அமலாபால் தனுஷ்க்கு சொந்தமான பங்களாவில்.. பத்ரகாளியான ஐஸ்வர்யா..!!

12:06 AM |
பூதம் ஒவ்வொன்றாக கிளம்புகிறது. ரஜினியின் 2வது மகள் டைவர்ஸ் ஆனது தனுஷே காரணம் என்று கூறப்பட்டது. அமலாபால் விவகாரம் பற்றி எரிகிறது.

சோனியா அகர்வால் விசயமும் வெளியே கசிந்து விட்டது. ஐஸ் அம்மா இருவரையும் கூப்பிட்டு அறிவுரை சொல்லி அனுப்பினார் என்று கூறப்பட்டது.

நேற்று வாட்ஸ்ஆப்களில் ஒரு விஷயம் தீயாக பரவியது. இயக்குனர் விஜயுடன் மனகசப்பு வந்து அமலாபால் வெளியேறியபோது அவர் தங்கியிருந்த சொகுசு பங்களா தனுஷ் வாங்கி கொடுத்தது .

இந்த செய்தி ஐஸ்வர்யாவிற்கும் சென்றதாம். அவ்வளவுதான் கொதித்து எழுந்து விட்டாராம்.கோபித்து கொண்டு அம்மா வீட்டிற்கு சென்று விட்டார். ரஜினி மிகவும் மனக்கவலைஅடைந்துள்ளார்.
மேலும் வாசிக்க…

ரேஷ்மி மேனன் பாபிசிம்ஹா விவாகரத்து..!!

12:08 AM |
கோடம்பாக்கத்தின் தற்போதைய ஹாட் டாப்பிக் என்னவென்றால் நட்சத்திரங்களின் விவாகரத்து தான்.

விஜய் அமலாபால், சௌந்தர்யா அஸ்வின், லிசி ப்ரியதர்ஷன். இவர்கள் மூவரின் விவாகரத்து செய்தி தற்போது வரை சூடுபிடித்துக்கொண்டிருக்கின்ற நிலையில், இன்னும் சற்று பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக வெளியான தகவல் தான் பாபி சிம்ஹா- ரேஷ்மி மேனன் விவாகரத்து.

6 மாதங்களுக்கு முன்னர் காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களின் வாழ்விலும் புயல் அடித்துவிட்டது, அதனால் இவர்கள் இருவரும் பிரியப்போகிறார்கள் என செய்திகள் வெளியாகின.

என்னுடைய குடும்ப வாழ்க்கையில் எவ்வித பிரச்சனையும் இல்லை, வேண்டுமென்றே சிலர் வதந்திகளை பரப்பி விடுகின்றனர் என டென்ஷன் ஆகியுள்ளர் பாபி சிம்ஹா.
மேலும் வாசிக்க…

நாடகமாடிய விஜய் - அமலாபால்..!!

12:21 AM |
கடந்த பத்து பதினைந்து நாட்களாக தெரிந்தவர் தெரியாதவர் என எல்லோராலும் 'என்னம்மா இப்படி பண்ணிட்டீங்களேம்மா...' என்று பரபரப்பாக பேசப்பட்டு வந்த அமலாபால்-விஜய் திருமண முறிவு விவகாரம் அடுத்தக் கட்டத்தை எட்டியுள்ளது.

இருவரும் விவாகரத்துக்கு மனு தாக்கல் செய்ய நீதிமன்ற படிகளில் ஏறிவிட்டார்கள். இருவரும் குடும்பநல நீதிமன்றத்தில் அளித்திருந்த மனுவில் உள்ள ஒரு வசனத்தை படித்ததும் மெல்லிய அதிர்ச்சி ஒன்று நமக்கு ஏற்படுகின்றது. 'எங்கள் இருவருக்கும் 2014 ஜூன் மாதம் 10 திகதி திருமணம் நடந்தது. ஒரு வருடத்திலேயே எங்களுக்கிடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, 2015 மார்ச் மாதம் 3 ஆம் திகதி முதல் பிரிந்து தனித்தனியாக வாழ்கிறோம்' என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 16 மாதங்களுக்கு மேலாக இவர்கள் பிரிந்து வாழ்ந்துள்ளதாக அவர்களது அளித்த மனுவின் மூலம் உறுதியாகிறது. ஆனால் கடந்த வருடம் நடந்த இரு நிகழ்வுகள் நிச்சயம் நமக்கு ஆச்சரியத்தையே ஏற்படுத்துகின்றன.

