அஜித் மேல் இருந்த கோபத்தை இப்படி காட்டுறாரே விஷால்…இப்படியுமா செய்வார்கள் பரபரப்பில் கோலிவுட்..!!

2:14 AM |
கடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் சூர்யா தலைமையிலான சென்னை சிங்கம்ஸ் அணி கோப்பையை வென்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இந்த போட்டிகள் முடிந்தபின்னர் நடிகர்களுக்காக ஒரு ஓட்டலில் பார்ட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த பார்ட்டியில் விஷால் உள்பட பல நடிகர்கள் கலந்து கொண்டனர். ஆடல் பாடலுடன் செம ஜாலியாக பார்ட்டி நடந்து கொண்டிருந்தது. சூப்பர் ஹிட் ஆன தமிழ்ப்பாடல்கள் ஒலிக்க, நடிகர்கள் ஆட்டம் போட்டபடி இருந்தனர்.

 இந்நிலையில் திடீரென அஜித் நடித்த என்னை அறிந்தால்’ படத்தின் ‘அதாரு அதாரு உதாரு உதாரு’ என்ற பாடல் ஒலிக்க உடனே விஷால் அந்த பாடலை நிறுத்தும்படி கேட்டுக்கொண்டாராம்.

நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தி பொதுமக்களிடம் இருந்து பணம் வசூல் செய்வதில் தனக்கு உடன்பாடு இல்லை என அஜித் கூறியதே விஷாலின் இந்த கோபத்திற்கு காரணமாக இருக்கும் என கூறப்படுகிறது.

மேலும் வாசிக்க…

அஜித் சாரால் தான் இப்படியெல்லாம் நடக்கின்றது- பேபி அனிகா பேட்டி..!!

10:22 PM |
என்னை அறிந்தால், மாயா போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் அனிகா. இவர் மலையாளத்தில் நயன்தாரவின் மகளாக பாஸ்கர் தி ராஸ்கர் படத்திலும் நடித்திருந்தார்.

சமீபத்தில் வெளிவந்த மிருதன் படத்தில் கூட இவருடைய நடிப்பு அனைவராலும் பாரட்டப்பட்டது. இந்த சுட்டி ஒரு பேட்டியில் ‘நான் எங்கு சென்றாலும் என்னை எல்லோரும் தல பொண்ணு எப்படி தான் கூப்பிடுகிறார்கள்.

என்னுடன் போட்டோ எடுத்துக்கொள்கிறார்கள், இதெல்லாம் அஜித் சாரால் தான்’ என மகிழ்ச்சியுடன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
மேலும் வாசிக்க…

விருதுகளை அள்ளிய அஜித் படங்கள்- விஜய் படத்துக்கு ஒரு விருதுகூட இல்ல..!!

10:39 PM |
தமிழ் சினிமா கலைஞர்களை பெருமைப்படுத்தும் விதமாக வருடா தோறும் எடிசன் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றது. 9வது வருடமாக நேற்று சென்னையில் எடிசன் விருதுகள் நடந்து முடிந்தது.

இதில் என்னை அறிந்தால், வேதாளம் சேர்த்து அஜித் படங்களுக்கு மட்டும் 4 விருதுகள் கிடைத்தது. இதோ அதன் விவரங்கள்


  1. சிறந்த பின்னணி இசை- அனிருத்(வேதாளம்)
  2. சிறந்த எடிட்டர்- ரூபன்(வேதாளம்)
  3. சிறந்த நடன அமைப்பாளார்- சதீஸ்(அதாரு அதாரு)
  4. சிறந்த வில்லன்- அருண் விஜய்(என்னை அறிந்தால்)
  5. சிறந்த வளர்ந்து வரும் நடிகை- கீர்த்தி சுரேஷ்
  6. சிறந்த மாஸ் ஹீரோ- தனுஷ்(மாரி)
  7. சிறந்த நடிகர்- ஜெயம் ரவி(தனி ஒருவன்)
  8. சிறந்த பொழுதுப்போக்கு நடிகர்- சிவகார்த்திகேயன்(காக்கிசட்டை)
  9. சிறந்த நகைச்சுவையாளர்- சதீஸ்(தங்கமகன்)
  10. சிறந்த புதுமுக இயக்குனர்-பிரம்மா(குற்றம் கடிதல்)
  11. சிறந்த குணச்சித்திர கதாபாத்திரம்-தம்பி ராமையா(தனி ஒருவன்)
  12. மனிதநேயம் விருது- லாரன்ஸ்
  13. சிறந்த குத்து பாடல்- வேல்முருகன்(கொம்பன்)
  14. சிறந்த பாடலாசிரியர்- மதன் கார்க்கி(பூக்களே சற்று ஓய்வெடுங்கள்)
  15. சிறந்த புதுமுக இசையமைப்பாளர்- ஹிப் ஹாப் ஆதி(தனி ஒருவன்)
  16. பேவரட் சாங்- டங்காமாரி(அனேகன்)
  17. சிறந்த புதுமுக நடிகர்-ஜி.வி.பிரகாஷ்
  18. சிறந்த இயக்குனர்- மோகன் ராஜா(தனி ஒருவன்)
மேலும் வாசிக்க…

