காபி குடித்துக்கொண்டே நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினி அவர். நட்சத்திர விருது நிகழ்ச்சியில் சொதப்பி வைக்க சேனல் தரப்பு கொட்டியது. இதனால் சேனல் மீது லேசாக கோபத்தில் இருந்தார். பெஸ்ட் தொகுப்பாளினி அவார்ட் வாங்கிய தனக்கே இப்படியா என்று கேட்டார்.
திடீரென அந்த சேனலுக்கு புது தொகுப்பாளினி வரவே, தன்னுடைய முக்கியத்துவத்தை உணர்த்த திடீரென்று நிகழ்ச்சிக்கு பிரேக் விட்டார்.
ஆள் ஆளுக்கு என்ன ஆச்சோ ஏது ஆச்சோ என்று விசாரிக்க… சேனல் தரப்பும் முக்கியத்துவத்தை உணர்த்த விசேச தினங்களில் நிகழ்ச்சியை நடத்த அனுமதி கொடுத்தது. அதையே கெட்டியாக பிடித்துக்கொண்ட தொகுப்பாளினி தற்போது பயப்படாத நிகழ்ச்சி ஒன்றையும் தொகுத்து வழங்குகிறார் கூடவே விளம்பரப்படங்களிலும் நடித்து வருகிறார். காபி தொகுப்பாளினியின் செயல்பாடுகள் இப்போது கணவருக்கு பிடிக்கவில்லையாம்.
இதனால் ஊடலில் இருக்கிறாராம் கணவர். நட்சத்திர சேனல் தொகுப்பாளினிகளுக்கும் குடும்பத்திற்கும் ஏழாம் பொருத்தம்தான் போலிருக்கு. இதற்கு எங்கே போய் பஞ்சாயத்து வைக்கிறது என்று கேட்கின்றனர் அங்கே வேலை செய்பவர்கள்.
Tags:
Cinema
,
ஊடல்
,
கணவர்
,
காபி
,
சினிமா
,
தொகுப்பாளினி
,
நிகழ்ச்சி