2015ஆம் ஆண்டு எப்ரல் மாதம்  6ஆம் திகதி, (இவர்கள் பிரிந்து வாழ ஆரம்பித்ததாக மனுவில் குறிப்பிட்டிருந்த திகதியிலிருந்து அடுத்த மாதம்) விஜய் இயக்கிய 'இது என்ன மாயம்' திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெற்றது. அந்தவிழாவில் உற்சாகமாக கலந்துகொண்ட அமலாபால், விஜய்யை பற்றி மேடையில் பேசும் போது,  'விஜய்கிட்ட ஒரு கெட்ட பழக்கம் இருக்கு.. விடுமுறைக்காக எங்கேயாவது போனால்கூட கதை சொல்லிட்டே இருக்கும்' என்று செல்லமாக பேசினார்.

இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார், 'சீக்கிரம் குழந்தைக்கு ரெடி பண்ணுங்க' என ஏ.எல்.விஜய்யிடம் கூறி சிரித்தபோது அமலா போலின் முகம் மாறியதை எத்தனை பேர் கவனித்தார்களோ..? இது இவ்வாறு இருக்க,  கடந்த ஓகஸ்ட் மாதம் நடிகர் பாக்யராஜின் மகன் சாந்தனு பாக்யராஜின் திருமண வரவேற்பு நடைபெற்றது.

அந்த நிகழ்ச்சியிலும் கூட தங்களது கருத்து வேறுபாடுகளை மறைத்துக்கொண்டு தம்பதிகளாக வந்து மணமக்களை வாழ்த்தினார்களே‚. ஆக, தங்களது கருத்து வேறுபாடும் பிரிவும் உடனடியாக யாருக்கும் தெரிவதற்கு, இருவருமே விரும்பாததால் தான் இப்படி ஒரு ஒற்றுமை நாடகம் ஆடியுள்ளனர் போல. ஆனால், ஏ.எல்.விஜய்யின் தந்தை, தனியார் தொலைக்காட்சிக்கு  அளித்த செவ்வி காரணமாக இவர்கள் பிரிவு வெளியே தெரியவர, வேறுவழியின்றி தற்போது நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
மேலும் வாசிக்க…

சமரச விவகாரத்து கோரி அமலாபால் நீதிமன்றத்தில் மனு தாக்கல்..!!

1:51 AM |
இயக்குநர் விஜய் - நடிகை அமலாபால் இருவரும் கடந்த 2014-ம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்டார்கள். 2 ஆண்டுகள் ஆன நிலையில், சமீபத்தில் இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் விரைவில் விவாகரத்து செய்ய உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. அமலா பால் திருமணத்துக்குப் பிறகு தொடர்ந்து சினிமாவில் நடித்துவருவதால், இதுவிஷயமாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக கூறப்பட்டது.

அமலாபாலை விவகாரத்து செய்வது குறித்து இயக்குனர் விஜய்யும், அவரது தந்தை ஏ.எல்.அழகப்பனும் உறுதியாக கூறியிருந்தார்கள். இந்நிலையில், அமலாபால் இன்று சென்னை முதன்மை குடும்ப நல நீதிமன்றத்தில் இயக்குனர் விஜய்யுடன் சமரச விவாகரத்து செய்துதரக் கோரி மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். நீதிபதி தீபிகா முன்னிலையில் விவாகரத்து செய்யப்போவதற்கான விருப்ப மனுவை நேரில் அளித்தார்

இவர்களது மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. அதன்பிறகு, இவர்களது விவகாரத்து குறித்த விஷயங்கள் நீதிமன்றம் வாயிலாக வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில், இயக்குனர் விஜய்-அமலாபால் விவகாரத்து செய்யப்போகும் செய்தி நீதிமன்றம் வரை சென்றிருப்பது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் வாசிக்க…

அமலாபால் விவாகரத்துக்கு காரணம் விஜய்யின் பெற்றோரா???

