சிம்பு நயன்தாரா நடிப்பில் தயாராகியிருக்கும் இதுநம்மஆளு படத்தின் பாடல்கள் பிப்ரவரி 3ஆம் நாள் வெளியாகவிருக்கிறது.
படத்தை பிப்ரவரி 14 காதலர்தினத்தன்று வெளியிட முதலில் திட்டமிட்டதாகச் சொல்லப்பட்டது. ஆனால் படத்தின் வேலைகள் முடிவடையாததால் வெளியீடும் தள்ளிப்போனது. எப்படியும் பிப்ரவரியில் படம் வெளியாகிவிடும் என்று சொன்னார்கள்.
தன்பின் படத்தைத் தமிழகம் முழுவதும் வெளியிடும் உரிமையை தேனாண்டாள்பிலிம்ஸ் வாங்கியது. அவர்கள் ஏற்கெனவே வரிசையாகப் படங்களை வைத்திருப்பதால் வெளியீடு தள்ளிப்போகும் என்றும் அனேகமாக ஏப்ரலுக்குப் போகலாம் என்றும் சொல்லப்பட்டது.
இப்போது மார்ச் 24 ஆம் தேதி படத்தை வெளியிடத் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்களாம். ஏப்ரலில் விஜய் படம் சூர்யா படம் ஆகியோரின் படங்கள் வரவிருக்கின்றன என்பதால் அதற்கு முன்பாகவே வந்து வசூலை அள்ளிவிடலாம் என்பது இவர்களின் கணக்கு என்று சொல்கிறார்கள்.
இந்தத் தேதியில் எந்த மாற்றமும் வராமல் இருக்கவேண்டும்.
Tags:
Cinema
,
இதுநம்மஆளு
,
சிம்பு
,
சினிமா
,
நயன்தாரா
,
விஜய்