பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான் நேற்று டெல்லியில் நிருபர் களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள், ’ரசிகர்கள் மூலம் உங்களுக்கு ஏற்பட்ட மறக்க முடியாத அனுபவங்களை சொல்லுங்கள்’ என்று கேட்டார். அதற்கு நடிகர் ஷாருக்கான் கூறியதாவது:-
எனது ரசிகர்கள் மிகவும் கட்டுப்பாடானவர்கள். மிகவும் தன்மையுடன் நடந்து கொள்வார்கள். என் மீது அளவு கடந்த பாசம் வைத்துள்ளனர். இதை நான் பல தடவை அனுபவித்துள் ளேன்.ஒரு நாள் இரவு என் வீட்டுக்குள் வாலிபர் ஒருவர் எப்படியோ நுழைந்து விட்டார். அவர் நேராக என் நீச்சல் குளத்தில் இறங்கி ஆனந்தமாக குளிக்க ஆரம்பித்து விட்டார். செக்யூ ரிட்டி வந்து அவரை பிடித்து விசாரித்தார்.
சத்தம் கேட்டு நான் எழுந்து வந்தேன். அப்போது அந்த ரசிகர், 'எனக்கு எதுவும் வேண்டாம். நீங்கள் குளிக்கும் நீச்சல் குளத்தில் குளிக்க வேண்டும் என்று ஆசையாக இருந்தது. அதுதான் இங்கு வந்து குளித்தேன்' என்றார்.அவரை நான் கட்டி அணைத்துக் கொண்டேன். அவர் என்னிடம் ஆட்டோ கிராப் கேட்கவில்லை. சேர்ந்து நின்று செல்பி எடுக்கவில்லை. சரிபோய் வருகிறேன் என்று கூறி விட்டு சென்றார். இன்னமும் அந்த ரசிகரை என்னால் மறக்க இயலவில்லை.
நான் எப்போதுமே என் ரசிகர்களுடன் நெருங்கி பழகும் குணம் கொண்டவன். என் மீது மாறாத அன்பு வைத்து இருப்பவர்களை நான் ஒரு போதும் ஒதுக்கியதே இல்லை.
இவ்வாறு நடிகர் ஷாருக் கான் கூறினார்.
Tags:
Cinema
,
ஆட்டோ கிராப்
,
சினிமா
,
ரசிகர்கள்
,
ஷாருக்கான்