தனுஷ் நடிப்பில் வெளியான படம் இதில் பாடகரான விஜய் யேசுதாஸ் இப்படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்திருந்தார். இதில் விஜய் யேசுதாசின் நடிப்பு அனைவராலும் பேசப்பட்டது. இந்த படத்தை பாலாஜி மோகன் இயக்கியிருந்தார்.
தற்போது விஜய் யேசுதாசை தொடர்ந்து பாடகர் கிரிஷும் போலீஸ் வேடத்தில் நடிக்கிறார். சூர்யா நடிப்பில் ஹரி இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் எஸ்3 படத்தில் கிரிஷும் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். சூர்யா மற்றும் கிரிஷுடன் இணைந்து இந்த படத்தில் சூரி, சாம்ஸ், ரோபோ சங்கர் ஆகியோர் போலீஸ் வேடத்தில் நடிக்கிறார்கள்.
சிங்கம்-1, சிங்கம்-2 போல படத்திலும் சூர்யா போலீஸ் அதிகாரியாக வருகிறார். சர்வதேச குற்றவாளிகளை தேடி கண்டுபிடிக்கும் வேடத்தில் நடிக்கிறார். சூர்யாவுக்கு உதவும் சி.ஐ.டி.யாக சுருதிஹாசன் நடிக்கிறார்.
முதல்கட்டப் படப்பிடிப்பை விசாகப்பட்டினத்தில் தொடங்கி உள்ளார்கள். தூத்துக்குடி பகுதியிலும் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார்.
Tags:
Cinema
,
singam3
,
Surya
,
சினிமா
,
போலீஸ் வேடத்தில் நடிக்கும் பாடகர் கிரிஷ்