3:16 AM |
தமிழ் சினிமாவில் கடந்த சில நாட்களாக கபாலிக்கு அடுத்தபடியாக பேசப்பட்ட விஷயம் விஜய்-அமலாபால் விவாகரத்து.

இருவரும் கடந்த 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு பிறகு நடிக்கமாட்டார் என கூறப்பட்ட நிலையில் மீண்டும் நடிப்பது தான் விவாகரத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

ஆனால் அமலாபாலுக்கு நெருக்கமானவர்கள், விஜய்க்கும்-அமலாபாலுக்கும் இடையில் எந்த பிரச்சனையும் இல்லையாம். அமலாபால் பற்றி வந்த கிசுகிசுக்களுக்கு கூட ஓரங்கட்டி அமலாபாலுக்கு விஜய் ஆதரவாக இருந்தாராம். விஜய்யின் பெற்றோர் கொடுக்கும் நெருக்கடியால் தான் விஜய் வேறு வழியில்லாமல் விவாகரத்துக்கு சம்மதித்தாக கூறுகின்றனர்.
மேலும் வாசிக்க…

விஜய் – அமலாபால் விவாகரத்து – சரண்யா பொன்வண்ணன் அதிரடி கருத்து..!!

1:13 AM |
தமிழ் சினிமா வட்டாரத்தில் கடந்த சில நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயம் ஏ.எல் விஜய் அமலாபால் விவாகரத்து.

அமலாபால் மீண்டும் நடிப்பது இயக்குனர் விஜய்க்கு கோபத்தை உண்டாக்கியதால் தான் இந்த பிரிவு என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் சமூகவலைதளங்களில் ஒரு வருடத்திற்கு முன்பு விஜய்யின் சகோதரி முறை உறவான பிரபல குணச்சித்திர நடிகை சரண்யா பொண்வண்ணன் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

அதில் அவரிடம் அமலாபாலுக்கு நீங்கள் கொடுக்கும் அட்வைஸ் என்ன என்று கேட்டபோது, அமலாபால் என் தம்பி விரும்பும்படியான உடையை அணிய வேண்டும் என்று கூறியுள்ளார். இவரது உடையும் விவாகரத்து விவகாரத்துக்கு காரணமாக இருக்கலாம் என்றும் கிசுகிசுக்கப்படுகிறது.
மேலும் வாசிக்க…

அமலாப் பாலுடன் ஏன் விஜய் விவாகரத்து விஜயின் தந்தை அதிர்ச்சிப் பேட்டி..!!

12:51 AM |
அமலாப் பாலுடன் ஏன் விஜய் விவாகரத்து விஜயின் தந்தை அதிர்ச்சிப் பேட்டி..!!

 கடந்த மூன்று மாதமாகவே விஜய் போர்ட் கிளப் வீட்டிலும், அமலாபால் தனியாகவும் வசித்து வருகின்றனர். தங்களுக்குள் ஏற்பட்டுள்ள பிரச்னைகளை தனது பெற்றோரிடம் சொல்லாமல் மறைத்துவந்த விஜய் கடந்த 20-ம்தேதி உண்மை நிலையை எடுத்து உரைத்தார்.

 பெற்றோர் முதலில் அதிர்ந்துபோய் கண் கலங்கினர். அதன்பின் விஜய்க்கு ஆறுதல் கூறினர்.
 

மேலும் வாசிக்க…

விஜய் – அமலாபால் பிரிய இந்த படம்தான் காரணமாம்..!!

1:47 AM |
நடிகை அமலாபால் கடந்த 2014-ம் ஆண்டு இயக்குனர் விஜய்யை திருமணம் செய்துகொண்டு சினிமாவுக்கு முழுக்கு போட்டார். அதன்பின் படங்களில் நடிக்கமாட்டேன் எனவும் கூறி வந்தார்.

