தமிழ் சினிமாவில் இன்று என்ன தான் மாஸ் வசனங்கள் பேசினாலும், ஆரம்ப காலத்தில் நம்ம ஹீரோக்கள் எல்லோரும் ஹீரோயின் பின்னாடி சுற்றினவர்கள் தானே. அதிலும் 90களில் ஹீரோக்கள் பெரும்பாலும் ஹீரோயினை டார்ச்சர் செய்து பின் தன் காதல் வலையில் விழ வைப்பதேயே தான் ஒரே குறிக்கோளாக வைத்திருந்தனர். அப்படிப்பட்ட ஹீரோக்களின் சிறப்பு தொகுப்பு தான் இந்த பகுதி.
ரஜினி
சூப்பர் ஸ்டார் 55வயதிலும் ஸ்ரேயாவிடம் தன் காதலை சொல்லி விரட்டி விரட்டி டார்ச்சர் செய்த நிரந்தர இளைஞன். ரஜினி படங்களில் பெரும்பாலும் காதல் என்பது ஃபுல் மீல்ஸிற்கு ஊறுகாய் மாதிரி தான். ஏனெனில் அதை அவருடைய ரசிகர்கள் விரும்பவே மாட்டார்கள். அவரிடம் ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பது ஆக்ஷன் மட்டுமே. இதனால், காதல் மன்னன் லிஸ்டில் இவருக்கு பெரிய இடம் ஒன்றுமில்லை.
கமல்ஹாசன்
ஜெமினி கனேஷனுக்கு பிறகு காதல் மன்னன் பட்டத்தை தன் வசப்படுத்திக்கொண்டவர் கமல்ஹாசன் தான். தன் 50 வயது தாண்டியும் முழு நீள காதல் படமான மன்மதன் அம்பு படத்தில் நடித்து அசத்தினார். கமல் என்றாலே காதல் தானே, படம் முழுவதும் காதல் நிரம்பி வழியும் இவரின் 80களின் வந்த படங்களில், ஆனால், பெரும்பாலும் யதார்த்தமான காதலாக தான் இருக்கும், கமல் எந்த பெண்கள் பின்னால் சுற்ற மாட்டார், இவரின் அழகில் மயங்கி தான் பெண்கள் இவரை சுற்றுவார்கள் தான், அதனால், தான் இவர் இன்றும் காதல் மன்னனாக இருக்கின்றார்.
அஜித்
ஒரு காலத்தில் இவர் எத்தனை பெரிய காதல் மன்னன் தெரியுமா? என்று கேட்கும் நிலைமை வந்துவிட்டது..ஏனெனில் அந்த அளவிற்கு துப்பாக்கி, தோட்டா, சன் கிளாஸ் என இவர் படங்களில் சமீபத்தில் வந்த என்னை அறிந்தாலை தவிர்த்து காதல் என்ற வார்த்தைக்கு அர்த்தம் கூட தெரியாமால் வாழ்ந்து வருகிறார். மீண்டும் முகவரி, கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன், வாலி அஜித்தை பார்க்க வேண்டும் என்று ரசிகர்கள் நினைத்தாலும், அஜித் மனதில் தற்போதைக்கு இதற்கான படங்களுக்கு இடமில்லை, இதனால், இவர் காதல் மன்னன் படத்தில் நடித்ததோடு சரி, இந்த போட்டியில் இருந்து கி.பியிலேயே விலகிவிட்டார்.
விஜய்
விஜய் படங்கள் என்றாலே காதலுக்கு பஞ்சம் இருக்காது, ஆரம்பம் முதல் சில வருடங்களுக்கு முன் ரிலிஸான காவலன் வரை பல காதல் படங்களில் நடித்தவர். இதன் காரணமாகவே பல பெண்களுக்கு விஜய்யை பிடிக்க ஒரு காரணம். எத்தனை ஆக்ஷன் படம் என்றாலும் விஜய் படங்களில் பலரின் பேவரட் அவரின் துள்ளல் நடனமும், பாடல்களும் தாம், ஆனால், நடனமாட ஒரு காரணம் தேவை, அதற்கு ஹீரோவிற்கு காதல் வரவேண்டும், அதற்காகவே விஜய் படங்களில் காதல் ஒட்டிக்கொண்டே வரும்.
பிரஷாந்த்
எங்கேயோ கேட்ட குரல், அட நம்ம டாப் ஸ்டார் பிரஷாந்த் தாங்க, 90களில் விஜய், அஜித்தை எல்லாம் முந்தி அதிக காதல் செய்வர், காதலுக்காக முதன் முதலாக நாடு விட்டு நாடு, மாநிலம் விட்டு மாநிலம் என சென்றவர், சாக்லேட் பாய் இமேஜில் உலக அழகி முதல் உள்ளூர் அழகி வரை காதலிக்க வைத்தவர். தன் திரைப்பயணத்தில் குறைந்தது 10 வருடமாவது கல்லூரிக்கு சென்று காதல் படித்தவர். இவருக்கு உறுதுணையாக சின்னி ஜெயந்த், சார்லி, விவேக், தாமுவும் சென்று வந்த காலம். இருப்பினும் இவரின் சில தவறான படத்தேர்வால் தற்போது கூகுளில் தேடினால் கூட கிடைக்காத இடத்தில் இருக்கிறார்.
இதேபோல் சூர்யா, தனுஷ், ஜெயம் ரவி, ஆர்யா, சிம்பு என எத்தனை பேர் வந்தாலும், எத்தனை காதல் படங்கள் தந்தாலும் தமிழ் சினிமாவில் இன்றும் காதல் மன்னனாக விழங்குவது வேறு யார்? என்றும்
உலக நாயகன் தான்.
Tags:
Cinema
,
அஜித்
,
கமல்ஹாசன்
,
சினிமா
,
சூர்யா
,
தனுஷ்
,
ரஜினி
,
விஜய்
,
ஜெயம் ரவி