தல அஜித் நடிக்க இருந்த கதையில் தனுஷ்..!!

12:33 AM |
என்னை அறிந்தால் படத்தை தொடர்ந்து இயக்குனர் கெளதம் மேனன் இயக்கி வரும் அச்சம் என்பது மடமையடா படம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. சிம்பு - மஞ்சிமா மோகன் உள்ளிட்டோர் நடித்து வரும் இப்படத்திற்கு இசை ஏ.ஆர்.ரகுமான்.

இப்படத்தை தொடர்ந்து கவுதம் கவுதம் மேனன் தனுஷை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கப்போவதாக செய்திகள் வெளிவந்தது. தற்போது இப்படத்திற்கு தலைப்பு உறுதியாகியுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு "என்மேல் பாயும் தோட்டா" என்று பெயர் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக கௌதம் மேனன் அஜித்திடன் "என்னை நோக்கி பாயும் தோட்டா" என ஒரு கதையை கூறினார். பின் அந்த படம் ட்ராப் ஆக பின் என்னை அறிந்தாலாக மாறியது. தற்போது மீண்டும் அந்த கதையை தனுஷை ஹீரோவாக வைத்து இயக்க கௌதம் மேனன் முடிவு செய்துள்ளாராம்.

ரொமான்ஸ் கலந்த காதல் படமாக உருவாகவுள்ள இப்படத்தை குறுகிய நாட்களில் முடிக்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, வருகிற மார்ச் மாதத்தில் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் வாசிக்க…

மாஸ் முகமூடியை கழட்டி வைத்த அஜித்- ட்ரண்டிங்கில் தல..!!

1:05 AM |
அஜித் நீண்ட நாட்களாக மாஸ் வகை படங்களை மட்டுமே நடித்து வந்தார். இதிலிருந்து கொஞ்சம் விலகி மாஸ் மட்டுமில்லாமல் கிளாஸ் என இரண்டிலும் இரட்டை சவாரி செய்து ஹிட் அடித்தார் என்னை அறிந்தால் படத்தின் மூலம்.

எப்போதும் இணையும் இந்த கூட்டணி என ஆவலுடன் காத்திருந்த கௌதம்-அஜித்-ஹாரிஸ் இப்படத்தின் மூலம் இணைந்தே இப்படத்திற்கு பெரும் எதிர்ப்பார்ப்பை தூண்டியது.

அஜித் மாஸ் முகமூடியை கழட்டி வைத்து, கதைக்கு தேவையான கதாபாத்திரத்தில் கலக்கியிருந்தார், பல வருட உழைப்பிற்கு பரிசாக அருண் விஜய்யின் திரைப்பயணத்தில் ஒரு மைல் கல்லானது என்னை அறிந்தால்.

எந்த விழா காலம் எல்லாம் சாதரண நாளில் வந்து ரூ 11 கோடி, முதல் நாள் தமிழகத்தில் வசூல் செய்து சாதனை புரிந்தது. ஏன், தற்போது சம்மந்தம் இல்லாமல் என்னை அறிந்தால் பழைய கதையை சொல்கிறீர்கள் என்று நீங்கள் நினைப்பது தெரிகின்றது.

அது, வேறு ஒன்றும் இல்லை என்னை அறிந்தால் படம் வந்து இன்றுடன் 1 வருடம் முடிகின்றது, இதை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் #1YearOfBBYennaiArindhaal என்ற டாக்கை ட்ரண்ட் செய்து வருகின்றனர். Thediko சார்பாக என்னை அறிந்தால் படக்குழுவினர்களுக்கு வாழ்த்துக்கள்.
மேலும் வாசிக்க…

கலக்கப்போவது விஜய் ரசிகர்களா? அஜித் ரசிகர்களா?