ஆனால் கடந்த ஆண்டு பசங்க 2 படத்திலும் இந்த ஆண்டு அம்மா கணக்கு படத்திலும் அவர் நடித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் தனுஷின் அடுத்த படத்திலும் அவர்தான் நாயகி என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் மீண்டும் நடிக்க வந்ததால் அமலாபால் – விஜய் உறவில் விரிசல் விழுந்துவிட்டதாகவும் இது விவாகரத்தில் முடிய அதிக வாய்ப்பிருப்பதாகவும் பேசப்படுகிறது. குறிப்பாக விஜய் எவ்வளவோ சொல்லியும் அம்மா கணக்கு படத்தில் அமலாபால் நடித்ததே இந்த பிரிவிற்கு காரணம் என சொல்லப்படுகிறது.
மேலும் வாசிக்க…

அமலாபால் - டைரக்டர் விஜய் விவாகரத்து செய்ய முடிவு..!!

11:55 PM |
அமலாபால், கேரளாவை சேர்ந்தவர். கடந்த 2010-ம் ஆண்டில், ‘வீரசேகரன்’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் பட உலகுக்கு அறிமுகமானார். தொடர்ந்து, ‘சிந்து சமவெளி,’ ‘மைனா,’ ‘தெய்வ திருமகள், ‘தலைவா,’ ‘வேலையில்லா பட்டதாரி,’ ‘அம்மா கணக்கு’ உள்பட பல படங்களில் நடித்தார். இப்போது, தனுஷ் ஜோடியாக ‘வட சென்னை’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இவருக்கும், ‘கிரீடம்’ படத்தின் மூலம் டைரக்டராக அறிமுகமாகி, ‘மதராச பட்டினம்,’ ‘தலைவா,’ ‘தாண்டவம்,’ ‘சைவம்,’ ‘இது என்ன மாயம்’ உள்பட பல படங்களை டைரக்டு செய்துள்ள விஜய்க்கும் சில வருடங்களுக்கு முன் காதல் மலர்ந்தது. விஜய் டைரக்டு செய்த ‘தலைவா,’ ‘தெய்வ திருமகள்’ ஆகிய படங்களில் அமலாபால் கதாநாயகியாக நடித்தார். அப்போது இரண்டு பேருக்கும் இடையே புரிதல் ஏற்பட்டு, அது காதலாக மாறியது. இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்பினார்கள்.

கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் 7-ந் தேதி, கேரள மாநிலம் கொச்சியில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. ஜூன் 12-ந் தேதி, சென்னையில் திருமணம் நடந்தது. திருமணத்துக்குப்பின் அமலாபால், கணவருடன் சென்னையில் குடியேறினார். சென்னை அடையார் போட் கிளப்பில் உள்ள ஒரு பங்களாவில் இருவரும் தனிக்குடித்தனம் நடத்தினார்கள்.

அமலாபால் தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்தார். அவர் நடிப்பதை டைரக்டர் விஜய்யும், அவருடைய குடும்பத்தினரும் விரும்பவில்லை. கணவர் மற்றும் அவர் குடும்பத்தினர் விருப்பத்தை மீறி, அமலாபால் புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமானார். இது, விஜய்-அமலாபால் இடையே கருத்து வேறுபாடை ஏற்படுத்தியது. இரண்டு பேரும் பிரிவது என்று முடிவு செய்தார்கள்.

அதன்படி, அமலாபால், டைரக்டர் விஜய் இருவரும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் சுமுகமாக பேச்சுவார்த்தை நடத்தி, பிரிந்தார்கள். டைரக்டர் விஜய் தனது பெற்றோர்களுடன் வசிக்கிறார். அமலாபால், சென்னையில் தனியாக வசிக்கிறார்.

இரண்டு பேரும் விவாகரத்து செய்து கொள்வது என்ற முடிவுக்கு வந்து இருக்கிறார்கள். இந்த விவகாரம், தமிழ்-மலையாள பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும் வாசிக்க…

விஜய் என்றால் உத்வேகம் – அமலாபால் புகழாரம்..!!

12:27 AM |
நடிகை அமலாபால் விஜய்யுடன் தலைவா படத்திலும் மற்றும் சில விளம்பர படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டியில் விஜய் குறித்து பேசிய அவர், விஜய் என்றால் இன்ஸ்பிரேஷன் என கூறியுள்ளார்.

மேலும் தனுஷ் குறித்து ஒருவார்த்தையில் பதிலளித்த அமலாபால், அவர் ஒரு பன்முகத் திறமை கொண்டவர் என பாராட்டியுள்ளார்.

