என்னை அறிந்தால் படத்தை தொடர்ந்து இயக்குனர் கெளதம் மேனன் இயக்கி வரும் அச்சம் என்பது மடமையடா படம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. சிம்பு - மஞ்சிமா மோகன் உள்ளிட்டோர் நடித்து வரும் இப்படத்திற்கு இசை ஏ.ஆர்.ரகுமான்.
இப்படத்தை தொடர்ந்து கவுதம் கவுதம் மேனன் தனுஷை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கப்போவதாக செய்திகள் வெளிவந்தது. தற்போது இப்படத்திற்கு தலைப்பு உறுதியாகியுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு "என்மேல் பாயும் தோட்டா" என்று பெயர் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக கௌதம் மேனன் அஜித்திடன் "என்னை நோக்கி பாயும் தோட்டா" என ஒரு கதையை கூறினார். பின் அந்த படம் ட்ராப் ஆக பின் என்னை அறிந்தாலாக மாறியது. தற்போது மீண்டும் அந்த கதையை தனுஷை ஹீரோவாக வைத்து இயக்க கௌதம் மேனன் முடிவு செய்துள்ளாராம்.
ரொமான்ஸ் கலந்த காதல் படமாக உருவாகவுள்ள இப்படத்தை குறுகிய நாட்களில் முடிக்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, வருகிற மார்ச் மாதத்தில் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:
Cinema
,
அஜித்
,
என்னை அறிந்தால்
,
ஏ.ஆர்.ரகுமான்
,
சிம்பு
,
சினிமா
,
தனுஷ்