முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் - அரசியலில் கண் வைக்கும் விஜய்..!!

11:31 PM |
நடிகர் விஜய்க்கு அரசியல் ஆசை உண்டு. ஏற்கனவே தலைவா என்று ஒரு படம் எடுத்து சிக்கலில் மாட்டினார். அண்ணா ஹசாரேவை சந்தித்தார். அப்புறம் ராகுலை பார்த்தார். மக்கள் இயக்கம்னு தன் ரசிகர் மன்றத்துக்கு பெயர் வைத்தவர்.

ஒரு பெரிய மாநாடு போல ஒரு கூட்டத்தை கூட்டினார்.இப்போ, மக்கள் இயக்கத்தை தூசி தட்டி பழையபடி உற்சாகமாக செயல்படுங்கள் என்று பச்சை கொடி காட்டி உள்ளாராம்.அதுக்கு டீசர் போல தான் கடலூர் மாவட்டத்தில் திருட்டு விசிடி க்கு குரல் கொடுத்ததாராம்.

வரும் உள்ளாட்சி தேர்தலில் தன் ரசிகர்களை போட்டியிட சொல்லி இருக்கிறாராம்.ஆனால், விஜய் பெயரை இயக்கத்தை பற்றி சொல்லாமல் ஸ்லீப்பிங் செல் போல இயங்க சொல்லி இருக்காராம்.

இப்போ, எப்படி துணிச்சல்...எல்லாம்  முதல்வர் ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் இருக்கிறதுதான் என்று சினிமா வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் வாசிக்க…

அமலாபால் - டைரக்டர் விஜய் விவாகரத்து செய்ய முடிவு..!!

11:55 PM |
அமலாபால், கேரளாவை சேர்ந்தவர். கடந்த 2010-ம் ஆண்டில், ‘வீரசேகரன்’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் பட உலகுக்கு அறிமுகமானார். தொடர்ந்து, ‘சிந்து சமவெளி,’ ‘மைனா,’ ‘தெய்வ திருமகள், ‘தலைவா,’ ‘வேலையில்லா பட்டதாரி,’ ‘அம்மா கணக்கு’ உள்பட பல படங்களில் நடித்தார். இப்போது, தனுஷ் ஜோடியாக ‘வட சென்னை’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இவருக்கும், ‘கிரீடம்’ படத்தின் மூலம் டைரக்டராக அறிமுகமாகி, ‘மதராச பட்டினம்,’ ‘தலைவா,’ ‘தாண்டவம்,’ ‘சைவம்,’ ‘இது என்ன மாயம்’ உள்பட பல படங்களை டைரக்டு செய்துள்ள விஜய்க்கும் சில வருடங்களுக்கு முன் காதல் மலர்ந்தது. விஜய் டைரக்டு செய்த ‘தலைவா,’ ‘தெய்வ திருமகள்’ ஆகிய படங்களில் அமலாபால் கதாநாயகியாக நடித்தார். அப்போது இரண்டு பேருக்கும் இடையே புரிதல் ஏற்பட்டு, அது காதலாக மாறியது. இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்பினார்கள்.

கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் 7-ந் தேதி, கேரள மாநிலம் கொச்சியில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. ஜூன் 12-ந் தேதி, சென்னையில் திருமணம் நடந்தது. திருமணத்துக்குப்பின் அமலாபால், கணவருடன் சென்னையில் குடியேறினார். சென்னை அடையார் போட் கிளப்பில் உள்ள ஒரு பங்களாவில் இருவரும் தனிக்குடித்தனம் நடத்தினார்கள்.

அமலாபால் தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்தார். அவர் நடிப்பதை டைரக்டர் விஜய்யும், அவருடைய குடும்பத்தினரும் விரும்பவில்லை. கணவர் மற்றும் அவர் குடும்பத்தினர் விருப்பத்தை மீறி, அமலாபால் புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமானார். இது, விஜய்-அமலாபால் இடையே கருத்து வேறுபாடை ஏற்படுத்தியது. இரண்டு பேரும் பிரிவது என்று முடிவு செய்தார்கள்.

