‛நான் சிங்கிளாக தான் உள்ளேன். சக நடிகர்களுடன் நன்றாக பழகுவேன், ஆனால் எந்த நடிகருடன் டேட்டிங் போனது கிடையாது. எந்த ஹீரோக்களுடனும் செக்ஸ் வைத்து கொள்வது கிடையாது. அதனால் தான் ஹீரோக்களுக்கும், எனக்கும் நல்ல கெமிஸ்ட்ரி உள்ளது என்று கூறியுள்ளார்.
சமீபத்தில் தான் தன் தம்பியை பற்றி சோனம் பேசும்போது, ‛‛செக்ஸ் வைத்து கொள்ளும்போது காண்டம் பயன்படுத்து என்று அறிவுரை கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இப்போது இவரின் இந்த பேச்சு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
Tags:
Cinema
,
சினிமா
,
செக்ஸ்
,
சோனம் கபூர்
,
நடிகர்கள்
,
பளீர் பேச்சு