தனுஷ் தயாரிப்பில் இவர் நடித்துள்ள அம்மா கணக்கு படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.
மேலும் வாசிக்க…

மரணப்படுக்கையில் செல்பி எடுத்தேன்: கண்கலங்கிய மைனா..!!

2:38 AM |
மைனா இந்தப்பெயரை கேட்டதும் நம் நினைவுக்கு வருபவர் அமலாபால்.
ஆனால் சின்னத்திரை ரசிகர்களுக்கு மைனா என்றால் அது நந்தினி தான். வம்சம் போன்ற சில படங்களில் நடித்தாலும் சின்னத்திரையில் தான் இவர் பலருக்கும் பரிட்சயமானார்.

சரவணன் மீனாட்சியில் மைனாவாக காமெடி செய்யும் இவருக்கு ரசிகர்கள் ஏராளம். அதில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஒரு பெண்மணி மைனாவை பார்க்க வேண்டும் என்று விரும்பினாராம்.

இவரை சந்தித்த நந்தினி அவருடன் செல்பி எடுத்து ஆசையை நிறைவேற்றினாராம். ஆனால் அவருக்கு மாடர்ன் டிரஸ்சில் சந்தித்த போது இவரை அடையாளம் தெரியவில்லையாம்.

சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இவர் இதை கண்கலங்கி தெரிவித்தார்.

மேலும் வாசிக்க…

இணையத்தில் வைரலாகும் விஜய் அமலாபால் ஜோடி (வீடியோ இணைப்பு)

7:02 AM |
இணையத்தில் வைரலாகும் விஜய் அமலாபால் ஜோடி (வீடியோ இணைப்பு)

விஜய் விளம்பரங்களில் நடித்துவருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. தற்பொழுது ஜோஸ் ஆலுக்காஸிற்காக விஜய், ஒரு விளம்பரத்தில் நடித்துள்ளார். விஜய்யுடன் அமலாபால் நடித்திருக்கும் இந்த வீடியோ சமீபத்தில் இணையதளத்திலும் வெளியாகி வைரலாகிவருகிறது. கல்யாணக்கோலத்தில் தொடங்கி, அமலாவிற்கு கணவராக விஜய்யின் ஒவ்வொரு ரியாக்‌ஷனும் நிச்சயம் ரசிகர்களை ஈர்க்கும்.

 


மேலும் வாசிக்க…

அம்மாவானார் அமலாபால்..!!

11:18 PM |
ஹிந்தியில் வெளியாகி வெற்றிபெற்ற ‘நில் பட்டே சன்னாட்டா’ படத்தின் தமிழ் ரீமேக்கான ‘அம்மா கணக்கு’ படத்தை நடிகர் தனுஷ் தனது உண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்து வருகிறார்.

இப்படத்தில் நடிகை அமலாபால் ஒரு 13 வயது பெண்ணுக்கு அம்மாவாக நடித்துள்ளார். இதில் அவர்தான் நடிக்க வேண்டும் என தனுஷ் கேட்டுக்கொண்டதாகவும் அவரது விருப்பத்தை அமலாபால் நிறைவேற்றியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இதில் ரேவதி, சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹிந்தியில் இப்படத்தை இயக்கிய அஸ்வினி ஐயரே தமிழிலும் இப்படத்தை இயக்கியுள்ளார். இசைஞானி இளையராஜா இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.
மேலும் வாசிக்க…

விஜய்யா? அஜித்தா?பிரபல நடிகையின் கலக்கல் பதில்..!!

2:28 AM |
பிச்சைக்காரன் படத்தின் மூலம் அனைத்து தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தவர் சட்னா. இவர் கேரளாவை பூர்விகமாக கொண்டவர்.

நயன்தாரா, அசின், அமலாபால் வரிசையில் இவரும் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘எனக்கு அஜித்தை மிகவும் பிடிக்கும், ஆனால், முதலில் விஜய்யை தான் பிடித்தது, தற்போது அஜித்தை பிடிக்க ஆரம்பிக்கின்றது’ என கூறியுள்ளார். பிழைக்க தெரிந்த நடிகை

மேலும் வாசிக்க…

நடிகை அமலாபாலால் ஆபத்து, அலறும் இண்டெர்நெட் இளசுகள்..!!