12:38 AM |
சமூக வலைத்தளங்களில் எப்போதும் விஜய், அஜித் ரசிகர்கள் மோதிக்கொண்டே தான் இருப்பார்கள். இதில் குறிப்பாக டுவிட்டரில் யார் ட்ரண்ட் செய்வது என்ற மோதல் இருந்து வரும்.

இந்நிலையில் பிப்ரவரி 5ம் தேதி தெறி படத்தின் டீசர் வரவுள்ளது, அன்றைய தினம் தான் அஜித் நடித்த என்னை அறிந்தால் படம் வந்த 1 வருடம் ஆகவுள்ளது.

இதனால், இரு தரப்பினரும் காமன் டிபி, # டாக் என தற்போதே உருவாக்கி விட்டனர். யார் ட்ரண்டிங்கில் மிரட்டப்போவது என பொறுத்திருந்து பார்ப்போம்.
மேலும் வாசிக்க…

நயன்தாரா, த்ரிஷா முதல் சமந்தா வரை ஆர்வம் காட்டும் ஒரு விஷயம்..!!

11:48 PM |
தமிழ் சினிமாவில் தமிழ் பேச தெரிந்த நடிகைகள் மிகவும் குறைவு. அப்படியும் தமிழ் தெரிந்தால் அவர்கள் நடிக்கும் படங்களில் டப்பிங் பேசுவதில்லை.

டப்பிங் பேசும் இரண்டு நாட்களுக்கு வேறு படத்துக்கு கால்ஷீட் கொடுத்து பணம் சம்பாதிக்கலாம் என்ற யோசனை தான் நடிகைகளுக்கு. ஆனால் தற்போது நிலைமை மாறி வருகிறது. த்ரிஷா முதல் நயன்தாரா, சமந்தா வரை முன்னணி நடிகைகள் தங்கள் படங்களில் டப்பிங் பேச ஆரம்பித்துவிட்டனர்,

த்ரிஷா என்னை அறிந்தால் படம் மூலம் டப்பிங் பேச தொடங்கி தற்போது தூங்காவனம் படத்திலும் பேசி இருக்கிறார். நயன்தாரா நானும் ரவுடிதான் படத்தில் சொந்த குரலில் பேசியிருக்கிறார். சமந்தா 10 எண்றதுகுள்ள படத்தில் டப்பிங் பேசியிருக்கிறார்.
மேலும் வாசிக்க…

நடிகர் அருண்விஜய் படுகாயம் :மருத்துவமனையில் அனுமதி..!!

1:11 AM |
வளர்ந்து இளம் நடிகர்களில் ஒருவரான அருண்விஜய், அஜீத்துடன் நடித்த ‘என்னை அறிந்தால்’ சூப்பர் ஹிட் ஆகி அவருக்கு நல்ல பெயரை வாங்கிக்கொடுத்தது என்பதை அனைவரும் அறிவோம்.

இந்நிலையில் ராம்சரண் தேஜாவுக்கு வில்லனாக அருண்விஜய் நடித்த ‘புரூஸ்லீ’ திரைப்படமும் தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸாகி தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் நடிக்கும் ‘சக்ரவியூகா’ என்ற படத்தில் முக்கிய கேரக்டர் ஒன்றில் அருண்விஜய் நடித்து வருகிறார். இது அருண்விஜய் நடிக்கும் முதல் கன்னடப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இந்த படத்திற்கான ஒரு ரிஸ்கான சண்டைக்காட்சியில் டூப் இன்றி அருண்விஜய் நடித்தபோது கண்ணாடித்துகள் அவருடைய முகத்தில் பட்டதால் படுகாயம் அடைந்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது.

முகம், மூக்குப்பகுதி, தாடை ஆகிய பகுதிகளில் அருண்விஜய்க்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவலை அருண்விஜய் தனது சமூக வலைத்தளத்திலும் உறுதிப்படுத்தியுள்ளார். மருத்துவர்கள் அவர் குறைந்தது பத்து நாட்கள் ஓய்வு எடுக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

எங்கேயும் எப்போதும், ‘வலியவன்’ படத்தை இயக்கிய சரவணன் ‘சக்ரவியூகா’ படத்தை இயக்கி வருகிறார்.
மேலும் வாசிக்க…

Top Hot


2015 Thediko.com