விஜய் தற்போது தனது 59-வது படமாக தெறி படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்திற்கு பிறகு தனது 60-வது படமாக அழகிய தமிழ்மகன் படத்தை இயக்கிய பரதன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்புகள் ஏப்ரல் மாத இறுதியில் அல்லது மே மாத முதல் வாரத்தில் தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் நடிகை தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.
விஜய்யுடன் துப்பாக்கி ஜில்லா ஆகிய படங்களில் நடித்த காஜல் அகர்வாலையே இப்படத்திலும் ஹீரோயினாக்க பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். ஆனால், கடைசியில் அந்தவாய்ப்பு கீர்த்தி சுரேஷ் வசம் சென்றுள்ளது.
தற்போது விஜய்யின் 60-வது படத்தின் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக அதிகாரப்பூர்வ செய்தி உறுதியாகியுள்ளது. கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ரஜினிமுருகன் படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது.
அதைத் தொடர்ந்து தனுஷுடன் இவர் நடித்து வரும் மிரட்டு படமும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவேதான் கீர்த்தி சுரேஷுக்கு இந்த விஜய் பட வாய்ப்பு கிடைத்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவிருக்கிறார். மதி ஒளிப்பதிவையும், பிரவீன் கே.எல். எடிட்டிங்கையும் செய்யவிருக்கிறார்கள்.
Tags:
Cinema
,
கீர்த்தி சுரேஷ்
,
சினிமா
,
துப்பாக்கி
,
விஜய்
,
விஜய் 60
,
ஜில்லா