விஜய், சமந்தா, ராதிகா, எமி, மீனாவின் மகள் நைனிகா, இயக்குனர் மகேந்திரன் போன்றவர்கள் நடித்து வெளியான “தெறி” திரைப்படம் குடும்ப உறவுகள் மற்றும் அதன் உணர்வுகள் சார்ந்த பிணைப்புடன் கலந்த கதையம்சம் கொண்டுள்ளதாக எடுக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக “தெறி” படத்தில் பிள்ளை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு, கணவன் – மனைவி, அப்பா – மகள் இடையேயான உறவுகள் சார்ந்து ஆழமாக திரையாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதிலிருந்து அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டிய உறவுகள் சார்ந்த விஷயங்கள் குறித்து இனிக் காண்போம்…
பெண் வீடு உறவுகளையும் நேசித்தல்
பெண் பார்க்கும் காட்சியில் விஜய் கூறும் விஷயம் இது, தனக்கு உடன் பிறந்தவர்கள் யாரும் இல்லை. எனவே, சமந்தாவின் அத்தை மகளான தங்கையாக பாவித்து பாதுகாப்பேன் என கூறியிருப்பார். உன் உறவுகள், என் உறவுகள் என்பதை தவிர்த்து அனைவரும் நமது உறவுகள் என எண்ணுவது உறவின் வலுவை அதிகரிக்கும்.
இரண்டாம் தாய்
சமந்தா விஜயிடம் நான் உனக்கு எப்படியான மனைவி என்று கேட்கும் போது விஜய் இரண்டாம் தாய் என உருக்கமாக பதிலளிப்பார். ஆம், தாய்க்கு பின் முழுமையாக ஓர் ஆணை நேசிக்கும், அன்பூட்டும், அரவணைக்கும் பெண் மனைவி தான். யார் ஒருவர் தனது மனைவியை இரண்டாம் தாயாக மதிக்கிறார்களோ அவர்களது வாழ்க்கையில் அன்பும், பரிவும் என்றும் நிலைத்திருக்கும்.
மாமியார் மருமகள்
பெண் பார்க்கும் காட்சியில் ராதிகா சமந்தாவிடம் என்னால் விஜயை பிரிந்து இருக்க முடியாது எனவே, தன்னையும் பிடித்திருந்தால் திருமணதிற்கு ஒப்புக்கொள் என கூறுவார். அதற்கு சமந்தா எனக்கு பிடித்தமான நபருக்கு (விஜய்) பிடித்த நபரை (அம்மா- ராதிகா) நான் எப்படி வெறுக்க முடியும் என கூறுவார்.
மாமியார் மருமகள்
பெரும்பாலும் சீரியல்களில் காண்பிப்பது போன்ற மாமியார், மருமகள் உறவுகள் அணைத்து வீடுகளிலும் இருப்பதில்லை. ஓர் வீட்டில் மாமியாரும், மருமகளும், அம்மா, மகளாக உறவாடும் போது அந்த வீடு சொர்கமாக மாறிவிடும்.
50:50
சமந்தா போலிஸ் வேலையே விடுக்க கூறும் போது விஜய், உன்னையும் விட முடியாது, இந்த வேலையையும் விட முடியாது என கூறுவார். கணவனாக இருக்கும் ஆண்களுக்கு குடும்பமும், வேலையும் இரு கண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டில் எந்த ஒன்றும், மற்றொன்றை பாதித்துவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
வளர்ப்பு
எந்த ஒரு குழந்தையும் நல்லவர் ஆவதும், தீயவர் ஆவதும் பெற்றோர் வளர்ப்பினில் தான். இது தான் இப்படத்தின் கரு. எனவே, உங்கள் குழந்தையை நல்ல படியாக, கண்ணியமானவராக வளர்க்க வேண்டியது உங்கள் கடமை.
தைரியம் ஊட்டுதல்
ஒவ்வொரு குழந்தையின் குணாதிசயங்களும் அவர்களது பெற்றோரிடம் இருந்தும், அவர்கள் கற்பிக்கும் விஷயங்களில் இருந்தும் தான் உண்டாகிறது. எனவே, இப்படத்தில் விஜய் அப்பாவாக தன் குழந்தைக்கு தைரியம் ஊட்டி வளர்ப்பது போல நீங்களும் வளர்க்க வேண்டியது உங்கள் கடமை.
ரோல் மாடல்
ஒவ்வொரு குழந்தையின் முதல் ரோல் மாடல் அவர்களது அப்பா தான். எனவே, உங்கள் குழந்தைக்கு என்ன வேண்டும், எது வேண்டாம் என்பதை சரியாக செய்து கொடுத்து நல்ல அப்பாவாக திகழ வேண்டியது உங்களது கடமை.
பெண்மை மதிப்பு
பெண்மை என்பது ஆண்கள் இறையாக மதிக்க வேண்டியதே தவிர இரையாக்கிக் கொள்வதற்கு அல்ல.
எளிமையான வாழ்க்கை
சமந்தா விஜயிடம் எளிமையான வாழ்க்கை வாழ விரும்புவார். ஆடம்பரமான வாழ்க்கையை விட, எளிமையான வாழ்க்கை தான் முழு நிம்மதியை அளிக்கும்.
பழிக்கு பழி
பழிக்கு பழி என்பது என்றும் நல்ல தீர்வளிக்காது. மனிதர்களாகிய நம்முள் மன்னிக்கும் சுபாவமும் இருக்க வேண்டும். மற்றும் தவறு நம்மிடம் என்றால் அதை ஒப்புக்கொள்ளும் சுபாவமும் இருக்க வேண்டும்.
Tags:
Cinema
,
எமி
,
சமந்தா
,
சினிமா
,
தெறி
,
நைனிகா
,
ராதிகா
,
விஜய்