5:40 AM |
இயக்குனர் விஜய்யை திருமணம் செய்து கொண்டு செட்டிலான நடிகை அமலா பால் தற்போது திருமணத்துக்குப் பிறகு ‘பசங்க – 2′ படம் மூலம் ரீ-எண்ட்ரி ஆகிறார். இந்நிலையில் அமலா பால் குறித்து ஒரு அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.

பிரபல கம்ப்யூட்டர் நிறுவனமான இன்டெல் நிறுவனம் இயர்லி செக்யூரிட்டி ரிசர்ச் - 2015 என்ற ஒரு ஆய்வை நடத்தியுள்ளது, இந்த ஆய்வின் முடிவில் அமலாபால் ஆபத்தான நடிகையாக கண்டறியப்பட்டிருக்கிறார். அமலாபாலின் அழகான புகைப்படத்தை பார்த்தவுடன் அதை டவுன்லோடோ அல்லது கிளிக்கோ செய்தால் வைரஸ் பரவுமாம்,

அவருடைய போட்டோக்களின் பின்னணியில் ஹேக்கர்கள் இருக்கிறார்களாம், நீங்கள் அமலா பாலின் அழகில் மயங்கி போட்டோக்களை ரசித்துக் கொண்டிருக்கும் போதே ஹேக்கர்கள் உங்கள் அக்கவுண்ட்டில் எல்லா விபரங்களையும் எடுத்து விடுவார்கள்.

மேலும் வாசிக்க…

பசங்க 2 - விமர்சனம்..!!

2:15 AM |
நடிகர் : சூர்யா
நடிகை : அமலாபால்
இயக்குனர் : பாண்டிராஜ்
இசை : அரோல் கொரெலி
ஓளிப்பதிவு : பாலசுப்பிரமணியம்

வங்கி மேலதிகாரியான முனீஸ் காந்த்-வித்யா பிரதீப் தம்பதியர் தங்களது மகனுடன் சென்னையில் வசித்து வருகிறார்கள். அதேபோல், என்ஜினீயரான கார்த்திக்குமார்-பிந்துமாதவி தம்பதிக்கும் ஒரு மகள் இருக்கிறாள். இவர்களும் சென்னையில் வேறொரு பகுதியில் வசித்து வருகிறார்கள்.

இந்த இரண்டு குடும்பங்களுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. அது என்னவென்றால், முனீஸ்காந்த், கார்த்திக் குமாரின் குழந்தைகள் இருவரும் வழக்கமான குழந்தைகளை விட ரொம்பவும் சுட்டித்தனம் செய்பவர்கள். ஒரு நிமிடம் கூட இவர்களை பிடித்து நிற்க வைக்கமுடியாது. அந்த அளவுக்கு சுட்டித்தனம் செய்பவர்கள். இதனால், இவர்கள் குடியிருக்கும் இடம் மட்டுமின்றி, படிக்கும் இடத்திலும் பிரச்சினை வருகிறது. இதனால், வேறு வழியின்றி குடும்பத்துடன் பல இடங்களுக்கு மாற்றலாகி செல்வது இவர்களது குடும்பத்தின் வழக்கமாகிவிடுகிறது.

இந்நிலையில், தாம்பரம் அருகில் இருக்கும் பள்ளியில் சேர்ப்பதற்காக குடும்பத்துடன் அங்கு குடிபெயர்கிறார் முனீஸ்காந்த். அந்த குடியிருப்புக்கே கார்த்திக் குமாரும் தனது குடும்பத்துடன் வருகிறார். இவர்கள் குடிவரும் அதே அபார்ட்மெண்டில் குழந்தைகளுக்கான மனநல மருத்துவராக இருக்கும் சூர்யா, தனது மனைவி அமலாபால் மற்றும் குழந்தைகள் இருவருடனும் வசித்து வருகிறார்.

