நடிகர் சிவகார்த்திகேயன், கீர்த்திசுரேஷ் நடிப்பில் பாக்யராஜ் கண்ணன் இயக்கிய 'ரெமோ' திரைப்படம் சமீபத்தில் உலகம் முழுவதும் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றி படமாகியுள்ளது.
இந்த படத்தின் நன்றி அறிவிப்பு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட ஆஸ்கார் நாயகன் ரசூல் பூக்குட்டி பேசியபோது, 'எனக்கு ஆஸ்கார் விருதை பெற்று தந்த 'ஸ்லம்டாக் மில்லியனர்' படத்தை அடுத்து அதிக சேலஞ்ச் கொடுத்த படம் 'ரெமோ'தான். இந்த படத்தின் டப்பிங் பணியின்போது ஏ.ஆர்.ரஹ்மான் எனக்கு பல உபயோகமுள்ள டிப்ஸ்களை கொடுத்தார்' என்று கூறினார்.
ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்தில் பணிபுரியவில்லை என்றாலும் 'ரெமோ'வின் வெற்றிக்கு அவரும் மறைமுகமாக ஒரு காரணமாக இருந்துள்ளார் என்பது ரசூல் பூக்குட்டியின் பேச்சில் இருந்து தற்போது தெரியவந்துள்ளது. ரசூல் பூக்குட்டி 'ரெமோ' படத்தின் சவுண்ட் எஞ்சினியராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:
Cinema
,
ஏ.ஆர்.ரஹ்மான்
,
கீர்த்திசுரேஷ்
,
சிவகார்த்திகேயன்
,
சினிமா
,
ரெமோ