தமிழ் சினிமாவில் கடந்த சில நாட்களாக கபாலிக்கு அடுத்தபடியாக பேசப்பட்ட விஷயம் விஜய்-அமலாபால் விவாகரத்து.
இருவரும் கடந்த 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு பிறகு நடிக்கமாட்டார் என கூறப்பட்ட நிலையில் மீண்டும் நடிப்பது தான் விவாகரத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
ஆனால் அமலாபாலுக்கு நெருக்கமானவர்கள், விஜய்க்கும்-அமலாபாலுக்கும் இடையில் எந்த பிரச்சனையும் இல்லையாம். அமலாபால் பற்றி வந்த கிசுகிசுக்களுக்கு கூட ஓரங்கட்டி அமலாபாலுக்கு விஜய் ஆதரவாக இருந்தாராம். விஜய்யின் பெற்றோர் கொடுக்கும் நெருக்கடியால் தான் விஜய் வேறு வழியில்லாமல் விவாகரத்துக்கு சம்மதித்தாக கூறுகின்றனர்.
Tags:
Cinema
,
அமலாபால்
,
சினிமா
,
பெற்றோர்
,
விவாகரத்து
,
விஜய்