இயக்குநர் விஜய் - நடிகை அமலாபால் இருவரும் கடந்த 2014-ம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்டார்கள். 2 ஆண்டுகள் ஆன நிலையில், சமீபத்தில் இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் விரைவில் விவாகரத்து செய்ய உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. அமலா பால் திருமணத்துக்குப் பிறகு தொடர்ந்து சினிமாவில் நடித்துவருவதால், இதுவிஷயமாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக கூறப்பட்டது.
அமலாபாலை விவகாரத்து செய்வது குறித்து இயக்குனர் விஜய்யும், அவரது தந்தை ஏ.எல்.அழகப்பனும் உறுதியாக கூறியிருந்தார்கள். இந்நிலையில், அமலாபால் இன்று சென்னை முதன்மை குடும்ப நல நீதிமன்றத்தில் இயக்குனர் விஜய்யுடன் சமரச விவாகரத்து செய்துதரக் கோரி மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். நீதிபதி தீபிகா முன்னிலையில் விவாகரத்து செய்யப்போவதற்கான விருப்ப மனுவை நேரில் அளித்தார்
இவர்களது மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. அதன்பிறகு, இவர்களது விவகாரத்து குறித்த விஷயங்கள் நீதிமன்றம் வாயிலாக வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில், இயக்குனர் விஜய்-அமலாபால் விவகாரத்து செய்யப்போகும் செய்தி நீதிமன்றம் வரை சென்றிருப்பது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:
Cinema
,
அமலாபால்
,
சினிமா
,
நீதிபதி தீபிகா
,
மனு தாக்கல்
,
விவகாரத்து
,
விஜய்