நடிகர்களுக்கு இணையாக, நடிகையருக்கு சம்பளம் தருவதில் தவறில்லை என, நடிகை தமன்னா கூறியுள்ளார். மும்பையில், நேற்று முன்தினம் நடந்த, தேவி பட விழாவில், தமன்னா பேசியதாவது:
நடிகர்களுக்கு இணையான சம்பளம் வேண்டும் என்ற, ஹிந்தி நடிகைகளின் கோரிக்கையை வரவேற்கிறேன். எங்களைவிட, கதாநாயகர்களுக்கு பல மடங்கு சம்பளம்; இந்த நிலைமை மாற வேண்டும். நடிகை யாருக்கும் அதிக சம்பளம் வேண்டும்.
நான், அதிக பணம் பெற்று, புதுமுக ஹீரோக்களுடன், ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடுவதாக கூறுகின்றனர். ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவது, சாதாரண விஷயம் அல்ல. நிறைய பணம் கொடுத்ததால் தான் ஆடினேன்.
இதில் என்ன தவறு; எல்லாருமே சம்பளத்துக்காக தான் வேலை செய்கின்றனர். நான் மட்டுமல்ல, காஜல் அகர்வால், ஸ்ருதிஹாசன் என, பல நடிகையர் ஆடுகின்றனர். இவ்வாறு தமன்னா பாயச்சலாக கூறினார்.
Tags:
Cinema
,
காஜல் அகர்வால்
,
சினிமா
,
தமன்னா
,
நடிகர்கள்
,
நடிகை
,
ஸ்ருதிஹாசன்