ஒன்றை மட்டும் உறுதியாக சொல்லலாம். தமிழ் நாட்டில் அடுத்த சூப்பர் ஸ்டாராக , வலம் வர அத்திவாரம் இடப்படும் அதே நேரம். அரசியலில் விஜய் குதிக்க அதுக்கேற்ற ஆயத்தங்களும் இந்த படம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. என்று கூறினால் அது மிகையாகாது.
வழமையாக மாஸ் ஹீரோ என்றாலே, ஏதாவது ஆக்ஷன் இருக்கும் என்று பலர் எதிர்பார்பார்கள். ஆனால் அரம்பத்திலேயே சொதப்பி விட்டார் இந்த இட்லி, சாரி சாரி "அட்லி" சின்னப் பிள்ளை ஒன்றை மோட்டார் சைக்கிளில் வைத்து வேகமாக ஓடியது மட்டுமல்லாது. பல ஆபத்துகளை விலைக்கு வாங்கப் பார்க்கிறார் விஜய். அட ஏன் அவர் சின்ன வயது மகளை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு இவ்வளவு வேகமாகச் செல்கிறார் என்று நீங்கள் கேட்டால். சிரிப்பு தான் வரும். ஏன் என்றால், அந்த சின்னப் பிள்ளை மீது ஒரு காரில் வந்தவர்கள் றோட்டில் இருந்த நீரை அடித்து விட்டார்கள் அவ்வளவு தான். இதற்காக அந்தக் காரை ஒரு 10 நிமிடமாக துரத்துகிறார் விஜய்.
இவ்வாறு ஆரம்பமாகும் இந்தப் படம் முழுக்க முழுக்க ஒரு கமேஷல் மட்டும் அல்ல. தமிழ் நாட்டில் பல திட்டங்கள் தீட்டப்பட்ட படமாக அமைந்துள்ளது. நம்பர் ஒன்... சிறு பிள்ளைகளை கவரும் விதமாக படத்தை எடுத்து , ரஜனி போல ஒரு சூப்பர் ஸ்டார் இடத்தை பிடிக்க முதல் முயற்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அம்மா சென்டிமென்டை வைத்து(ராதிகா) வயதான பெண்கள் பக்கத்தை கவர. தங்கச்சி சென்டிமென்டிமென்டை வைத்து நடுத்தர வயதுப் பெண்களை கவரவும் முயற்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதுமட்டும் அல்ல, மனைவி மாரைக் கவரவும் ஒரு சென்டிமென்ட் என்று பல சென்டிமெட்டுக்கள்.
படத்தில் டிவிஸ்ட் எதுவும் இல்லை. 1990 களில் பாட்ஷா படம் வந்த காலத்தில் இருந்து நாம் பார்த்து பழகிய கதைகள் தான். ஒரு ஹீரோ சாதாரண ஆளாக இருப்பார். ஆனால் திடீர் என்று பார்த்தால் அவர் பிளாஷ்பாக். அதில் அவர் பெரும் ஹீரோவாக இருப்பார். அது தான் தெறி படத்தின் கதை. ஒரு கேரள கிராமத்தில் வசித்து வரும் விஜய். முன்னர் ஒரு அதிரடி போலிஸ்காரனாக இருந்தாராம். அவர் ஒரு அமைச்சரின் மகனை கொலை செய்ய. அந்த தமிழ் நாட்டு அமைச்சர் விஜயின் அம்மா மற்றும் மனைவியைக் கொலை செய்ய. கதை வழமைபோல தொடர்கிறது. கத்தி படத்தில் கூட முருகதாஸ் ஒரு வித்தியாசமான கான்செப்டை கையில் எடுத்து, உழவர்களின் நிலை குறித்து மக்களுக்கு தெளிவு படுத்தினார். ஆனால் இந்த அட்லியின் தெறி படத்தில் எதுவுமே இல்லை.
இந்த படத்தை வெற்றிப் படம் என்றும். வசூலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்றும் ஊடகங்கள் கூறலாம். ஆனால் உண்மையில் கதை என்று எதுவுமே இல்லை. ஆனால் பாடல் எடுக்கப்பட்ட லொக்கேஷன். படமாக்கப்பட்ட முறை , கேமரா மென், எல்லாமே சூப்பார். இயக்கம் கூட சூப்பார். மீனாவின் மகள் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். அவருக்கு இது முதல் படம் என்றாலும் மிகவும் திறமையாக நடித்திருக்கிறார். அதனை பாராட்டாமல் இருக்கவே முடியாது. மொத்தத்தில் அட்லி ஒரு சொதப்பல் லீ....
Tags:
Cinema
,
அட்லி
,
கத்தி
,
சினிமா
,
தெறி
,
மாஸ் ஹீரோ
,
ரஜனி
,
விஜய்