வெவ்வேறு இடங்களில் சுட்டித்தனம் செய்துகொண்டிருந்த குழந்தைகள் ஒரே அபார்ட்மெண்டுக்கு வந்ததும் நண்பர்களாகிறார்கள். இங்கு இவர்களது சுட்டித்தனம் இன்னும் அதிகமாகிறது. இதனால், அந்த அபார்ட்மெண்டில் வசிக்கும் அனைவரும் அவர்களை காலி செய்யச் சொல்லி வற்புறுத்துகிறார்கள். ஆனால், முனீஸ்காந்தும், கார்த்திக் குமாரும் தங்களது குழந்தைகளை ஹாஸ்டலுக்கு அனுப்பிவிடுவதாக கூறி அவர்களை சமாதானப்படுத்துகிறார்கள்.

இந்த விஷயம் சூர்யாவுக்கு தெரிந்ததும், டாக்டரான தான் அவர்களுக்கு என்ன பிரச்சினை என்பதை கண்டறிந்து கூறுகிறேன் என்று முனீஸ்காந்த்-கார்த்திக் குமார் இருவரிடமும் கூறுகிறார். ஆனால், சூர்யாவின் பேச்சுக்கு மதிப்புக் கொடுக்காமல், குழந்தைகளை ஹாஸ்டலில் கொண்டு போய் சேர்க்கிறார்கள். ஹாஸ்டலிலும் தங்களது சுட்டித்தனத்தால் அங்கிருந்து தப்பித்து, தங்களது வீடுகளுக்கே வருகிறார்கள் குழந்தைகள்.

பின்னர் சூர்யாவுடன் அந்த குழந்தைகள் நெருங்கி பழக ஆரம்பிக்கிறார்கள். கடைசியில், அந்த குழந்தைகளுக்குள் இருக்கும் பிரச்சினையை சூர்யா கண்டறிந்து, அவர்களது திறமைகளை எப்படி வெளிக்கொண்டுவந்தார்? குழந்தைகள் மற்றும் பெற்றோர்களின் இடைவெளி எப்படி சரியானது என்பதை அழகாக சொல்லியிருக்கிறார்கள்.

இந்த படத்தின் முதன்மை கதாபாத்திரங்களில் பேபி வைஷ்ணவி, நயனா, நிஜேஷ், அபிமன் ஆகிய குழந்தைகளே நடித்திருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் கேமரா முன் எந்தவித பயமுமில்லாமல், பல படங்கள் நடித்தவர்கள்போல் மிகவும் திறமையாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக, முனீஸ்காந்த்-கார்த்திக் குமார் ஆகியோரின் பிள்ளைகளாக வருபவர்கள் குழந்தைகளுக்குண்டான சுட்டித்தனத்துடன் நடித்து அழகாக ரசிக்க வைத்திருக்கிறார்கள்.

முந்தைய படங்களில் காமெடி வேடத்தில் நடித்த முனீஸ்காந்த், இந்த படத்தில் கோட் சூட்டுடன் ஒரு உயரதிகாரியாகவும், அதேநேரத்தில் பொறுப்பான அப்பாவாகவும் நடித்திருக்கிறார். பெரிய அதிகாரியாக இருந்தும், சிறுசிறு பொருட்களை திருடும்போது காமெடியில் ரசிக்க வைக்கிறார். இவருக்கு மனைவியாக வரும் வித்யா பிரதீப் அழகாக இருக்கிறார். ஒரு குழந்தைக்கு அம்மாவாக பாசம் காட்டுவதிலும், அவர்களை பிரியும் நேரத்தில் கண்ணீர் விடுவதுமாக நடிப்பில் அழுத்தம் பதித்திருக்கிறார்.

அதேபோல், கார்த்திக் குமார் - பிந்து மாதவி ஆகியோரும் இளம் தம்பதிகளாக நம் மனதில் அழகாக பதிகிறார்கள். இவர்களுடைய நடிப்பும் மெச்சும்படியாக இருக்கிறது. இடைவேளைக்கு பிறகு வரும் சூர்யா, மனநல மருத்துவராகவும், குழந்தைகளை கவரும்படியும் அழகாக நடித்திருக்கிறார்கள். பெரிய ஹீரோவாக இருந்தாலும், இந்த படத்தில் இரண்டு பிள்ளைகளுக்கு அப்பாவாக நடித்திருக்கும் சூர்யாவுக்கு பாராட்டு தெரிவிக்கலாம். அதேநேரத்தில் அந்த கதாபாத்திரமாகவே அவர் மாறியிருக்கிறார் என்பது திரையில் அழகாக பளிச்சிடுகிறது. இவருக்கு மனைவியாக வரும் அமலாபாலும் அழகான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆசிரியராக வரும் இவர் குழந்தைகளுக்கு வித்தியாசமான முறையில் பாடங்களை சொல்லிக் கொடுக்கும்விதம் ரசிக்க வைக்கிறது.