அதன்படி, அமலாபால், டைரக்டர் விஜய் இருவரும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் சுமுகமாக பேச்சுவார்த்தை நடத்தி, பிரிந்தார்கள். டைரக்டர் விஜய் தனது பெற்றோர்களுடன் வசிக்கிறார். அமலாபால், சென்னையில் தனியாக வசிக்கிறார்.

இரண்டு பேரும் விவாகரத்து செய்து கொள்வது என்ற முடிவுக்கு வந்து இருக்கிறார்கள். இந்த விவகாரம், தமிழ்-மலையாள பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும் வாசிக்க…

விஜய்-அமலா பால் கருத்து வேறுபாட்டால் விவாகரத்து..!!

10:41 PM |
‘தலைவா’, ‘தெய்வத்திருமகள்’ படங்களில் விஜய் இயக்கத்தில் ஹீரோயினாக நடித்தார் அமலா பால். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. இளம் நடிகர்களுடன் நடித்து வந்த அமலாபால் அப்போதுதான் நடிகர் விஜய், விக்ரம் போன்றவர்களுடன் நடிக்கத் தொடங்கினார்.

முன்னணி நடிகைகள் பட்டியலில் இடம் பிடிக்கும் முன்னரே இயக்குனர் விஜய், அமலா பால் காதல் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகு அமலா பால் தொடர்ந்து நடிப்பாரா? என்ற கேள்வி எழுந்தது. சுமார் 1 வருடம் புதிய படங்கள் ஒப்புக்கொள்ளாமல் இல்லறத்தில் கவனம் செலுத்தினார். பிறகு மீண்டும் நடிக்கத் தொடங்கினார்.

சூர்யாவுடன் ‘பசங்க 2’ படத்தில் நடித்தவர் தனுஷ் தயாரிப்பில் ‘அம்மா கணக்கு’ படத்தில் நடித்தார். அமலாபால் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கியதையடுத்து விஜய்யுடன் அவருக்கு கருத்துவேறுபாடு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

திருமணத்துக்கு பிறகு அடிக்கடி இருவரும் பொது இடங்களில் ஜோடியாக சுற்றித் திரிந்ததுடன் அப்படங்களை இணைய தளத்தில் வெளியிட்டு வந்தனர். கடந்த சில மாதங்களாக பொது இடங்களில் ஜோடியாக வருவதை தவிர்த்து வருகின்றனர்.

 தவிர அமலாபால், சுமார் 2 வருடம் படமாக்க திட்டமிடப்பட்டிருக்கும் ‘வட சென்னை’ படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். இது விஜய்யுடன் அவருக்கு ஏற்பட்டுள்ள கருத்துவேறுபாட்டை காட்டுவதாக கோலிவுட்டில் பேச்சு எழுந்துள்ளது. இதுபற்றி கருத்து எதுவும் சொல்லாமல் விஜய், அமலாபால் இருவரும் மவுனம் காத்து வருகின்றனர்.
மேலும் வாசிக்க…

விஜய் என்றால் உத்வேகம் – அமலாபால் புகழாரம்..!!

12:27 AM |
நடிகை அமலாபால் விஜய்யுடன் தலைவா படத்திலும் மற்றும் சில விளம்பர படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டியில் விஜய் குறித்து பேசிய அவர், விஜய் என்றால் இன்ஸ்பிரேஷன் என கூறியுள்ளார்.

மேலும் தனுஷ் குறித்து ஒருவார்த்தையில் பதிலளித்த அமலாபால், அவர் ஒரு பன்முகத் திறமை கொண்டவர் என பாராட்டியுள்ளார்.

தனுஷ் தயாரிப்பில் இவர் நடித்துள்ள அம்மா கணக்கு படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.
மேலும் வாசிக்க…

தலைவா படத்தில் விஜய் செய்த தவறு வீடியோ இணைப்பு..!!

7:05 PM |
மேலும் வாசிக்க…
2015 Thediko.com