பழம்பெரும் திரைப்பட இயக்குனர் வியட்நாம் வீடு சுந்தரம் சென்னையில் இன்று காலமானார்.
1970-ம் ஆண்டு வியட்நாம் வீடு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானார் சுந்தரம். தொடர்ந்து இவர் எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் உள்ளிட்ட பல பிரபலங்களுடன் பணியாற்றியுள்ளார். தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் சுந்தரம் உடல்நலக்குறைவு காரணமாக தியாகராய நகரில் உள்ள அவரது வீட்டில் காலமானார். அவருக்கு வயது 72. சுந்தரம், இயக்குனர், நடிகர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகத் திறமை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:
Cinema
,
எம்ஜிஆர்
,
கமல்
,
சிவாஜி
,
சினிமா
,
சுந்தரம்
,
பழம்பெரும் நடிகர்
,
ரஜினி