முழுக்க முழுக்க பசங்களை வைத்து ஒரு படத்தை இயக்குவது என்பது பாண்டிராஜூக்கு ஒன்றும் புதிதல்ல. இந்த படத்திலும் தான் ஒரு திறமையான இயக்குனர் என்பதை நிரூபித்திருக்கிறார். அதிகமாக சேட்டை செய்யும் குழந்தைகள் நோயாளிகள் அல்ல... அவர்களுக்குள்ளும் நிறைய திறமைகள் இருக்கின்றன. அவற்றை பெற்றோர்கள் சரியான முறையில் கண்டறிந்து, அவர்களுடைய வாழ்க்கைக்கு வழிகாட்டியாக இருக்கவேண்டும். மாறாக, அவர்களை ஒதுக்கி வைக்கக்கூடாது என்பதை இந்த படத்தில் அழகாக சொல்லியிருக்கிறார்.

இன்றைய நகரத்து குழந்தைகளின் உலகம், அவர்கள் பயிலும் கல்வி முறை பற்றியும், அதில் எந்த கல்வி முறை சிறந்தது என்பது பற்றியும் அழகாக எடுத்துரைத்திருக்கிறார். இன்றைய விஞ்ஞான உலகத்தில் ஒவ்வொரு பெற்றோரும் தங்களது குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்பதற்கான ஒரு அடையாளமாக இந்த படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர். அளவான கதாபாத்திரங்கள், அழுத்தமான வசனங்கள் என படத்தை அழகாக நகர்த்தி சென்றிருக்கிறார்.

கதைக்கு பக்கபலமாக பாலசுப்பிரமணியெம்மின் ஒளிப்பதிவும் அமைந்திருக்கிறது. இவருடைய ஒளிப்பதிவில் காட்சிகள் ஒவ்வொன்றும் கச்சிதமாக இருக்கின்றன. ஆரோல் கொரெல்லி இசையில் மென்மையான பின்னணி இசை கதையோடு ஒன்ற வைக்கிறது. பாடல்களும் ரசிக்கும்விதமாக இருக்கின்றன.

மொத்தத்தில் ‘பசங்க 2’ குடும்பத்துடன் ரசிக்க வேண்டிய படம்.
மேலும் வாசிக்க…

அம்மாவானார் அமலாபால்..!!

3:41 AM |
நடிகை அமலா பால் இயக்குனர் ஏ.எல்.விஜய்யை திருமணம் செய்து கொண்டு செட்டிலான பிறகு நடிக்க மாட்டார் என்றுதான் விஜய் கூறிவந்தார்.
ஆனால் அமலாபால் தொடர்ந்து நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

முன்புபோல் இல்லாமல் அழுத்தமான கேரக்டர் உள்ள படங்களில் மட்டும் நடிக்கவுள்ளாராம். குழந்தைகள் படம் என்பதாலும், சூர்யா கேட்டுக் கொண்டதாலும் பசங்க 2 படத்தில் நடித்துள்ளார். இதில் அவர் சூர்யாவின் மனைவியாகவும், ஆசிரியையாகவும் நடித்துள்ளார்.

இந்தப் படம் வருகிற டிசம்பர் 24ம் தேதி வெளிவருகிறது. இந்த நிலையில் அவர் இந்தி ரீமேக் படமொன்றில் நடிக்க இருக்கிறார். இந்தியில் வெளியாகி பல விருதுகளை வென்ற நில் பட்டே சனட்டா என்ற படம் தமிழில் ரீமேக்காக இருக்கிறது.

இது அம்மாவுக்கும் மகளுக்குமான பாசப்போராட்டத்தை சொல்லும் படம். இதில் நடிகை அமலாபால், அம்மா கேரக்டரில் நடிக்கிறார், அவரது மகளாக புதுமுகம் ஒருவர் நடிக்க உள்ளார்.
மேலும் வாசிக்க…
2015 Thediko.com