சென்னையை வெள்ளம் தாக்கிய போது, தெலுங்கு நடிகர்கள் பலரும் உதவிக்கரம் நீட்டினர். இது போன்ற இயற்கை பேரிடர்களின் போது உதவ நிதி திரட்டுவதற்காக சில கலை நிகழ்ச்சிகளையும் நடத்துவார்கள்.
அதுபோல நடிகை லக்ஷ்மி மஞ்சு ‘மேமு சைதம்’ என்ற டிவி நிகழ்ச்சி நடத்தவுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டு வருகின்றனர். இந்த வார நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ராகுல் ப்ரீத்சிங், ஒரு தெருவோர காய்கறி கடையில் காய் விற்றுள்ளார்.
தெலுங்கு, கன்னடா மற்றும் தமிழ் ஆகிய மொழி படங்களில் நடித்து முன்னணி இடத்தில் இருக்கும் நடிகை காய் விற்றது தெலுங்கு சினிமா வட்டாரத்தில் ஆச்சர்யமாக பார்க்கப்பட்டது.
Tags:
Cinema
,
Prithi Singh
,
சினிமா
,
ராகுல் ப்ரீத்சிங்
,
லக்ஷ்மி மஞ்சு