'ரெமோ'வுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் உதவியது எப்படி? வெளிவராத தகவல்..!!

1:18 AM |
நடிகர் சிவகார்த்திகேயன், கீர்த்திசுரேஷ் நடிப்பில் பாக்யராஜ் கண்ணன் இயக்கிய 'ரெமோ' திரைப்படம் சமீபத்தில் உலகம் முழுவதும் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றி படமாகியுள்ளது.

இந்த படத்தின் நன்றி அறிவிப்பு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட ஆஸ்கார் நாயகன் ரசூல் பூக்குட்டி பேசியபோது, 'எனக்கு ஆஸ்கார் விருதை பெற்று தந்த 'ஸ்லம்டாக் மில்லியனர்' படத்தை அடுத்து அதிக சேலஞ்ச் கொடுத்த படம் 'ரெமோ'தான். இந்த படத்தின் டப்பிங் பணியின்போது ஏ.ஆர்.ரஹ்மான் எனக்கு பல உபயோகமுள்ள டிப்ஸ்களை கொடுத்தார்' என்று கூறினார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்தில் பணிபுரியவில்லை என்றாலும் 'ரெமோ'வின் வெற்றிக்கு அவரும் மறைமுகமாக ஒரு காரணமாக இருந்துள்ளார் என்பது ரசூல் பூக்குட்டியின் பேச்சில் இருந்து தற்போது தெரியவந்துள்ளது.  ரசூல் பூக்குட்டி 'ரெமோ' படத்தின் சவுண்ட் எஞ்சினியராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்க…

ஏ.ஆர்.ரஹ்மான் எப்படி ஆஸ்கர் வாங்கினார் தெரியுமா? ( வீடியோ இணைப்பு)

2:59 AM |
ஆஸ்கர் புகழ் ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்காக இரண்டு ஆஸ்கர்களை தட்டிக்கொண்டது மட்டுமின்றி தமிழில் “ எல்லாப் புகழும் இறைவனுக்கே” எனக் கூறி தமிழர்களின் தலை நிமிரச் செய்தார்.

இப்போது ஏ.ஆர்.ரஹ்மான்  இசைக்கருவிகளே இல்லாமல், உடலை வளைத்து தூக்கிக் கொண்டு இசையமைக்கும் கருவிகளோ இன்றி காற்றில் இசையமைப்பது போல் ஒரு புது தொழில்நுட்பத்தில் இசையமைத்துள்ளார், இந்த இசையமைக்கும் முறை தான் ஸ்லம்டாக் மில்லியனர் படத்தின் ஜெய் ஹோ பாடலிலும் பயன்படுத்தப்பட்டுள்ளதாம்.

இண்டெல் கியூரீ பேஸ்ட் டெக்னாலஜியில் இசையமைத்துள்ளார். இதில் ஒரு கையில் பிளாஸ்டிக்காலான ஒரு பேண்ட் போன்று மாட்டிக்கொண்டு காற்றில் கையசைத்தபடி இசையமைக்கிறார்கள். லைவ் ஷோவில் வெறுமனே ஆட்கள் மட்டுமே, மேடையில் இருக்கலாம், மேலும் இசைக்கருவிகள் நகர்ந்து இடையூறு கொடுப்பதோ, கனமான கருவிகளைத் தூக்கிக் கொண்டு கையாளும் வேலையும் இனி இல்லை என ஏ.ஆர்.ரஹ்மான் தனது அனுபவத்தையும் பகிர்ந்துள்ளார்,

 

மேலும் வாசிக்க…

மீண்டும் இந்தியாவிற்கு பெருமை சேர்த்த ஏ.ஆர்.ரஹ்மான்.!!

8:00 AM |
கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள தீவுநாடான செசல்ஸின் கலாச்சார மேம்பாட்டுக்கு உதவிய ஏ.ஆர்.ரஹ்மானை, அந்நாட்டின் சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சரவை, கலாச்சார தூதராக நியமனம் செய்துள்ளது.

இதற்கான சான்றிதழை தனது பேஸ்புக் மற்றும் டுவிட்டர் பக்கங்களில் ஏ.ஆர். ரஹ்மான் நேற்று வெளியிட்டுள்ளார்.

மேலும், இந்த அங்கீகாரத்துக்காக அந்நாட்டு மக்களுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுமட்டுமின்றி, பிரபல இயற்பியலாளர் ஸ்டீவன் ஹாக்கிங்ஸ், வறுமை ஒழிப்பு, சமத்துவமற்ற நிலையை எதிர்த்து போராட, காலநிலை மாற்றத்துக்கு ஏற்ப செயல்பட உலகெங்கிலும் குளோபல் கோல்ஸ் என்ற பெயரில் விழிப்புணர்வு ஏற்படுத்த உலகெங்கிலும் உள்ள பிரபலமான மனிதர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதில், ரஹ்மானும் இடம் பெற்றுள்ளார்.

இது இந்தியாவிற்கு கிடைத்த பெருமை என்றே சொல்ல வேண்டும்.
மேலும் வாசிக்க…
2015 Thediko.com